உங்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் இணையதளம்.

நிகழ்ச்சிகளை நீங்கள் தேடி செல்வதற்கு பதில் நிகழ்ச்சிகள் உங்களை தேடி வந்தால் எப்படி இருக்கும்?யூ பிளான் மீ தளம் இதை தான் அழகாக செய்கிற‌து.

அதாவது எந்த நிகழ்ச்சிகள் உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் இருக்குமோ அந்த நிகழ்ச்சிகளை அந்த தளம் பரிந்துரைக்கிறது.அந்த வகையில் நிகழ்ச்சிகளுக்கான பன்டோரா என்று இந்த தளம் வர்ணிக்கப்படுகிறது.

பன்டோரா பரிந்துரை சேவைகளின் முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை சொன்னால் அதனடிப்படையில் நீங்கள் விரும்பி கேட்ககூடிய பாட‌ல்களை பரிந்துரைப்பதே பன்டோரவின் சிறப்பம்சம்.

இது வியப்பை அளித்தாலும் பன்டோரா இசை ரசனையின் நுட்பங்களை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளக்கூடிய சாப்ட்வேரின் உதவியோடு பிடித்தமான பாடல்களை பரிந்துரைக்கிறது.

பன்டோரா பாணியில் ஒருவரின் ரச‌னை மற்றும் விருப்பங்கள் அடிப்படையில் அவருக்கு பிடிக்ககூடிய விஷயங்களை பரிந்துரைக்கும் சேவைகள் எல்லா துறைகளிலும் உதயமாகி இருக்கின்றன.இப்போது நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதிலும் யூ பிளான் மீ மூலமாக இந்த பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகளை இணைய யுகத்திற்கு ஏற்ப மேம்படுத்தியுள்ள சேவையாக இது அமைந்துள்ளது.ஒருவரது பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள உதவும் தளங்கள் விதவிதமாக இருக்கின்றன.இவற்றின் மூலம் ஒருவர் தனது பகுதியில் நடைபெறும் சுவாரஸ்யமான‌ பயனுள்ள நிகழ்ச்சிகளை எளிதாக கண்டு கொள்ளலாம்.

இன்றைய நிகழ்ச்சிகளை இந்த தளங்கள் விரிவாக பட்டியலிட்டாலும் இவற்றில் இருந்து ஒருவர் தனக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.இந்த தேடலில் விருப்பமில்லாத,தேவையில்லாத நிகழ்ச்சிகளையும் மேய்ந்தாக வேண்டும்.

இதற்கு மாறாக நிகழ்ச்சிகளே உங்களை கண்டுகொள்ள உதவும் சேவையை தான் யூ பிளான் மீ தளம் சாத்தியமாக்குகிறது.

இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உள்ள நிகழ்ச்சிகள் பட்டியலில் உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.இதன் மூலம் உங்களது விருப்பமும் எதிர்பார்ப்பும் என்ன என்பதை இந்த தளம் புரிந்து கொண்டு அடுத்த முறை அத்தகைய நிகழ்ச்சிகள் வரும் போது அவற்றை மட்டும் உங்களுக்கு பரிந்துரைக்கும்.

இலக்கிய ஆர்வம் உள்ளவரின் நண்பர் இலக்கிய கூட்டம் பற்றி கேள்விபட்டால் அவரிடம் அதனை பரிந்துரைப்பார் அல்லவா அதே போல தான் இந்த தளமும் ஒருவருக்கு பிடிக்ககூடிய நிகழ்ச்சிகளை தனது பட்டியலில் இருந்து தேர்வு செய்து பரிந்துரைக்கிற‌து.

பரிந்துரைகள் எந்த அளவுக்கு துல்லியமானதாக இருக்கும் என்பது ஆய்வுக்குறிய விஷய‌ம் என்றாலும் ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும் கருத்தாக்கம் பயனுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த பரிந்துரைகள் துல்லியமானதாக மேலும் சில வழிகள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை நிகழ்ச்சிகள் பரிந்துரைக்க்ப்படும் போது அந்த பரிந்துரையை ஏற்கிறீர்களா அல்லது பயனற்ரது என நிராகரிக்கிறிர்களா என குறிப்பிட வேண்டும்.இந்த தகவல்களின் அடிப்படையில் பயனாளிகளின் ரசனை பற்றிய புரிதலை இந்த தளத்தின் பின்னே உள்ள சாப்ட்வேர் மேலும் கூர்மையாக்கி கொள்ளும்.

அது மட்டும் அல்ல இந்த தளத்துடன் உங்கள் பேஸ்புக் கணக்கை இணைக்கும் பட்சத்தில் பேஸ்புக்கில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ரெஸ்டார்ண்ட் மற்றும் நிகழ்ச்சிகளை குறிப்பிடும் போது அதனையும் கவனத்தில் கொண்டு உங்களுக்கேற்ற நிகழ்ச்சியை இந்த தளம் பரிந்துரைக்கும்.

நிகழ்ச்சி தேர்வுகளை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் அழகாக நாட்காட்டியில் சேமிக்கப்பட்டு விடுகின்றன.எனவே நாட்காட்டியை பார்ப்பதன் மூலமே நிகழ்ச்சிகள் என்று எங்கே இருக்கின்ற‌ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டு,உணவு(ரெஸ்டார்ன்ட்),டிவி நிகழ்ச்சிகள்,இரவு வாழ்க்கை மற்றும் இதர நிகழ்ச்சிகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் நிகச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.ஆம் உங்களுக்கு பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளையும் இந்த தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்க நகரங்களை மையமாக கொண்ட சேவை என்றாலும் கருத்தாக்க அளவில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய தளம் தான்.

தனிநப‌ர்களின் தேவையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொன்டு அதற்கேற்ற தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் சேவைகளுக்கான அழகிய உதாரணம் தானே இந்த தளம்.

இணையதள முக‌வரி;http://www.uplanme.com/#

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *