உணவும்,உறவும் சார்ந்த தளங்களில் அதாவது மதிய உணவு சந்திப்புகள் மூலம் புதிய நட்பையும் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவும் தளங்களில் லஞ்ச் மிக்ஸ் புதிய வரவு.ஆனால் இந்த பிரிவில் இன்னொரு இணையதளம் வெறென்ன என்ற அலுப்பை மீறி தன்னை வித்தியாசப்படுத்தி கொள்ளும் வலுவான தளமாகவே இருக்கிறது.
மதிய உணவுக்கான துறை சார்ந்த புதிய நண்பர்களை பரிந்துரைத்து அவர்களோடு சாப்பாட்டு மேஜையை பகிர்ந்து கொண்டு புதிய பந்தத்தையும் ஏற்படுத்தி தரும் தளங்களில் இருந்து இந்த தளம் மாறுபட்டே இருக்கிறது. இதனை மதிய உணவுக்கான சமூக வலைப்பின்னல் தளம் என்றும் சொல்லலாம்.
அதைவிட உணவுக்கும் உறவுக்குமான பேஸ்புக் என்றால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்,இந்த தளத்தின் தன்மையையும் நெத்தியடியாக புரிய வைக்கும்.
பேஸ்புக்கிலும்,அதனை பின்பற்றி துவக்கப்பட்டுள்ள ஏராளமான வலைப்பின்னல் இணையதளங்களிலும் இருப்பது போல இதிலும் உறுப்பினர்கள் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.அந்த பக்கத்தில் அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப தங்களை வெளிப்படுத்து கொள்ளலாம்.
பெயர் விருப்பு வெறுப்புகள் போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்வதோடு ,மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயங்கள்,வேலையில் பிடித்தவை ,இருப்பிடம்,வாழ்க்கை முறை உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டு வருங்கால நண்பர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.முக்கியமாக உணவு சந்திப்புகள் குறித்த உங்கள் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தலாம்.
கலகலப்பாக பேசிக்கொண்டே சாப்பிட பிடிக்குமா?அல்லது ரசித்து ருசித்து சாப்பிட்டபடி அளவாக பேச விருப்பமா என உணவு சந்திப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு விடலாம்.
உறுப்பினர் பக்கத்தை தயார் செய்தவுடன்,தேடுதல் வேட்டையில் இறங்கலாம்.சக உறுப்பினர் பக்கங்களில் உலா வந்து யாருடன் சேர்ந்து சாபிடலாம் என தீர்ர்மானித்து அவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைத்து காத்திருக்கலாம்.இது இரு வழி பாதை என்பதால் மற்றவர்களும் நமது உறுப்பினர் பக்கத்தை பார்த்து நம்மை மதிய விருந்துக்கு அழைக்கும் வாய்ப்பு உள்ளது.
வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் புதிய நண்பர்களை சந்திப்பதற்காக ,தொழில் முறையில் உதவக்கூடிய நண்பர்களை பெறவோ இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.கொஞ்சம் காவியமயமாகி காதலிக்க கூடிய நண்பர்களை பெறவும் இந்த உணவு சந்திப்புகளை நாடலாம்.
புதிய நண்பர்களை பெற சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றோ புதியவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க முடியவைல்லை என்றோ புலம்பிக்கொண்டிருக்க தேவையில்லை.அதற்காக என்று தான் அந்த அற்புதமான நேரம் இருக்கிறதே என்று தினமும் கிடைக்கும் ஒரு மணிநேர மதிய உணவு நேரத்தை சுட்டிக்காட்டி அநேரத்தில் சேர்ந்து பேசி உண்டு மகிழ்ந்து உறவையும் வளர்த்து கொள்ள உற்சாகம் தருகிறது இந்த தளம்.
ஒரு முழுமையான வலைப்பின்னல் தளத்தில் பார்க்க கூடியது போலவே சக உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பும் வசதி, போன்ரவையும் இருக்கின்றன.
உணவும் பிட்க்கும் உறவும் பிடிக்கும் இரண்டும் இணைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு பொருத்தமான வலைப்பின்னல் தளம் இது.
இணையதள முகவரி;http://www.lunchmix.com/
————-
உணவும் உறவும் சார்ந்த சுவாரஸ்யமான இணையதளங்கள் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகள் எழுதியுள்ளேன்.அவற்றையும் படித்து பாருங்களேன்!
———
http://cybersimman.wordpress.com/2011/06/06/lunc/