கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட கருத்து கணிப்பு நடத்தலாம்?அதாவது இணைய கருத்து கணிப்பு!
நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நண்பர்களிடம் இருந்து பெற்று அதனடைப்படையில் முடிவுக்கு வரலாம்.இப்படி இணையம் வழியே கருத்து கணிப்பு நடத்துவது எந்த அளவுக்கு சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது என்பதை போல்ஸ்.இயோ சேவையை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
எளிமையாக கருத்து கணிப்பை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் அதை தான் கச்சிதமாக செய்கிறது.
கருத்தறிய விரும்பும் கேள்வி எதுவே அதனை டைப் செய்து விட்டு வரிசையாக அதற்கான பதில்களை டைப் செய்தால் போதும் உங்களுக்கான கருத்து கணிப்பை தயார் செய்து தந்து விடுகிறது இந்த தளம்.அந்த இணப்பை டிவிட்டர் அல்லது பேஸ்புக் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு பதில்களை திரட்டி கருத்து கணிப்பை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அவ்வளவு தான்.இதற்காக உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேன்டும் என்ற தேவை கூட கிடையாது.
எந்த கருத்து கணிப்பை எப்படி நடத்தி கொள்ளலாம் என்பது உங்கள் தேவையையும் ஆர்வத்தையும் பொருத்தது.
இணையம் ஏற்படுத்தி தரும் வசதிகளுக்கு இன்னொரு அழகான உதாரணம் இந்த தளம்.ரயான் கில்பர்ட் என்பவர் இந்த சேவையை உருவாக்கியிருக்கிறார்.
———–
இணையதள முகவரி;http://polls.io/

0 Comments on “நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.”
Pingback: கருத்து கணிப்பு நடத்த உதவும் இணையதளம். « Cybersimman's Blog
Keerthika
எழுத்து.காம் நடத்தும் கருத்து கணிப்பில் கலந்து கொண்டு,உங்கள் கருத்துகளை நீங்கல் பதிவு
செய்யலாம்.http://eluthu.com/poll/