ஃபுட்லி அடிப்படையில் சமையல் குறிப்புகளுக்கான தேடியந்திரம் என்றாலும் எதிர்பார்க்கும் சமையல்குறிப்புகளை தேடித்தருவதோடு மேலும் சிலவற்றை அது சாத்தியமாக்குகிறது.அதாவது சமையல் குறிப்புகளை அது சமூக மயமாக்குகிறது.
சமூக மயம் என்றால் நண்பர்களின் வலைப்பின்னலுக்குள் பகிர்ந்து கொள்ளும் வசதி என்று புரிந்து கொள்ளலாம்.ஆம் ஃபுட்லி சமையல் குறிப்புகளை பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.அப்படியே நண்பர்களின் விருப்பமான சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.அந்த வகையில் சமியல் குறிப்பு தேடலை அலுப்புக்கு இடமில்லாத சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றித்தருகிறது.
ஃபுட்லியில் சமையல் குறிப்புகளை தேடுவதே கொஞ்சம் சுகமான அனுபவம் தான்.காரணம் சமையல் குறிப்புகளை விருப்பத்திற்கு ஏற்ப தேடிக்கொள்ளலாம்.என்ன வகையான உணவு தேவை என்று குறிப்பிட்டு தேடுவதோடு அந்த உணவு எந்த எந்த பொருட்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட காய்கறி அல்லது உணவு பொருளை தவிர்த்து விட்டு சமைக்க கூடிய உணவுக்கான சமையல் குறிப்புகளை தேடலாம்.
இதை தவிர கொழுப்பு இல்லாத உணவு வகைகளையும் தேடிக்கொள்ளலாம்.
விருப்பமாக சமையல் குறிப்பு கண்ணில் பட்டதும் அதனை பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கில் லைக் செய்வது போல இங்கேயும் சமையல் குறிப்பை பிடிச்சிருக்கு என்று உணர்த்துவதறகான வழி இருக்கிறது.அதற்கான ஐகானை அழுத்தியதும் அந்த சமையல் குறிப்பு நண்பர்களோடு தானாக பகிரப்பட்டு விடும்.சமையல் குறிப்புகளை சேமித்து வைப்பதன் மூலம் நம்மாக பட்டியலையும் தயார் செய்து கொள்ளலாம்.பின்னர் தேவைப்படும் போது தேடி எடுப்பதும் சுலமபாக இருக்கும்.
அதே போல அந்த உணவை சமைக்க விரும்புகிறேன் என்பதையும் ஏற்கனவே சமைத்திருந்தால் அந்த விவரத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆக சமையல் தொடர்பான தேடல்களை சுலபமாக நண்பரக்ளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் பகிர்ந்து கொள்வதையும் பார்க்க முடியும் என்பதால் அவர்கள் மூலமாக புதிய உணவு வகைகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.அப்படியே உணவு மற்றும் சமையல் சார்ந்த உரையாடலிலும் ஈடுபடலாம்.
இந்த பகிர்வு விருந்து போன்ற நிகழ்ச்சிகளின் போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.விருந்துக்கான மெனுவை நண்பர்களோடு விவாதித்து சுப்பராக தயார் செய்யலாமே.
பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் சேவைகளில் புத்தகங்கள் பற்றியும் திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்ட விவாதிக்க வசதி இருக்கிறது.அதே போலவே பெண்கள் இந்த தளம் வழியே சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொண்டு சமையல் கலை பற்றியும் விவாதிக்கலாம்.சமையல் என்றால் பெணகள் மட்டும் தானா என்ன?சமையல் கலையில் ஆர்வம் உள்ள ஆண்களுக்கும் தான் இது பயன்படும்.
இந்த தளத்தில் உறுப்பினராகும் போதே பேஸ்புக் மூலமெ உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் இமெயிலை சமர்பித்தும் உறுப்பினராகலாம்.பேஸ்புக் மூலமாக சேர்ந்தால் நாம் கண்டுபிடிக்கும் சமியல் குறிப்புகள் தானாக பேஸ்புக்கில் வெளியாகி நண்பர்கள் பார்வைக்கு சென்றுவிடும்.
இமெயில் மூலம் உறுப்பினரானால் நாமே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் மட்டும் அல்ல டிவிட்டர்,கூகுல் பிலஸ்,பின்ட்ரெஸ்ட் போன்றவை மூலமும் நண்பர்களோடு பகிரலாம்.
இந்த தளம் மூலமே சமியல் குறிப்புகளை வழங்கும் கலைஞர்களையும் பின்தொடரலாம்.புதிய சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இது சிறந்த வழி.
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்பது போல சமையல் கலையையும் இந்த தளம் நட்போடு சேர்த்து சுவாரஸ்யமாக்குகிறது.என இதில் உள்ளது எல்லாமே மேற்கத்திய உணவு வகைகள் என்பது தான் ஒரே குறை.
இணையதள முகவரி;http://www.foodily.com/
—————–
சமையல் குறிப்பு தேடியந்திரம்.;http://cybersimman.wordpress.com/2011/08/02/food-2/
—————
இமெயிலில் வரும் சமையல் குறிப்புகள்.;http://cybersimman.wordpress.com/2011/07/21/food/
——————–
சமையல் கலைக்கு ஒரு விக்கிபீடியா;http://cybersimman.wordpress.com/2009/11/09/wiki-7/
————–
சமையல் குறிப்பு தேடியந்திரம்;http://cybersimman.wordpress.com/2009/05/19/search-3/

0 Comments on “சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம்.”
LKG (@chinnapiyan)
நன்றி நன்றி
HOTLINKSIN.COM
இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைக்கலாம்.