இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன.
சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம்.
ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்படுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவருக்குமே இதில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.
ஆனால் ஒன்று இந்த சேவையை பயன்படுத்துவது கொஞ்சம் பெருமைக்குறியது.காரணம் ரகசிய செய்திகளை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா பின்பற்றும் அதே தொழிநுட்பத்தை தானும் பயன்படுத்துவதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
எனவே நாசா தொழில்நுட்பத்தில் மெயில் அனுப்புவதாக நீங்களும் பெருமிதம் கொள்ளலாம்.
அதே போல மற்ற ரகசிய மெயில் சேவைகளில் இல்லாத கூடுதல் அம்சங்கள் இதில் உள்ளன.உதாரணத்திற்கு ரகசிய மெயிலை நீங்கள் உங்களுக்கே நகல் அனுப்பி கொள்ளலாம்.அந்த் மெயில் படிக்கப்பட்டவுடன் அது வாசிக்கப்பட்டு விட்டது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட அந்த மெயில் எப்போது காணாமல் போக வேண்டும் என்றும் குறிப்பிடலாம்.அந்த நேரத்தில் இமெயில் வாசகங்கள் அழிக்கப்பட்டு விடும்.
மேலும் வழக்கமான மெயிலை போல இணைப்புகளையும் சேர்த்து அனுப்பலாம்.
இதே போலவே கீ வால்ட் தளமும் ரகசிய மெயில் அனுப்ப உதவுகிறது.சென்ட் இன்க் தளம் நாசா தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்றால் இது கிர்டிட் கார்டு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக கையாள பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதாக சொல்கிறது.
ஆனால் இதன் வடிவமைப்பு அளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.தவிர வழக்கமான இமெயிலை நம்பாமல் ஏன் இப்படி பாதுகாப்பாக இமெயிலை அனுப்பி வைக்க வேண்டும் என்னும் கேள்விக்கும் விரிவாக பதில் அளிக்கிறது.
இன்னும் நிறைய ரகசிய இமெயில் தளங்கள் இருக்கின்றன.
இணையதள முகவரி;1.https://www.sendinc.com/
———-
ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.;http://cybersimman.wordpress.com/2012/02/02/email-14/
——-
இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.;http://cybersimman.wordpress.com/2011/08/27/email-12/

0 Comments on “நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!”
தனபாலன்
அறியாத தகவல்கள் ! நன்றி !