ஆசிரியர்களை கொண்டாடுவோம்… அழைக்கும் இணையதளம்!

உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது.

இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்திருக்கின்றனர். ஆனால், மாணவனின் பழி வாங்கும் வெறிக்கு உமா மகேஸ்வரி பலியான சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பற்றிய பயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

மாணவர்களை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்னும் தடுமாற்றம் ஆசிரியர்களை ஆட்டிப்படைக்க துவங்கியிருக்கிறது. நல்வழிப்படுத்த கண்டிக்கலாமா அல்லது நமக்கேன் வம்பு என விட்டுவிடலாமா என்றெல்லாம் யோசிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நம்மூர் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலையின் பின்னணியில் அமெரிக்காவில் ஆசிரியர் சமூகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘டீச்சிங் சேனல்’ இணையதளத்தை பார்க்கும்போது பாராட்டக்கூடிய முயற்சியாகவே தோன்றுகிறது.

இத்தகைய இணையதளம் ஒன்று ஆசிரியர்களுக்கு தேவை தான் என்றும் தோன்றுகிறது. பலியான ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஆத்மாவும் கூட இதனை ஆமோதிக்கும்.

‘டீச்சிங் சேனல்’ தளத்தை ஆசிரியர்களுக்கான ஆலோசனை தளம் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாடம் நடத்துவதில் ஒரு முறையும் கல்வி கற்பிப்பதில் அவர்களுக்கு என்று ஒரு பார்வையும் இருக்கும் அல்லவா? அந்த பார்வையும் பாடம் நடத்தும் முறையையும் ஆசிரியர்கள் சக ஆசிரியர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். அழகாக வீடியோ காட்சியாக இதனை பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி பாடம் நடத்தும் முறையை பகிர்ந்து கொள்வதன் மூலமாக ஆசிரியர்கள் அதில் உள்ள குறை நிறை குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். சக ஆசிரியர்கள் இந்த குறிப்புகளை பார்த்து அதிலிருந்து தங்களுக்கு தேவையான குறிப்புகளை பெறுவதோடு தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பாடம் நடத்தும் முறை மட்டும் அல்ல, மாணவர்களை கையாளும் முறை, சண்டித்தனம் செய்யும் மாணவர்களை எப்படி அணுகுவது, தண்டனையை எப்படி பயன்படுத்துவது போன்ற விஷயங்களையும் இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கலாம்.

ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் ஆற்றலை பட்டைத்தீட்டி கொள்ளவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏதாவது பிரச்னை என்றால் சக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது யோசித்து பாருங்கள் நம்மூரிலும் கூட இது போன்ற இணையதளம் இருந்தால் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள தயக்கங்களையும் அச்சங்களையும் தனிப்பட்ட அனுபவங்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் தானே. இந்த கருத்து பரிமாற்றம் ஆசிரியர்களுக்கு சிக்கலான மாணவர்களை கையாள்வதற்கு பயனுள்ள குறிப்புகளை வழங்கக்கூடும்.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சொல்லும் குறிப்புகள் இளம் ஆசிரியர்களின் கண்களை திறந்து விடுவது போல அமையலாம்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி என்பது பணியில் சேருவதோடு முடிந்து விடக்கூடியதா என்ன? மாணவ‌ர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் வழிமுறைகளை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?

அந்த வகையில் பார்த்தால் இந்த தளம் ஆசிரியர்கள் கருத்து பரிமாற்றத்தின் மூலம் தங்களை புதுப்பித்து கொண்டே இருக்க உதவுகிற‌து. பிர‌ச்னை என்று வரும் போது ஆசிரியர்கள் தங்களுக்குள்ளேயே அதனை பகிர்ந்து கொண்டு தீர்வு காணலாம்.ஒரு ஆசிரியர் எதிர் கொண்ட அனுபவமும் அதில் அவர் பெற்ற அனுபவமும் மற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்ட செய்யும் தானே.

அதை தான் இந்தத் தளம் செய்ய முயற்சிக்கிறது.

இது ஆசிரியர்களுக்கான தளம் என்றால் இந்த தளத்தின் சகோதர இணையதளம் ஒன்றும் இருக்கிற‌து.

‘மை ஹீரோ மை டீச்சர்’ என்னும் அந்த தளம் மாணவர்கள் தங்களை பாதித்த ஆசிரியர்களை கொண்டாடி மகிழ வழி செய்கிறது. அதாவது ஒவ்வொருவரும் தாங்கள் பெரிதும் போற்றி ம‌திக்கும் ஆசிரியர்கள் பற்றிய அனுபவத்தை இந்த தளத்தில் வீடியோ வாக்குமூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ முற்றிலும் புதிய பாதையை நோக்கி அறிவு கண்களை திறந்துவிட்ட ஆசிரியர்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் நல்வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு இனி வர உள்ள ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கலாம்.

சமூகத்துக்கே முன்னுதாரணமாக விளங்கும் மகத்தான ஆசிரியர்களை அடையாளம் காண்பதற்கான இருப்பிடமாகவும் இந்த தளம் விள‌ங்குகிற‌து.

ஆசிரியர்களின் அருமையை மாணவர்கள் புரிந்து கொள்ளவும் இந்த தளம் வழி செய்கிற‌து.

இணையதள முகவரிகள்:

https://www.teachingchannel.org/

http://myteachermyhero.com/

————-

யூத்பூல் விகடன் குட் வெப்சைட் பகுதியில் வெளீயானது.நன்றி விகடன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *