சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்தகம் அமித் திரிபாதியின் ‘இம்மார்டல்ஸ் ஆப் மெஹுலா’).இந்த புத்தகங்கள் நீண்டு கொண்டே போக கூடாத என தோன்றும்.
அதே போல சில வலைப்பதிவுகளை படிக்கும் போது அடுத்த பதிவு அடுத்த பதிவு என ஆர்வத்தை ஏற்படுத்தி எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்த பின் புதிய பதிவு எப்போது வரும் என எதிர்பார்க்க வைக்கும்.தினம் ஒரு புத்தகம் வலைப்பதிவு இத்தகைய எதிர்பார்ப்பை தான் ஏற்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் வெளியான மிகச்சிறந்த புனைகதை அல்லாத புத்தகங்களை இந்த பதிவு அறிமுகம் செய்கிறது.எல்லாமே ரத்தினசுருக்கமான அறிமுகங்கள்.ஒரு பத்தி கூடுதலாகவும் இல்லை.குறைவாகவும் இல்லை.முக்கியமாக வாசித்து எழுதுபவரின் வாசிப்பு மேலாண்மையை காட்ட முயலாமல் இதனை வாசிப்பவர்கள் புத்தகத்தை படித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அளவான அழகான அறிமுகங்கள்.
புத்தகத்தின் மைய கருத்தை மட்டும் கோடிட்டு காட்டி அதனை நோக்கி8 வாசகனை விரட்டிம் அறிமுகங்களாக இவை அமைந்துள்ளன.
எல்லா இடங்களிலும் பார்க்க முடியாத ஆனால் பார்த்து படித்தால் அசந்து போக வைக்கும் புத்தகங்களாக இவை இருக்கின்றன.
சில புத்தகங்கள் மூலம் புதிய கருத்தாக்கங்களையும் புதுமையான கோடுபாடுகளையும் அறிய முடிகிறது.உதாரணத்திற்கு நேர மேலாண்மை தொடர்பான போமோடோரோ புத்தகம் 25 நிமிட இடைவெளி விட்டு எந்த வேலையையும் செய்து பார்க்கும் புதுமையான் வழியை முன்வைக்கிறது.கிச்சன் டைமர் தொடர்பான இணையதளத்தில் இந்த கோட்ப்பாட்டை படித்து விழித்திருக்கிறேன்.இந்த பதிவு அதனை அழகாக அறிமுகம் செய்கிறது.
சாப்பாடு பற்றிய தவறான கருத்துக்களை திருத்தி கொள்ள உதவும் மைன்புல் ஈட்டிங் புத்தகம் பற்றி யோசிக்காமல் சாப்பிடுவது எப்படி?என்னும் தலைப்பிலான பதிவு ஈர்க்கிறது.
கூகுல் பிளஸ் பற்றிய புத்தகம் நண்பர்களை அதிகரிக்க வழி சொல்லும் புத்தகம்,புதிய தொழில் துவங்குவதற்கான நூல் என்று புத்தக தேர்வுகளும் பரவலாகவே இருக்கிறது.புத்தகத்தை இணையம் மூலம் வாங்குவதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது தான் துவங்கப்பட்டுள்ள வலைப்பதிவு இது.ஆனால்ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆங்கிலத்தில் என்ன புத்தகத்தை படிக்கலாம் என வழிகாட்டும் நல்ல வலைப்பதிவு.
வலைப்பதிவு முகவரி;http://thinamoruputhakam.blogspot.in/

0 Comments on “நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் வலைப்பதிவு!”
Iniyathu|இனியது
Reblogged this on இனியது and commented:
நண்பர் சிம்மனின் தளத்திலுள்ள பயனுள்ள தகவலில் ஒன்று.