விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’
இந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று.
மார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி அவர்.இசையின் மூலம் சிந்தித்தவர் மார்லே.அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஊக்கம் தரக்கூடியது.
இந்த பிரகாசமான எதிர்காலத்தில் கடந்த கால சோகத்தை நீங்கள் மறந்து விடலாம் என்று ஊக்கப்படுத்தியவர் மார்லே.
இதுவும் மார்லேவின் பொன்மொழி தான்.இதே போல மார்லே உதிர்த்த பொன்மொழிகள் அநேகம் உள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனக்கான விதியை தானே தீர்மானித்து கொள்ளூம் உரிமை பெற்றிருக்கிறான் என்னும் முழக்கமும் அவரது பொன்மொழி தான்.
வாழ்ந்து மடிவதற்கானது வாழ்கை என்று கற்பிக்கும் அமைப்பிற்கு எதிரானது எனது இசை!என்று அறிவித்தவர் மார்லே.
இசை போராளியான மார்லே மட்டும் அல்ல இசையை ஒரு வேள்வியாக நினைத்த அவரைப்போன்ற எல்லா மகத்தான பாடகர்களுமே தங்களது சிந்தனைகளை மறக்க முடியாத வாசகங்களாக விட்டுச்சென்றுள்ளனர்.
இப்படி இசை மேதைகளின் பிரபலமான மேற்கோள்களின் இருப்பிடமாக விளங்குகிறது ஜாஸ் கோட்ஸ் இணையதளம்.
மார்லேவின் மொழிகளை இந்த தளத்தில் காண முடியாது என்றாலும் ஜாஸ் இசை வடிவில் சிறந்து விளங்கிய மேதைகளின் பொன்மொழிகளை இந்த தளத்தில் காணலாம்.ஆம் இந்த தளம் ஜாஸ் இசையில் புகழ் பெற்று விளங்கிய பாடகர்களின் மேற்கோள்களை தொகுத்தளிக்கிறது.
அந்த வகையில் ஜாஸ் இசை பிரியர்களுக்கு இந்த தளம் மகிழ்ச்சியை தரலாம்.தங்களுடைய அபிமான ஜாஸ் இசை கலைஞர்களின் சிந்தனை சிதறல்களை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மற்ற இசை பிரியர்களுக்கும் இந்த தளம் மகிழ்ச்சியையே தரக்கூடும்.இசை மேதைகளின் மேற்கோள்கள் எல்ல்லோருக்கும் பொருந்தக்கூடியது தானே.
உதாரனத்திற்கு பிரபல ஜாஸ் இசை கலைஞரான லூயிஸ் ஆம்ஸ்டிராங்கின் மேற்கோளான ‘ஜாஸ் இதயத்திலிருந்து வருகிறடு,ஜாஸ் மூலம் வாழ்லாம்,ஜாஸ் இசையை நேசியுங்கள்’ என்னும் கருத்து எவரையும் கவரக்கூடியது தானே.
அதே போல சார்லி பார்கர் என்னும் பாடகரின்,முதன் முதலில் இசையை கேட்ட போது அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்,துல்லியமானதாக,மக்கள் ரசிக்க கூடியதாக இருக்க வேண்டும் அழகானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என்று சொல்லியதை படிக்கும் போது அவரது இசை கொள்கையும் கோட்பாடும் புரிகிறது அல்லவா?
எனவே ஜாஸ் கலைஞர்கள் பொன்மொழிகள் மட்டுமே அடங்கியது என்ற போதிலும் மேதைகளின் சிந்தனைகளை அறிய விரும்பும் எவரையும் இந்த தளம் கவரும்.இதில் உள்ள பொன்மொழிகள் ஊக்கத்தையும் தரும்,வாழ்க்கையை பற்றிய புதிய ஒளிக்கீற்றையும் மின்னச்செய்யும்.
‘இசை தினசரி வாக்கையின் அழுக்குகளை கழுவிச்செல்கிறது’என்னும் பாடகர் ஆர்ட் பேக்கேவின் கருத்து இதற்கு உதாரணம் தானே.
‘எப்போதுமே முன்னோக்கி பாருங்கள்,ஒரு போதும் பின்னோக்கி பார்க்காதீர்கள்’என்னும் பாடகர் மைல்ஸ் டேவிசின் கருத்து இன்னொரு அழகான உதாரணம்.
மிக எளீமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் பிரப்லமான ஜாஸ் படக்ர்களின் பொன்மைகளை படித்து ஊக்கம் பெறலாம்.உங்களூக்கு தெரிந்த மொழிகளை பரிந்துரைக்கும் வசதியும் உள்ளது.
முடிக்கும் முன் மீண்டும் ஒரு மார்லே பொன்மொழி ;’இசை உங்களை தாங்கும் போது எந்த வலியையும் நீங்கள் உணராததே இசையின் தனித்தன்மை’
இணையதள முகவரி;http://jazz-quotes.com/
———–
பொன்மொழி தொடராபான முந்தைய பதிவு;http://cybersimman.wordpress.com/2011/12/21/quote-4/
——–
மேலும் ஒரு பொன்மொழி பதிவு.http://cybersimman.wordpress.com/2011/12/22/quote-5/