செய்திகளை வெட்டி ஒட்ட ஒரு இணையதளம்

பின்ட்ரெஸ்ட் புகைப்படங்களுக்கானது என்றால் ஸ்னிபிட்டை செய்திகளுக்கான பின்ட்ரெஸ்ட் எனலாம்.தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பின்ட்ரெஸ்ட் போலவே இருக்கும் ஸ்னிபிட் அதன் பயன்பாட்டில் வேறுபடுகிறது.

செய்தி பிரியர்கள் சுவாரஸ்யமான செய்திகளையும் கட்டுரைகளையும் குறித்து வைத்து கொள்ளும் இணைய இருப்பிடமாகவும்,அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இதனை பயன்ப‌டுத்தலாம்.

ஒரு விதத்தில் இதனை புக்மார்கிங் வசதியும் பின்ட்ரெஸ்ட் அம்சமும் இணைந்த சேவை எனலாம்.இல்லை என்றால் பிட்ரெஸ்ட்டின் அழகான நகல் எனலாம்.

பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை எல்லாம் புகைப்படங்களாக குத்தி(பின்) வைத்து கொள்ளலாம்.ஸ்னிப்பிட்டில் இணையத்தில் பார்க்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெட்டி வைத்து கொள்ளலாம்.அதாவது ஸ்னிப் செய்து கொள்ளலாம்.

பின் செய்வது போல ஸ்னிப் செய்வதும் சுலபமானது தான்.ஸ்னிப்பிட்டில் உறுப்பினராக சேர்ந்து வெட்டுவதற்கான புக்மார்கிங்கை பெற்று கொண்டால் இணையத்தில் குறித்து வைக்க உதவும் எந்த சேவையை பார்த்தாலும் அந்த புக்மார்க்கில் ஒரு கிளிக் செய்தால் அந்த கட்டுரை அல்லது செய்தி,உங்களுக்கான பக்கத்தில் சேமித்து வைக்கப்படும்.

சேமித்து வைக்கப்படுவது என்றால் ஸ்னிப் செய்யப்பட்ட இணைப்பு அதற்கான புகைப்பட அடையாளத்தோடு இடம்பெற்றிருக்கும்.இந்த இணைப்பை மற்றவர்களும் பார்க்க முடியும்.நீங்களும் பேஸ்புக்,டிவிட்டர் வழியே பகிர்ந்து கொள்ளலாம்.

ஸ்னிப் செய்யும் போது அதற்கென ஒரு தலைப்பு கொடுத்து அதை சேமிப்பதற்கான சிறு விளக்க குறிப்பையும் எழுதி வைக்கலாம்.இது மற்றவ‌ர்களுக்கும் அறிமுக குறிப்பு போல வழிகாட்டலாம்.

இணையத்தில் குறித்து வைக்க நினைப்பவற்றை சேமித்து வைப்பது ஒரு பக்கம் என்றால் இதே போல மற்றவ‌ர்கள் சேமித்து வைத்தவற்றை பின் தொடரும் வசதி இதன் இன்னொரு சிறப்பம்சமாக சொல்லலாம்.

உறுப்பினராகும் போதே உங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்புகளை தேர்வு செய்ய கேட்கப்படுகிற‌து.தொழில்நுட்பம்,சினிமா,கலாச்சாரம் என விரும்பிய தலைப்புகளை தேர்வு செய்தீர்கள் என்றால் அந்த தலைப்புகளுக்கு சந்தாதாரராகி விட்டீர்கள் என்று பொருள்.அதாவது அந்த தலைப்புகளின் கீழ் மற்றவர்கள் சேமித்து வைக்கும் கட்டுரைகளை உங்கள் பகத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட டிவிட்டரில் பின் தொடர்பவரின் குறும்பதிவுகளை பார்க்க முடிவது போல தான் இதுவும்.ஆனால் இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் டிவிட்டர் போல நீங்கள் பின்தொடர்பவரின் எல்லா பகிர்வுகளூம் இதில் தோன்றாது.மாறாக உங்களுக்கும் எந்த தலைப்புகளில் விருப்பம் உண்டோ அந்த தலைப்பிலான பகிர்வுகள் மட்டுமே தோன்றும்.

இதன் மூலம் உங்களுக்கு பயன் தரக்கூடிய பகிர்வுகளை மட்டுமே பார்க்க கூடிய வாய்ப்பு உருவாகும்.தேவையில்லாத பகிர்வுகளை பார்த்து அவற்றில் இருந்து தேர்வு செய்ய வேண்டிய வேலை இருக்காது.

பின்ட்ரெஸ்ட்டில் ரீபின் செய்வது போலவே இதில் உங்களை கவரும் பகிர்வுகளை ரீஸ்னிப் செய்து கொள்ளலாம்.அதாவது மறு ஸ்னிப் செய்யலாம்.

உங்களுக்கு ஆர்வம் உள்ள குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான செய்திகளையும் கட்டுரைகளையும் தெரிந்து கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் இது சுவாரஸ்யமான வழி தான்.

நீங்கள் ஸ்னிப் செய்தவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர்,எத்தனை பேர் மறு ஸ்னிப் செய்துள்ளனர் என்ற புள்ளி விவரங்க‌ளை தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஸ்னிபிட்டின் நிறுவனர் செய்திகளை குறித்து வைக்கவும் சிறந்த முறையில் பகிர்ந்து கொள்ளவும் ச‌ரியான‌ வழியில்லை என்ற குறையை உணர்ந்து இந்த தளத்தை உருவாக்கியியதாக ஓரிடத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.அதற்கேற்ப ஸ்னிபிட்டை புதிய கருத்தாக்கம் போலவே திறம் பட உருவாக்கியிருக்கிறார்.ஸ்னிப் செய்வது என்றால் என்ன என்று சின்ன கத்திரி போன்ற லோகோவோடு அழகாக விளக்கமும் அளித்துள்ளார்.

ஆனால் எல்லாவற்றையும் மீறி இது பின்ட்ரெஸ்ட்டின் நகல் தான்.பின்ட்ரெஸ்ட் போல புகைப்படங்களுக்கானடது அல்ல செய்திகளுக்கானது என கூறப்பட்டாலும் பின்ட்ரெஸ்ட்டிலேயே கூட செய்திகளையும் இணையதளங்களையும் மட்டு புகைப்பட வடிவில் பகிர்ந்து கொள்ளலாம்.இதற்கான பின்ட்ரெஸ்ட் சார்ந்த உப சேவைகளும் இருக்கின்றன.

இருப்பினும் ஸ்னிபிட்டை செய்தி பிரியர்கள் முயன்று பார்க்கலாம்.உறுப்பினராக சேராவிட்டாலும் இதில் பகிரப்பட்ட செய்திகளை ஒரு பறவை பார்வை பார்த்தால் புகைப்பட வடிவில் சுவையான செய்திகளை இனம் காணலாம்.குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி;http://snip.it

(இந்த பதிவில் குறிப்பிடப்படும் பின்ட்ரெஸ்ட் குழப்பத்தை அளித்தால் பார்க்க பின்ட்ரெஸ்ட் பற்றிய எனது முந்தைய பதிவு;பின்ட்ரெஸ்ட்;ஒரு அறிமுகம். )

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “செய்திகளை வெட்டி ஒட்ட ஒரு இணையதளம்

  1. நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    Reply
  2. meha nathan

    நன்றி நண்பா பயனுள்ள செய்தி..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *