புத்திசாலித்தனமான தேடிய‌ந்திரம் ட்ருவர் .

தேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன் புத்திசாலித்தனம் நிச்சயம் கவரக்கூடும்.

முதலில் ட்ருவர் தன்னை மிக அழகாக சுய வர்ண‌னை செய்து கொள்கிறது.இண்ட்நெட்டின் முதல் லைவான தேடியந்திரம் என்ற அதன் வர்ணனையை பார்க்கும் போது கம்பீரமாக தான் இருக்கிறது.லைவ் என்றால் இங்கே உடனடி என்று புரிந்து கொள்ளலாம்.

அதாவது இதோ இப்போது இண்டெர்நெட்டில் இடம்பெறும் பதிவுகளை தேடித்தருவதாக பெருமை பட்டுக்கொள்கிறது.

டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்த துவங்கியவுடனேயே தேடல் உலகில் உடனை தகவல்களை தேடித்த‌ரும் தேடியந்திரங்களும் அறிமுகமாயின.ரியல் டைம் தேடிய‌ந்திரங்கள் என்று இவை அழைத்து கொண்டு கூகுலுக்கே சவால் விட்டன‌.

ரியல் டைம் தேடியந்திரங்களின் ஆர்ப்பாட்டம் இப்போது அடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.

இந்நிலையில் ட்ருவர் இணையத்தில் புதிதாக பதியப்படும் தகவல்களை தேடிததருவதற்கான தேடியந்திரமாக அறிமுகமாகியுள்ளது.

தேடியந்திரங்கள் எப்படியும் புதிய தகவல்களுக்கும் கட்டுரைகளுக்கும் முன்னுரிமை தந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன தான்.ஆனால் புதிய தகவல்களுக்கு என்று மட்டுமே எந்த தேடியந்திரமும் இல்லை அதனால் இந்த உதயம் என்கிறது ட்ருவர்.தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கும் பதிவுகளை தேடித்தருவதே தனது நோக்கம் என்றும் இது பெருமைபட்டு கொள்கிறது.

அட பரவாயில்லையே புதிய கட்டுரைகள் மற்றும் பதிவுகளை மட்டுமே தேடித்தரும் தேடியந்திரம் தேவை என்று தான் நமக்கும் நினைக்க தோன்றும்.

ஆனால் ட்ருவரின் தேடல் உத்தி தான் கொஞ்ச‌ம ஏமாற்றம் அளிக்கிற‌து.பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சம்ர்பிக்கும் பதிவுகளில் இருந்து பொருத்தமான புதிய பதிவுகளை ட்ருவர் தேடித்தருவதாக் சொல்கிறது.

அதாவது பதிவர்கள் தாங்கள் பதிவு எழுதியதுமே அதனை இங்கே சமர்பிக்கலாம்.அந்த பதிவுகளை இணையவாசிகள் மதிப்பிடலாம்.அதனடிப்படையில் அவை தேடல் பட்டியலில் இடம்பெறும்.இது தன் ட்ருவரின் செயல்பாடு.

குறிச்சொற்களை மட்டும் தேடாமல் தேடப்படும் தலைப்புக்கு பொருத்தமான(புதிய)முடிவுகளை தருவதாக ட்ருவர் கூறிக்கொண்டாலும்,அதன் அடிப்படை உத்தி மாமூலான திரட்டிகளின் செயல்பாட்டினை ஒட்டியே இருக்கிறது.

திரட்டிகளில் பதிவுகளை சமர்பிக்க இணையாவாசிகள் வாக்களித்து அதன் த‌ரவரிசையை தீர்மானிக்கின்றனர்.இப்படி சம‌ர்பிக்கும் பதிவுகளில் அடிப்படையில் முடிவுகளை தேடித்தருவதாக ட்ருவர் சொல்கிறது.இது புதுமையா வெறும் புத்திசாலித்தனம் மட்டும் தானா?

தேடியந்திர முகவரி;http://www.droover.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புத்திசாலித்தனமான தேடிய‌ந்திரம் ட்ருவர் .

  1. உங்கள் பதிவுகளை hotlinksin.com இணையதளத்தில் பகிர்ந்திடுங்கள்.

    Reply
  2. Pingback: வியப்பில் ஆழ்த்தும் புதிய தேடியந்திரம். « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *