மளிகை கடைக்கு போகும் போதோ அல்லது கல்யானம் போன்ற விஷேசங்களுக்கு தயாராகும் போது தான் பட்டியல் போட வேண்டும் என்றில்லை.தினசரி வாழ்க்கையிலும் ஒவ்வொரு செயலையுமே திட்டமிட்டு செய்வது நல்லது தான்.அதற்கு முதலில் செய்ய வேண்டிய செயல்களை குறித்து வைத்து பட்டியல் போட்டு கொள்வதே சிறந்த வழி.
தினசரி வாழ்க்கையில் எந்த செயலையுமே சரியாக திட்டமிட்டு செய்வது வெற்றிக்கான வழி மட்டும் அல்ல மனநிம்மதிக்கான சுலபமான மார்கமும் கூட!.
இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் செக்லிஸ்ட் தளத்தை குறித்து வைத்து கொள்ளுங்கள்.உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை இந்த தளத்தை ஒரு முறை பார்வையிடுங்கள் திட்டமிடுதலின் அருமையை புரிந்து கொண்டு விடுவீர்கள்!.
திட்டமிடுதல் என்று வரும் போது செய்ய நினைப்பவற்றையும் செய்து முடிக்க வேண்டியவற்றையும் மறக்காமல் இருக்க குறித்து வைத்து கொள்ள உதவும் இணையதளங்கள் நினைவுக்கு வரலாம்.டூ டு லிஸ்ட் என்று சொல்லப்படும் இந்த வகை தளங்கள் பல இருக்கின்றன.
ஆனால் செக்லிஸ்ட் தளம் கொஞ்சம வித்தியாசமானது.இதில் செய்ய வேண்டிய செயல்களை என எதனையும் குறித்து வைக்க வேண்டியதில்லை.மாறாக இந்த தளத்தில் செய்ய வேண்டிய செயல்களை தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு சேமிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்களேன் அதற்கென சில அடிப்படையான அம்சங்கள் இருக்கின்றன.
அவசர தேவைக்கு என்று குறைந்தது மூன்று மாத செலவுக்கான தொகையை ரொக்கமாக வைத்திருங்கள்.
எளிமையான முறையில் செல்வுகளை குறித்து வையுங்கள்.
சம்பளம் வாங்கியதும் தானாக சேமிப்புக்கு ஒதுக்கி விடுங்கள்.
இப்படி சேமிக்க விரும்புகிறவர்கள் செய்ய வேண்டியவற்றை இந்த தளம் பட்டியலிடுகிறது.
அதே போல கடனில் இருந்து மீள விரும்பினால் ,மாத செலவு அனைத்தையும் குறித்து வையுங்கள்,பட்ஜெட் இது தான் என்று தீர்மானத்து கொள்ளுங்கள்,கடன் அட்டையை தவிர்த்து விட்டு எதையும் ரொக்க பணம் கொடுத்தே வாங்குங்கள்,கடன் அடைக்க ஒரு திட்டம் வைத்து கொள்ளுங்கள் என்பது போன்ற வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதே போலவே வங்கிகளூக்கு செல்லும் போது என்ன செய்ய வேண்டும் கடன் அட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்,புகார்கள் செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்று பல்வேறு பிரிவுகளில் தனிதனி தலைப்புகளில் வழிகாட்டும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
செய்ய வேண்டியவை என்றும் வைத்து கொள்ளலாம்,அல்லது ஒவ்வொரு செயலின் போதும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்றும் வைத்து கொள்ளலாம்.அவற்றை எல்லாம் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.
ஒரு சில எளிமையானதாக தோன்றலாம்.சில எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கலாம்.ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மிகவும் பயனுள்ளவை.ஒரு சில குறிப்புகள் அனுபவம் சார்ந்த நடைமுறை குறிப்புகளாக இருக்கின்றன.உதாரணத்திற்கு வங்கிக்கு தினமும் பணம் போட செல்கிறவர்கள் எனில் தினமும் ஒரே நேரத்தில் ஒரே வழியில் செல்லாமால் அடிக்கடி நேரத்தையும் வழியையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரம் பார்த்து பணத்தை பறித்து செல்லும் ஆசாமிகள் நமக்கு தெரியாமலேயே நம்மை கண்கானித்து கொண்டிருக்கலாம் என்னும் போது இந்த குறிப்பு மிகவும் முக்கியமானது.
பழுது பார்க்கும் வேலை முதல் குழந்தையை தத்தெடுப்பது வரை பல பிரிவுகளீன் கீழ குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.சமூக சார்ந்தவை மற்றும் பசுற்றுசூழல் பாதுகாபு போன்ற்வையும் இடம் பெற்றுள்ளன.
யார் யாருக்கு எதில் ஆர்வமோ அதனை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.குறிப்புகள் பயனுள்ளவை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தோன்றினால் அவற்றை டிக் செய்து அப்படியே அச்சிட்டும் வைத்து கொள்ளலாம்.
நமக்கு தேவையா தலைப்பை தேடிப்பார்க்கு வசதியும் இருக்கிறது.இருப்பினும் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு பிரிவாக ஒவ்வொரு தலைப்பாக படித்து பார்த்தால் ஒவ்வொரு செயலிலும் கவனிக்க வேண்டிய சின்ன சின்ன நுட்பமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
நடைமுறை வாழக்கைக்கு மிகவும் பயனுள்ள தளம் இது.அந்த வகையில் வாழ்க்கை கையேடு என்று கூட சொல்லலாம்.
இணையதள முகவரி;http://checklists.com/

1 Comments on “செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் போடும் இணையதளம்.”
vadivelan
thanks for your informatiion