உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட வேண்டும்,பசுமை உணர்வு பொங்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம்.
ரத்ததானம் செய்ய வேண்டும்,சைவ உணவுக்கு மாற வேண்டும்,விலங்கு தோல் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கொள்கை சார்ந்த கோஷங்களும் உங்களிடையே இருக்கலாம்.
இப்படி நீங்கள் நம்பும் விஷயங்களை உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு மூலம் வலியுறுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான சுலபமாக வழி காட்டுகிறது காஸ்ரிப்பன் இணையதளம்.
இந்த தளம் நீங்கள் குரல் கொடுக்க விரும்பும் முக்கிய பிரச்சனைகளுக்கான இணைய ரிப்பன்களை வழங்குகிறது.
இணைய ரிப்பன் என்பது குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு அடையாளமாக திகழும் வாசகத்தை இணைதளத்தின் ஒரு மூளையில் ஒரு பட்டை போல இடம்பெற வைப்பது ஆகும்.
இணைய சுதந்திரத்தை பறிக்கும் அமெரிக்காவின் சோபா சட்டத்திற்கு எதிராக இணைய உலகில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்ற போது தணிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலான இணைய ரிப்பனை இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இடம்பெற வைக்கப்பட்டன.
நாம் நம்பும் கொள்கை அல்லது கோட்பாட்டிற்கு சட்டையில் பேட்ஜ் குத்தி தார்மீக ஆதரவு தெரிவிப்பது போல இணைய உலகில் தார்மீக ஆதரவு தெரிவிப்பதற்காக எளிய வழி இணைய பட்டையை ஒட்ட வைப்பது.
சோபா சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்ற போது நானும் தணிக்கைக்கு எதிரானவன் என்று இணைய பட்டை மூலம் பலரும் சொல்ல முடிந்தது இந்த இயக்கத்தின் செல்வாக்கையும் உணர்த்தியது.
இதே போலவே மற்ற முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆதரவு தெரிவிப்பதற்கான வசதியை காஸ் ரிப்பன் இணையதளம் வழங்குகிறது.உலகின் பல்வேறு பிரச்சனைகள் குறித்த இணைய பட்டைகளை இந்த தளம் வழங்குகிறது.
மனித உரிமைகள்,சமூகம்,நீதி,விலங்கு நலம்,விடுமுறை என பலவேறு தலைப்புகளில் அவற்றுக்குறிய இணையபட்டைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து தேவையானதை தேர்வு செயது அதற்கான இணைய நிரலை (கோட்) பெற்று அந்த பட்டையை இணையதளத்தில் தோன்றச்செய்யலாம்.
முக்கிய பிரச்ச்னைகளில் துவங்கி உலகில் அமைதி தவழட்டும் போன்ற நல்லெண்ண கோஷங்களும் இடம் பெற்றுள்ளன.
நீங்கள் நம்பும் விஷயம் குறித்த உங்கள் கருத்தை இணைய பட்டை வாயிலாக தெரிவிக்க வழி செய்யும் இந்த தளம் அடிப்படையில் போர்க்குணம் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உண்மையிலேயே பயனுள்ள தளம் தான்.ஆனால் இதில் உள்ள விஷயங்கள் தவிர இணையவாசிகள் தாங்கள் விரும்பும் வேறு பிரச்சனைகளை சம்ர்பித்து அதற்கான இணைய பட்டையை பெறும் வசதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அதே போல இணையவாசிகள் தங்கள் கோஷங்களையும் சமர்பிக்க வழி செய்யலாம் .
இலங்கை தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ அல்லது இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் விசாரணைக்கு உதரவிட வலியுறுத்தும் கோரிக்க்கை போன்றவற்றை சமர்பிக்கும் வசதி இருந்தால் சிறப்பாக தானே இருக்கும் .
இணையதள முகவரி;http://www.causeribbon.com/