டைப் செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய கற்று கொள்ளுங்கள் என சொல்லப்படுவதையே அவமானமாக கருதலாம்.சிலர் இத்தகைய பயிற்சி தேவையில்லை என்று கருதலாம்.

ஆனால் யாராக இருந்தாலும் டைப் செய்ய கற்றுக்கொடுக்கும் லெட்டர் பபில் இணையதளத்தை பார்த்தால் கொஞ்சம் சொக்கிப்போய் விடுவார்கள்.

எதையும் விளையாட்டாக செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா!இந்த தளமும் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது.அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் எளிமையான கம்ப்யூட்டர் விளையாட்டு பக்கம் போலவே தோன்றுகிறது.

இந்த தளத்தில் நுழைந்ததுமே டைப் செய்யும் விளையாட்டுக்கான வழிமுறையும் விளையாட்டு நிலைகளும் தோன்றுகின்றன.அவற்றில் விரும்பியதை தேர்வு செய்தால் திரையில் கண்ணாடி குமிழ்கள் தோன்றி கொண்டே இருக்கும் .குமிழ்களில் தோன்றும் ஆங்கில எழுத்துக்களை பார்த்து அவற்றுக்கான விசையை அழுத்த வேண்டும்.கண்ணாடி குமிழ்கள் தோன்ற தோன்ற அவற்றுக்கான விசையை தேடி அழுத்த வேண்டும்.

சரியான விசையை அழுத்துவதற்கு ஏற்ப ஒவ்வொரு நிலையாக முன்னேறி கொண்டே இருக்கலாம்.ஒவ்வொரு நிலையிலும் எழுத்துக்களின் சவால் கூடிக்கொண்டே போவது சுவாரஸ்யம்.

இவ்வாறு மூன்று கட்டங்களின் விளையாட்டுக்கள் அதாவது பயிற்சி இருக்கின்றன.திறமைக்கேற்ப ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

விளையாட்டாக இருப்பதால் எவருக்குமே முயன்று பார்க்கலாமே என்று தோன்றும்.குமிழ்களை பார்க்கும் போது ஒருவித சவாலாகவே தோன்றும்.இந்த இரண்டும் இணைந்து விளையாட்டில் மூழ்க வைக்கும்.அப்படியே டைப் செய்வதில் வேகத்தையும் விவேகத்தையும்(பிழையின்றி டைப் செய்வது) ஏற்படுத்தி தரும்.

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களோ இதில் ஒரு வித லயிப்போடு பயிற்சியில் ஈடுபடலாம்.

உறுப்பினராகும் வசதியும் இருக்கிறது.உறுப்பினராகமாலேயே டைப்ச் எய்யும் வசதியும் இருக்கிறது.ஆனால் உறுப்பினரானால் பல சிறப்பம்சங்களை அனுபவிக்கலாம்.அதாவது டைப் செய்வதில் ஒருவரது முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளலாம்.நண்பர்களை அழைத்து அவர்களோடு போட்டி போடலாம்.

டைப் செய்ய கற்று கொள்வது இத்த்னை சுவாரஸ்யமானதா என்னும் வியப்பை ஏற்படுத்தி கூடவே டைப் செய்யும் திறனையும் மேம்படுத்தும் இணையதளம்.

இணையதள முகவரி;http://www.letterbubbles.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *