உங்கள் டெஸ்க்டாப்பை தானமாக தருவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கிறது டொனேட் யுவர் டெஸ்க்டாப் இணையதளம்.இதற்கு ஒப்புக்கொண்டால் நீங்கள் தேர்வு செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் சார்பில் நன்கொடை அளிக்கப்படும் என்றும் இந்த தளம் உக்கம் தருகிறது.
டெஸ்க்டாப்பை தருவது என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்புயூட்டரை தூக்கி கொடுத்து விடுவது அல்ல!மாறாக உங்கள் டெஸ்க்டாப்பில் கொஞ்சம் இடம் கொடுப்பது அவ்வளவு தான்.
அதாவது உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த தளத்தில் உள்ள வால்பேப்பர்களை பயன்படுத்த ஒப்புக்கொண்டால் போதுமானது.
இந்த வால்பேப்பர்கள் எல்லாம் வழக்கமான வால்பேப்பர்கள் அல்ல;எல்லாமே வர்த்தக நிறுவங்களின் விளம்பரமாக தோன்றக்கூடிய வால்பேப்பர்கள்.இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் டெஸ்க்டாப்பை அந்த நிறுவங்களின் விளம்பர பலகையாக நீங்கள் தோன்றச்செய்கிறீர்கள்.
இப்படி வர்த்தக நிறுவன விளம்பர பலகையாக உங்கள் டெஸ்க்டாப்பை மாற்றுவதற்கு கட்டணமாக அந்த நிறுவனங்கள் தர முன் வரும் தொகையில் இருந்து 75 சதவீதம் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
டெஸ்க்டாப்பை விளம்பர பலகை போல பயன்படுத்துவது அருமையான யோசனை தான் இல்லையா?
எப்படியும் கப்யூட்டர் வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு வால்பேப்பரை டெஸ்க்டாப் தோற்றமாக பயன்படுத்தப்போகின்றனர்.சில அடிக்கடி வால்பேப்பரை மாற்றும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.இதற்காக அழகான வால்பேப்பர்களை வலைவீசி தேடுபவர்களும் இருக்கின்றனர்.
இந்த தேவையை விளம்பர நோக்கோத்தோடு பயன்படுத்தி கொண்டால் என்ன என்னும் நோக்கத்தோடு ‘டொனேட் யுவர் டெஸ்க்டாப்’ தளம் பல வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவற்றின் வால்பேப்பர்களை இணையவாசிகளுக்கு வழங்குகிறது.
அது மட்டும் அல்லாமல் இதன் மூலம் வரும் வருவாயில் முக்கால் பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறது.இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான தொண்டு நிறுவனத்தையும் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இணையவாசிகள் இதற்கு என்று எதையும் தனியே செய்ய வேண்டியதில்லை.இந்த தளத்தில் இருந்து வால்பேப்பரை பயன்படுத்த முன் வந்தால் போதுமானது.அதன் பிறகு தினம் ஒரு வால்பேப்பரால் உங்கள் டெஸ்க்டாப்பை இந்த தளம் அலங்கரிக்கச்செய்து விடும்.இந்த டெஸ்டாப் கம்ப்யூட்டரின் செய்லபாட்டை எந்த வித்ததிலும் பாதிக்காது என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது.அது மட்டும் அல்லாமல் வால்பேப்பர் ஒற்று வேலை பார்த்து அந்தரங்கமான தகவல்களையும் சேகரிக்காது என்றும் உறுதி அளிக்கிறது.
எனவே உங்கள் டெஸ்க்டாப்பை வால்பேப்பருக்கான பலகையாக தானமாக தர முன் வந்தீர்கள் என்றால் அதன் மூலமே நன்கொடை அளித்த திருப்தியையும் பெறலாம் என்கிறது இந்த தளம்.
நன்கொடை திரட்டும் முயற்சியில் நிச்சயம் இது ஒரு புதுமை தான்.
சும்மா இருக்கும் டெஸ்க்டாப்பை விளம்பர பலகையாக மாற்றி அதன் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு தேவையான நிதியை பெற்றுத்தருவது வரவேற்கத்தக்கது தான்.
இந்த புதுமையான முயற்சி நியுசிலாந்தை அடிப்படையாக கொன்டு செயல்படுகிறது.எனவே இப்போதைக்கு நியூசிலாந்த்தில் உள்ளவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.ஆனால் விரைவில் உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டம் உள்ளதாம்.
உங்களுக்கும் பங்கேற்க விருப்பம் இருந்தால் உங்கள் நாட்டை குறிப்பிட்டு பதி செய்து கொள்ளவும் அழைப்பு விடுக்கிறது இந்த தளம்.
இணையதள முகவரி;http://www.donateyourdesktop.co.nz/