இந்த கேள்வி பல நேரங்களில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடலாம்.திரைப்படங்களுக்கான விளம்பரத்தை நம்பியோ அல்லது விமர்சனத்தை வைத்தோ ஒரு படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பதும், பார்க்க வேண்டாம் என விட்டுவிடுவதும் ரிஸ்கானது தான்!படங்கள் பற்றிய பரவலான பேச்சை வைத்தும் ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லிவிட முடியாது.
அப்படி என்றால் என்ன படத்தை பார்க்கலாம் என தீர்மானிப்பது எப்படி?
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள உதவுவதற்கான சுவாரஸ்யமான இணையதளமாக பர்த்திகி உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நேரங்களில் ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை நண்பர்களின் பரிந்துரையை வைத்து தானே தீர்மானிப்பீர்கள்.பர்த்திகியும் இப்படி நண்பர்கள் பரிந்துரையின் அடிப்படையில் பார்க்க வேண்டிய அடுத்த படத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது.நண்பர்கள் என்றால் நிஜ உலக நண்பர்கள் மட்டும் அல்ல;பேஸ்புக் தோழர்கள் டிவிட்டர் சகாக்கள் என இணைய நட்பு வட்டம் முழுவதும் இதில அடங்கும்.
அது மட்டும் அல்ல நண்பர்களின் பரிந்துரையையும் விமர்சனங்களையும் குறித்து வைத்து கொள்ளும் வசதியையும் பர்த்திகி வழங்குகிறது.
பர்த்திகியில் உள்ளே நுழைந்ததுமே அதன் உறுப்பினர்கள் பார்த்து ரசித்த படங்களின் பட்டியல் வரவேற்கும்.அந்த படத்தின் கதை அந்த படம் பற்றிய விமர்சனம் ஆகியவற்றை எல்லாம் படித்து பார்க்கலாம்.அப்படியே ரசிகர்களுக்கான திரைபட தளங்களின் ஆதார வசதியாகி விட்ட இரண்டு கருத்துக்களில் ஒன்றை நீங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.
அதாவது படத்தை ஏற்கனவே பார்த்து விட்டேன் என்றோ அல்லது நானும் பார்க்க விரும்புகிறேன் என்றோ தெரிவிக்கும் அறிவிப்பை கிளிக் செய்யலாம்.
இந்த கிளிக்குகள் தான் உங்களுக்கான திரைப்பட குறிப்பேடாக உருவாகும்.அதாவது நீங்கள் பார்த்த படங்கள் மற்றும் பார்க்க விரும்பும் படங்களின் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம்.
பார்த்த படம் என்றால் அந்த படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் விமர்சனமாக இடம் பெறச்செய்யலாம்.உங்களின் இந்த விமர்சனம் நண்பர்களுக்கான இயல்பான பரிந்துரையாக அமையும்.உங்கள் கருத்து அடிப்படையில் அவர்களும் அந்த படத்தை பார்க்க தீர்மானிக்கலாம்.இதே போலவே நீங்களும் கூட உங்கள் நண்பர்கள் பக்கத்தை பார்வையிடுவதன் மூலம் எந்த படத்தை பார்க்கலாம் என தெரிந்து கொள்ளலாம்.
ஆக இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் உங்கள் நண்பர்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி இதில் இணைய வைத்தால் நீங்கள் பார்த்த படங்களையும் அவர்கள் பார்த்த படங்களையும் பரஸ்பரம் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
அதே போல திரைப்படங்களின் பட்டியலை பார்க்கும் போதும் அந்த படத்தை உங்கள் நண்பர்களின் எத்தனை பேர் பார்த்துள்ளனர் அவர்கள் கருத்து என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஆக இந்த தளத்தை பொருத்தவரை எல்லாமே நட்பானவை ஆகையால் நம்பகமானவை.
ஒரு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்றால் அதனை நண்பர்களுக்கு நேராக இமெயில் மூலம் பரிந்துரைக்கலாம்.இத்தகைய பரிந்துரை உங்களுக்கும் வந்து சேரும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.அவ்வாறு பரிந்துரை வந்தால் அந்த படத்தை பார்க்க விரும்புகிறேன் என கிளிக் செய்து பார்க்க வேண்டிய பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.
இந்த பட்டியல் பார்க்க நினைத்த படங்களை மறக்காமல் இருக்க கை கொடுக்கும்.
பார்த்த அல்லது பார்க்க விரும்பும் படங்களின் அடிப்படையில் நண்பர்களோடு கருத்து பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.இந்த இணைய உரையாடல்கள் சுவார்ஸ்யமான புதிய படங்களை தெரிந்து கொள்ள உதவும்.முற்றிலும் எதிர்பாராத பரிந்துரைகளை தற்செயலாக எதிர்கொள்ளலாம்.திரைப்பட ரசிகர்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.
திரைப்ப்டங்களுக்கு மட்டும் அல்ல டிவி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களுக்கும் இதே போன்ற வசதியை இந்த தளம் வழங்குகிறது.
ஆனால் ஒன்று பெரும்பாலான தளங்களை போல இதுவும் ஹாலிவுட் படங்களுக்கானது.
இணையதள முகவரி;http://www.partigi.com/
——-
திரைப்பட ரசிகர்களுக்கான மேலும் ஒரு இணைய சேவைக்கு இந்த பதிவை வாசிக்கவும்;திரைப்படங்களுக்கான சூப்பர் இணையதளம்