இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மனநிலை இல்லாத நேரங்களின் என்ன செய்வது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவது போன்ற கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது நல்ல பாடல்களால் கூட அமைதி தர முடியாது.
ஆனால் இது போன்ற நேரங்களில் மனதிற்கு பேரமைதியை அளிக்க கூடிய ஆற்றல் கொண்ட இயற்கையோடு இணைந்த இசையை கேட்டால் அப்படியே ஒன்றி போய் விடலாம்.ரிலாக்சிங் நேச்சர் இணையதளம் இத்தகைய இசை அமைதியை தான் வழங்குகிறது.
இயற்கை சார்ந்த வண்ணமயமான பின்னணியை கொண்ட இந்த தளத்தில் பலவிதமான இயற்கை இசைகளை கேட்டு மகிழலாம்.எல்லாமே இயற்கையில் கேட்க கூடிய ஒலிகள்.
பறவைகளின் கீதங்கள்,வனங்களின் கிசுகிசுப்புக்கள்,மழையின் சங்கீதம்,அலைகளின் ஆர்பரிப்பு,இரவின் ரகசியம், என இயற்கையின் இன்னிசையில் லயித்து மகிழ வாய்ப்பளிக்கிறது இந்த தளம்.
எந்த வகையான் ஒலி தேவையோ அதனை தேர்வு செய்து கேட்டு மகிழலாம்.அதில் ஆழ்ந்து மன அழுத்தங்களையும் அன்றாட கவலைகளையும் மறக்கலாம்.புதிய உற்சாகம் பெறலாம்.
பணி சுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் போதோ அல்லது மன அழுத்ததின் பார்த்தை உணறும் போதோ அல்லது அலுப்பின் சிறையில் சிக்கி தவிக்கும் போதோ இந்த தளத்தின் மூலம் இயற்கை ஒலி கேட்டு புத்துணர்ச்சி பெறலாம்.
இணையதள முகவரி;http://relaxingnature.com/
(பி.கு; இளையராஜாவின் பல பாடல்களில் பறவைகளின் ஒலிகளை நுட்பமாக கேட்க முடியும் கவனித்திருக்கிறீர்க்ளா?உதாரணம்; இது ஒரு பொன் மாலை பொழுது பாடலில் கேட்கும் பறவையின் கீதம் )