‘நூட்சி’யை புதிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.புதிய தேடல் வழி என்று சொல்லலாம்.தேடலுக்கான சுலபமான குறுக்கு வழி!
கூகுல் சார்ந்த பல தேடல் சேவைகளை போலவே ‘நூட்சியும் கூகுல் தேடல் தொழில்நுபத்தையே பயன்படுத்துகிறது.அதாபது கூகுலில் வரும் தேடல் முடிவுகளையே இதுவும் தருகிறது.
கூகுல் தேடல் முடிவுகள் தான் என்றால் நேரடியாக கூகுலிலேயே தேடிக்கொள்ளலாமே ,தனியே நூட்சி எதற்கு என்று கேட்கலாம்.
நூட்சி கூகுலில் தேடித்தருகிறது என்றாலும் இணையவாசிகள் செல்ல விரும்பும் இணையதளத்திற்கு மிக விரைவாக செல்ல உதவுகிறது.
பொருத்தமான வகைச்சொல்லை (டேக்ஸ்)பயன்படுத்துவதன் மூலம் இந்த அற்புதம் சாத்தியமாகிறது.
எந்த தலைப்பில் தேடுகிறோமோ அதனோடு அந்த தலைப்புடன் நெருக்கமான உறவு கொண்ட வகைச்சொல்லையும் சேர்த்து குறிப்பிட்டால் இந்த சேவை நேராக இணையவாசிகள் தேடும் தளத்திற்கே கொண்டு சென்று விடுகிறது.தேடல் பட்டியலில் பொருத்தமான தளத்தை பார்த்து அதில் கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும் என்ற தேவையேயில்லை.
உதாரணத்திற்கு செய்தி தளமான பிபிசி என டைப் செய்து அதனுடன் செய்தி என்னும் வகைச்சொல்லையும் குறிப்பிட்டால் அடுத்த நொடி பிபிசி தளத்தின் செய்தி பக்கம் வந்து நிற்கிறது.
தேடியந்திரத்தின் மூலம் தேவையான தளத்தை கண்டுபிடிப்பது அல்ல அந்த தளத்திற்கே நேராக அழைத்து சென்று விடுகிறது நூட்சி.
வகைச்சொல் பொதுவானதாக இருந்தால் தேடல் முடிவுகளில் பொருத்தமான தளம் அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது.
இப்படி இணையதளங்களுக்கு குறுக்கு வழியில் நேராக அழைத்து செல்வதோடு இணையத்தின் மிக பிரப்லமான கூகுல், பேஸ்புக்,யூடியூப் உள்ளிட்ட தளங்களுக்கான பிரத்யேக வகைச்சொல் சேவைகளையும் இந்த தளம் வழங்குகிறது.
உதாரனத்திற்கு பேஸ்புக் அல்லது டிவிட்டருடன் குறிப்பிட்ட வகைச்சொல்லை பயன்படுத்தினால் தேவைக்கேற்ப நேராக பேஸ்புக் சுவருக்கோ அல்லது டிவிட்டர் பக்கத்திற்கோ நேரக கொண்டு செல்கிறது.
உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் கூடுதல் சேவைகளையும் பயன்படுத்தலாம்.
தேடலில் புரட்சி என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனால் பயனுள்ள சுவாரஸ்யமான சேவை.
தேடியந்திர முகவரி;http://noodzy.com/