புதிய வீடியோ தேடியந்திரம்.

பேஸ்புக்கில் நுழைந்தால் நண்பர்கள் உபயத்தில் புதிய யுடியூப் வீடியோக்கள் வந்து நிற்கின்றன.இமெயிலை திறந்தால் வீடியோக்கள் எட்டிப்பார்க்கின்றன.புதிய வீடியோக்களை பார்த்து ரசிக்க என்றே இணையதளங்களும் இருக்கின்றன.யூடியுப்பில் வெளியாகும் மற்றும் பிரபலமாகும் வீடியோக்களை பட்டியலிட ஒவ்வொரு தளமும் ஒரு பிரத்யேக வழி முறையையும் வைத்திருக்கின்றன.

வீர்ல் தளமும் இப்படி புதிய முறையிலேயே யூடியூப் வீடியோக்களை பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறது.

வீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என வீர்ல் தன்னை அழைத்து கொள்கிறது.அதாவது இணையத்தில் வெளியாகும் புத்தம் புதிய வீடியோக்களை கண்டுபிடித்து தருகிறது.

வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நொடி தோறும் புதிய வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ கடலில் இருந்து புதிய நல் முத்துக்களை அறிமுகம் செய்து கொள்ள வழிகாட்டுதல் தேவை தான்.

அதை தான் வீர்ல் அழகாக செய்கிறது.யூடியுப்பில் வெளியாகும் புதிய வீடியோக்களை முன்னணி வீடியோக்களாக பட்டியலிட்டு முகப்பு பக்கத்தில் பார்வைக்கு வைக்கிறது.அதில் விருப்பமானதை கிளிக் செய்து பார்த்து ரசிக்கலாம்.

எப்படி வலைவாசல்கள் புதிய செய்திகளை திரட்டித்தருகின்றனவோ அதே போல இந்த தளம் புதிய வீடியோக்களை திரட்டித்தருகிறது.

வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்த பின் அதனை டிவிட்டர் அல்லது பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வில் இருந்து தளத்தின் இரண்டாவது சிறப்பம்சம் பிறக்கிறது.ஆம் வீடியோக்கள் எத்தனை பேரால் பகிரப்பட்டுள்ளனவோ அந்த கணக்கின் அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்பட்டு முன்னணி வீடியோக்களாக பட்டியலிடப்படுகின்றன.

வீடியோக்களின் மூளையில் அவை பகிரப்பட்ட எண்ணிக்கை சிறியதாக குறிப்பிடப்படுகிறது.

ஆக புதிய வீடியோக்களை மட்டும் அல்ல பிரபலமாக இருக்கும் வீடியோக்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

இவற்றை தவிர நமக்கு தேவையான தலைப்புகளில் வீடியோக்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

இனையதள முகவரி;http://www.viirl.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புதிய வீடியோ தேடியந்திரம்.

  1. தங்களது பதிவு எனக்கு மிகவும் பய னுள்ளதாக உள்ளது

    Reply
  2. புதிய வீடியோ தேடியந்திரம் திறந்து பார்த்தேன்.அருமையான வழிகாட்டி.

    Reply
    1. cybersimman

  3. நாங்கள் உருவாக்கியுள்ள திரட்டியில் (http://ta.site90.com/) தங்கள் தரமான பதிவுகளை இணைத்து அதிக வாசகர்களை பெறுங்கள்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *