அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் தொடர்பாக உருவாக்கியுள்ள செல்போன் செயலி.

ஆம் ,அகதிகளின் தவிப்பையும் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ‘ஒரு அகதியாக என் வாழ்க்கை’ என்னும் பெயரிலான அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அகதிகள் தொடர்பான விழிப்புண‌ர்வை பரவலாக்கி அவர்களின் பரிதவிப்பையும் துயர நிலையையும் புரிய வைக்க முயல்கிறது இந்த செயலி.

செல்போன் செயலிகளில் பெரும்பாலானவை வீடியோகேம் ரகத்தை சேர்ந்தவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இந்த விளையாட்டுகள் கேளிக்கையும் பொழுதுபோக்கும் தரக்கூடியவை தான்.

ஆனால் கல்வி நோக்கிலும் வீடியோகேமை பயன்படுத்த முடிவது போல செல்போன் செயலி விளையாட்டையும் கூட கல்வி நோக்கில் பயன்படுத்தலாம்.சமூக விழிப்புணர்வு நோக்கிலும் பயன்படுத்தலாம்.

ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகள் விழிப்புணர்வு பிரிவு இதே நோக்கில் அகதிகள் நிலை குறித்து புரிய வைக்கும் வகையில் அகதியாக இருப்பது என்றால் என்ன என்னும் அனுபவத்தை தரும் விளையாட்டை செயலியாக உருவாக்கியுள்ளது.

இந்த விளையாட்டில் உங்களை ஒரு அகதியாக கருதி கொள்ள வேண்டும்.உள்நாட்டு போரிலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ உடமைகளை துரந்து உயிர் காத்து கொள்ள சொந்த நாட்டை விட்டு வெளியேற நேரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்பது தான் இந்த விளையாட்டு முன் வைக்கும் சவால்.

வீட்டை விட்டு வெளியேற நேர்ந்ததில் இருந்து ஒவ்வொரு கட்டமாக இந்த விளையாட்டில் முன்னேறி செல்லலாம்.ஒவோரு கட்டமும் அகதிகள் எதிர் கொள்ளும் சோதனையின் எடுத்து காட்டாக விளங்க கூடியவை.உதாரணத்திற்கு குடும்பத்தோடு த‌ப்பி செல்லும் போது மகனும் தாயும் வழி தவறி விட்டது தெரிய வந்தால் அவர்களை தேடிச்செல்வீர்களா,அல்லது முன்னேறி சென்று காத்திருப்பீர்களா என்னும் கேள்வியை கேட்கிறது இந்த செயலி.

இந்த கேள்விக்கு உங்களின் பதில் எதுவாக இருந்தாலும் அதனை சிக்கலுக்குள்ளாகும் வகையில் மோசமான மாற்று பாதையை முன் வைக்கிற்து இந்த செயலி.அந்த கேள்விகளும் தொடரும் சோதனைகள் நிறைந்த பயணமும் திகைக்க வைத்து விடும்.

ஒவ்வொரு அகதியும் எதிர்கொள்ளும் நிலை தான் இது.

அகதியாக தப்பிச்செல்லும் போது எடுக்கும் சந்திக்கும் சோதனைகளும் எடுக்கும் முடிவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அவற்றை தவிர்ப்பது அவர்கள் கையில் இல்லையே.இந்த கையறு நிலையை தான் செல்போன் உலகிற்குள் உங்களை ஒரு அகதியாக இருக்க வைத்து உணர்த்த விரும்புகிறது இந்த செயலி.

உலகம் சொற்க‌ பூமியாக இல்லை.ஒவ்வொரு நிமிடமும் யாராவது ஒருவர் போருக்கு பயந்தோ தண்டனைக்கு அஞ்சியோ அகதியாக வெளியேறி கொண்டிருக்கின்ற‌னர்.அவர்களின் நிலையை கொஞ்சமேனும் நினைத்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலியை ஐநா உருவாக்கியுள்ளது.

மற்ற விளையாட்டு போல செல்போனில் இதனை தருவித்து விளையாடலாம்.ஆனால் இந்த விளையாட்டு கேளிக்கையை தராது.வாழ்க்கை பற்றிய புதிய புரிதலை தரக்கூடும்.

அகதிகள் நிலை பற்றிய புரிதலை தருவதோடு அவர்கள் நிலை மேம்பட நிதி அளிக்கவும் இந்த செயலி வாய்ப்பு தருகிறது.

கோபக்கார பறவையாக பன்றிகள் மீது தாக்குதல் நடத்து அங்க்ரிபேர்டு விளையாட்டு போன்றது தான் இதுவும் என்றாலும் இந்த செயலி அங்க்ரிபேர்டு போல மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்றெல்லாம் ஐநா எதிர்பார்க்கவில்லை.சொல்லப்போனால் அங்க்ரிபேர்டு அள‌வுக்கு இந்த செயலி பிரபலமாக வேண்டும் என்று கூட ஐநா எதிர்பார்க்கவில்லை.இந்த செயலியை பலரும் அறிந்து கொண்டு இதன் மூலம் அகதிகள் நிலை உணர்ந்தாலே போதும் என்கிறது ஐநா.

இன்னலுக்கு ஆளான ஈழத்தமிழர்கள் பெயரால் நாமும் இந்த விளையாட்டை விளையாடுவோம்.அகதிகள் நிலை உணர்வோம் ,ஏதேனும் செய்வோம்!

இணையதள முகவரி;http://takeaction.unhcr.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!

  1. நல்ல தகவல் …. அகதிகள் குறித்த நிலையை பலருக்கு உணர்த்த இது உதவும் என நினைக்கின்றேன்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *