புகைப்படங்கள் மற்றும் இமெயில் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை தரும் கிவிப்ஸ் இணைய சேவையை போல பரிசு பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளோடு குரல் பதிவை இணைத்து அனுப்பும் வசதியை வழங்குகிறது டு சே ஹலோ இணையதளம்.
எதிலும் தனித்துவமான டச் இருக்க வேண்டும் என்பது பிரபலங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மட்டும் தானா பொருந்தும்.தனிநபர்களுக்கும் கூட எதிலும் அவர்களின் தனிப்பட்ட டச் இருந்தால் எந்த பரிமாற்றமும் உயிரோட்டமானதாக இருக்கும்.
உதாரணமாக கைப்பட எழுதப்பட்ட வாழ்த்தை பார்க்கும் போது அதில் அனுப்பியவரின் அன்பை காணலாம்.அதே போல தான் போனில் வாழ்த்து சொல்வதை காட்டிலும் நேரிலேயே சென்று கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு வருவது.
இணையத்தை பொருத்தவரை பலவித அணுகூலங்கள் இருந்தாலும் இந்த தனிப்பட்ட டச்சை காண்பிப்பது கொஞ்சம் கடினம் தான்.
வாழ்த்து அட்டை பரிசு பொருள் போன்றவற்றை இணையத்திலேயே தேர்வு செய்வது சுலபமானது தான்.ஆனால் பரிசளிப்பவரின் தனிப்பட்ட அக்கறையை அவற்றில் பிரதிபலிக்க செய்வது எப்படி?
டு சே ஹலோ தளம் இந்த வசதியை தான் தருகிறது.வாழ்த்து அட்டைகள் மற்றும் இணைய பரிசு பொருட்களுடன் குரல் மூலம் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இணைத்து அனுப்ப இந்த தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் உள்ள பர்சிபொருட்கள் தேர்வு செய்து விட்டு அதனுடன் வாழ்த்தாக சில வார்த்தைகள் பேடி அதன் ஒலி பதிவை இணைத்து அனுப்பலாம்.பரிசை பெறுபவர்களுக்கு நீங்களே பேசி வாழ்த்து சொல்லி பரிசளித்தது போல நெகிழ்ச்சியாக இருக்கும்.
அமெரிக்க இணையதளம் என்பதால் நம்மவர்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை,ஆனால் அடிப்படையில் சுவாரஸ்யமான சேவை.
இணையதள முகவரி;http://www.toysayhello.com/