இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட் தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ளது.
புத்தகம் படிக்க நினைத்தும் அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மெய்யாகவோ பொய்யாகவோ புலம்புகின்றவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் புத்தகத்தின் ஒரு பகுதியை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கிறது இந்த தளம்.
வடிவமைப்பிலே உள்ளடக்கத்திலோ அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறது இந்த தளம்.டெய்லிலிட் போல பெரிய பட்டியலோ விரும்பிய புத்தகத்தை தேர்வு செய்யும் வசதியோ கிடையாது.அதே போல உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை.இமெயில் முகவரியை சமர்பித்தால படிக்க தயாராகிவிடலாம்.ஆனால் இதில் குழுவாக மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்தும் படிக்கலாம்.
நோவா லெட்வின் என்னும் அமெரிக்க வாலிபர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
இமெயிலில் புத்தகம் காத்திருப்பது நல்ல விஷயம் என்கிறார் லெட்வின்.பிடித்த கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளை மெயில் மூலம் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் இந்த சேவையையும் முயன்று பார்க்கலாம்.
இணையதள முகவரி;
லெட்வின் கம்ப்யூட்டர் கில்லாடியாக இருக்க வேண்டும்.காரணம் வென்சர் பீட் அவரை ஹேக்கர் என அறிமுகப்படுத்துகிறது.மனித வலைப்பதிவு எல்லாம் வைத்திருக்கிறார்.யூடியூப்,பேஸ்புக்,டிவிட்டர் என எல்லாவற்றிலும் இருக்கிறார்.ஆனால் அப்படி இருந்தும் அவரது இணையதளம் எளிமையில் அசத்துகிறது.
நோவாலிட்வின் டாட் காம் என்னும் அந்த தளத்திற்கு சென்றால் வளவளவென்றே அல்லது பளபளப்பாகவோ எந்த விவரமும் கிடையாது.
ஒரு விசிட்டிங் போல நடுவே இருக்கும் கட்டத்தில் நான் தான் நோவா ,நான் இதையெல்லாம் செய்கிறேன் என குறிப்பிட்டு அதன் கீழே அவரது பேஸ்புக்,டிவிட்டர்,ஜிமெயில்,யூடியூப்.வலைப்பதிவு என எல்லாவற்றுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறார்.
அவரை நாடி வருபவர்களை இந்த எளிமை நிச்சயம் கவர்ந்துவிடும்.
தனிப்பட்ட இணையதளம் அமைத்து கொள்ள விரும்புகிறவர்கள் இதனை ஒரு பார்வை பார்ப்பது நலம்.
இணையதள முகவரி;http://dailypag.es/

0 Comments on “இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.”
Maharajan
great one dear.
I need Visual Basic 6.0 download link
cybersimman
pls try
http://www.visual-basic-6.com/
Narmi
Interesting, i joined a few after visiting. Thank you.
Narmi
narmatha
ya i accept
Pingback: விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை | Cybersimman's Blog