பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும் தளங்கள்,சாதாரண கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற உதவும் தளங்கள் என பிடிஎப் சார்ந்த தளங்கள் நீள்கின்றன.
ரொடேட்பிடிஎப்.நெட் தளமும் பிடிஎப் சார்ந்த சேவை வழங்கும் தளம் தான்.தளத்தின் பெயரை கொண்டே இதன் தன்மையை புரிந்து கொன்டு விடலாம்.ஆம் பிடிஎப் கோப்புகளை அப்படியும் இப்படியும் சுற்றுவதற்கு இந்த தளம் உதவுகிறது.
அதாவது பிடிஎப் கோப்புகளை அவை இருக்கும் நிலையில் இருந்து தலைகீழாக திருப்பி கொள்ள வேண்டும் என்றால் இந்த தளத்தின் மூலம் அதனை செய்து கொள்ளலாம்.பிடிஎப் கோப்புகளை எதற்காக சுற்ற வேண்டும் அதற்காக ஒரு இணையதளம் தேவையா என்று அலசியமாக கேட்க தோன்றலாம்.
ஆனால் சில நேரங்களில் பிடிஎப் கோப்புகளை தவறாக ஸ்கேன் செய்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அதனை நேராக்குவது கடினமாக இருக்கலாம்.இது போன்ற நேரங்களில் அந்த கோப்பை இந்த தளத்தில் சமர்பித்தால் அதனை எந்த கோணத்திற்கு வேண்டுமானால் திருப்பலாம்.இதன் மூலம் தலைகீழாக உள்ள கோப்பை நேராக்கி கொள்ளலாம்.அந்த நிலையிலேயே அதனை சேமித்து கொள்ளலாம்.
இதே போல இணையத்தில் பிடிஎப் கோப்புகளை தேடி பயன்படுத்தும் போதும் சில நேரங்களில் அவற்றை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.குறிப்பாக புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் உள்ள கோப்புகள் என்றால் இந்த தேவை அதிகமாகவே இருக்கும்.
இந்த தளத்தை உருவாக்கிய பிலிப் பெர்னாடு என்னும் பாரிஸ்காரர் ஒரு முறை பிடிஎப் கோப்பை தவறுதலாக ஸ்கேன் செய்து விட்டு அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் தவித்து கொன்டிருந்த போது இது போன்ற சேவைக்கான தேவையை உணர்ந்து இந்த தளத்தை உருவக்கியிருக்கிறார்.
எளிமையான சேவை தான்.ஆனால் பயன் மிக்கது.
இணையதள முகவரி;http://www.rotatepdf.net/
———-
இன்னுமொரு பிடிஎப் சேவை;http://cybersimman.wordpress.com/2010/04/22/pdf-4/