வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளில் எந்த வண்ணம் பிரபலமாக இருக்கிறது என்பதை இந்த தளம் காட்டுகிறது.அதிலும் இந்த நொடியில் பேஷனின் நிறம் என்னவோ அதை அடையாளம் காட்டுகிறது .
ஐரோப்பாவின் பேஷன் தலைநகரங்கள் என்று சொல்லப்படும் பாரிஸ்,ஆன்ட்வெர்ப்,மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் பேஷனாக இருக்கும் நிறம் என்ன என்பதை இந்த தளம் சுவாரஸ்யமான முறையில் காட்டுகிறது.
இதற்காக என்றே இந்த நகரின் பேஷன் ஹாட் ஸ்பாட்களில் வெப்கேமை வைத்து அதில் பதிவாகும் காட்சிகளில் தோன்றும் மனிதர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் நிறத்தை உணர்ந்து அதன் அடிப்படையில் அதிகமானோர் பயன்படுத்தும் நிறம் எது என்பதை இந்த தளம் சொல்கிறது.காட்சிகள் மாற மாற வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும் அல்லவா?அதற்கேற்பவே இந்த தளமும் குறிப்பிட்ட நிமிடத்தில் பயன்படுத்தப்படும் ஆடையின் நிரத்தை பரிந்துரைக்கிறது.
மிக அழகாக வரைபடம் போல வாரம் முழ்வதும் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களை கட்டம் போட்டு காட்டுகிறது.எனவே இப்போதைய பிரபலமான வண்ணத்தை அறிவதோடு மற்ற நாட்களில் ஆதிக்கம் செலுத்திய வண்ணங்களை தெரிந்து கொள்ளலாம்.
அந்த அந்த வண்னத்திற்கு ஏற்ற ஆடைகளையும் வாங்கலாம்.
தற்போதைய டிசைனில் ஆடைகளை தேர்வு செய்வது போல இதில் பிரபலமாக உள்ள வண்னங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் வண்ணங்களின் வழிகாட்டியாக இந்த தலம் விளங்குகிறது.
சுவாரஸ்யமான இணையதளம் தான்.
இஹே பாணியில் நம்மூர் ரஙநாதன் தெருவிலும் ஒரு வெப்கேமை வைத்து அதில் விழும் காட்சிகளை சாப்ட்வேர் மூலம் அலசினால் இப்போதைய பேஷன் எது என்பதை கூட கண்டு பிடிக்கலாம் இல்லையா?
இணையதள முகவரி;http://www.pimkiecolorforecast.com/