நையாண்டி நண்பர்கள்;ஹிலாரியால் இணைய நட்சத்திரங்களான இளைஞர்கள்.

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் என்ற திருவிளையாடல் தருமியின் புலம்பலை போல,கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர்.அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்தில் வந்திருக்கின்றனர்.இணைய உலகம் முழுவதும் தங்களை பற்றியே பேச வைத்திருக்கின்றனர்.

ஆடம் ஸ்மித்,ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணைய நட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர்.ஆனால் அவர்களின் கிண்டல் நாகரீகமாகவும் அதைவிட நேர்த்தியாக அமைந்திருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.

ஹிலாரி உலகறிந்த பெண்மணி! திருமதி கிளிண்டனாக அறிமுகமான அவர் ஓபாமா அமைச்சரவையில் இடம் பெற்று இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற அமைச்சராக புகழ் பெற்றிருக்கிறார்.

ஹிலாரி பதிதிரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சளக்காமல் பேட்டி கொடுக்கிறார்.எந்த பிரச்ச்னையானாலும் கருத்து தெரிவிக்கிறார்.ஹிலாரி சொல்வதை அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே உற்று கவனிக்கிறது.

இத்தகைய ஹிலாரி தலைவர்களுக்கு அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகளை படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?

அதை தான் ஸ்மித்தும் லேம்பும் செய்தனர்.டம்பலர் வலைப்பதிவில் ஒரு தளத்தை துவக்கி அதல் ஹிலாரி அனுப்பும் எஸ் எம் எஸ் செய்திகளை இடம் பெற வைத்தனர்.அதாவது ஹிலாரி அனுப்புவது போல செய்திகளை இவர்களே உருவாக்கி தளத்தில் இடம் பெற வைத்தனர்.அதுவும் ஹிலாரி கறுப்பு நிற கண்ணாடியோடு காட்சி தரும் (கையில் செல்போனோடு தான்)அசத்தலான புகைப்படத்தை போட்டு அதில் புகைப்பட குறிப்பு போல ஹிலாரியின் செய்திகளை இடம் பெற வைத்தனர்.

உதாரணத்திற்கு ஒரு பதிவில் ஹிலாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா ,ஹே ஹில் ,என்ன செய்கீறிர்கள் என்று கேட்க ஹிலாரியோ கூலாக உலகை இயக்கி கொண்டிருக்கிறேன் என பதில் சொல்வது போல அமைந்திருந்தது.

இதே போல இன்னும் பல தலைவர்களுடனும் பிரபலங்களுடனும் ஹிலாரி குறுஞ்செய்தி வடிவில் உரையாடுவது போல படங்களை உருவாக்கி புதுப்புது பதிவாக வெளியிட்டு வந்தனர்.

கற்பனை தான் என்றாலும் இதில் இருந்த நகைச்சுவை உணர்வும் நேர்த்தியும் படித்தவர்களை கவர்ந்தது.இதனை ரசித்தவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டவர்.அவ்வளவு தான் இணைய உலகம் முழுவதும் ‘டெக்ஸ்ட் பிரம் ஹிலாரி’ என்னும் இந்த தளம் பற்றி தான் பேச்சானாது.

நண்பர்கள் அந்த பதிவுகளை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர்.டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர்.நாளிதழ்களும் பத்திரிகைகளும் இந்த பரபரப்பு பற்றி செய்தி வெளியிட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கின.

நண்பர்கள் ஸ்மித்தும்,லேம்பும் தங்கள் ஐடியா இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை.அவர்களை பொருத்தவரை ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது விளையாட்டாக உருவான எண்ணம் இது.

இருவருமே வாஷிங்டன் நகரை சேர்ந்தவர்கள்.சமீபத்தில் ஒரு நாள் இருவரும் பார் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஸ்மித்,தனது நண்பரிடம் ஹிலாரியின் கருப்பு கண்ணாடி அணிந்த அசத்தலான போசை காண்பித்து ,இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறாயா,கண்ணாடியும் செல்ப்போனுமாக எவ்வளவு கம்பீரமாக கச்சிதமாக இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.நண்பர் லேம்பும் அடஹ்னை ஆமோதிக்க ,அந்த நொடியில் ஹிலாரியை எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப அவைத்தல் என்ன என்று தோன்றியிருக்கிறது.

உடனே டெக்ஸ்ட் பிரம் ஹிலாரி என்னும் பெயரில் வலைப்பதிவு செய்யத்துவங்கி விட்டனர்.அடுத்த ஒரு வார்த்தில் அந்த தளம் சூப்பர் ஹிட்டாகி விட்டது.கற்பனையான செய்திகள் தான் என்றாலும் அவற்றை கண்ணியத்தோடே வெளியிட்டனர்.நகைச்சுவயின் எல்லை தாண்டாமலும் பார்த்து கொண்டனர்.எனவே அந்த பதிவுகள் ரசிக்கும் படியே இருந்தன.

இதனால் இருவரும் இணைய உலகில் புகழ் பெற்றது ஒரு ஆச்சர்யம் என்றால அதைவிட ஆச்சர்யம் ஒன்று அவர்களுக்கு காத்திருந்தது.அவர்கள் தளத்தின் நாயகி ஹிலாரியிடம் இருந்தே இருவருக்கும் அழைப்பு வந்தது.ஆம் யாரை கிண்டல் செய்து குறுஞ்செய்தி வெளியிட்டு கொண்டிருந்தனரே அவரே நண்பர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

நேரில் ஹிலாரியை சந்தித்த போது ஹிலாரி தானும் அந்த தளத்தின் ரசிகர் என்று கூறி நண்பர்களை பிரம்மிப்பில் ஆழத்தி விட்டார்.சில நிமிடங்களே அந்த சந்திப்பு நீடித்தாலும் நண்பர்கள் இருவரும் ஹிலாரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.அதனை பெருமையோடு தங்கள் தளத்தில் வெளியிடவும் செய்தனர்.

ஹிலாரியை நையாண்டி செய்து ஹிலாரியையே சந்திக்கும் அளவுக்கு புகழ் பெற்று விட்ட இந்த இருவரும் இணைய கில்லாடிகள் தான்.ஆனால் ஒரு சின்ன வருத்தம் இருவரும் புதிய பதிவுகள் வெளியிடுவதை நிறுத்தி கொண்டு விட்டனர்.

இந்த புகழே போடும் என நினைத்து விட்டனர் போலும்.ஆனால் இதுவும் கூட புத்திசாலித்தனம் தான்.இனி எப்படி தொடர்வது என தடுமாற்றம் வந்து தரம் குறையும் முன்னே குட்பை சொல்லிவிட்டனர்.ஆனால் அந்த தளம் அப்படியே இருக்கிறது.இப்போதும் பழைய படங்களை பார்க்கலாம்.ரசிக்கலாம்!

இணையதள முகவரி;http://textsfromhillaryclinton.tumblr.com/

——–

யூத்புல் விகடனில் வெளியானது.நன்றி:யூத்புல் விகடன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நையாண்டி நண்பர்கள்;ஹிலாரியால் இணைய நட்சத்திரங்களான இளைஞர்கள்.

  1. அருமையான பதிவு

    வாழ்த்துகள்..

    உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
    DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ் DailyLib

    To get the Vote Button

    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் DailyLib

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *