கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது.
இணைய வெள்ளை பலகை என வர்ணித்து கொள்ளும் இந்த தளத்தில் அலுவலரீதியான எண்ணத்தையோ அல்லது சுவாரஸ்யத்திற்காக வரையும் சித்திரத்தையோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.சித்திரத்தை வரையும் போதே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அலுவலக வேலை என்றால் சக ஊழியர்களையும் பங்கேற்க செய்யலாம்.
வரைபவர் ,வரைய அழைக்கப்பட்டவர் என எல்லாரும் ஒரே இணைய பலகையை பார்க்க முடிவதாலும் பயன்படுத்த முடிவதாலும் அதில் திருத்தங்களையும் செய்யலாம்.மாற்றி வரையலாம்.
வெவேறு இடங்களில் உள்ளவர்கள் இவ்வாரு ஒன்றாக வரைந்து கொண்டிருக்கும் போதே இணைய அரட்டை மூலம் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணைய பலகையில் வரைவதல் உதவ தூரிகை,வண்னங்கள் என பல்வேறு வசதிகளும் இருக்கின்றன.
வரைந்து முடித்த சித்திரத்தை சேமித்து அதனை அப்படியே பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
உறுப்பினராகும் தேவையே இல்லாமல் நேரடியாக இணைய பலகையை வரவைத்து வரையத்துவங்கி விடலாம்.
ஏற்கனவே வரையப்பட்ட சித்திரங்களை பார்க்க முடிவது கூடுதல் சுவாரஸ்யம்.பொருத்தமான இணைய பலகையை தேடி நாமும் அதில் சேர்ந்து வரைய முற்படலாம்.
இணையதள முகவரி;http://flockdraw.com/
கூட்டு முயற்சியில் வரைய உதவும் அருமையான இணையதளம் பற்றிய முந்தைய பதிவு இது;http://cybersimman.wordpress.com/2010/12/23/websites-4/