சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தேடியந்திரத்தை மாற்றி கொள்ள வேண்டாம்.கூகுல் தான் உங்கள் அபிமான தேடியந்திரமாக இருந்தால் அதனையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அப்படி என்றால் சீம்பிவோர் எதற்கு என்று கேட்கலாம்?
சீன் பிபோர் கூகுலில் நீங்கள் ஏற்கனவே தேடியதை மீண்டும் எளிதாக தேடுவதற்கான தேடியந்திரம்.அதாவது நீங்கள் நேற்றோ அதற்கு முன் தினமோ அல்லது கடந்த வாரத்திலோ பார்த்த இணையதளங்களை இப்போது எளிதாக தேடி கண்டு பிடித்து தருவது தான் இதன் வேலை.
அதனால் தான் நீங்கள் ஏற்கனவே பார்த்த தளங்களை தேடுவதற்கான தேடியந்திரம் என்று சீன் பிபோர் தன்னை வர்ணித்து கொள்கிறது.அதே பொருள் படும் வகையில் தான் அதன் பெயரும் அமைந்துள்ளது.
ஏற்கனவே பார்த்த தளங்களை ஏன் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு இணையவாசியாக நீங்கள் அசட்டுத்தனமாக கேட்க வாய்ப்பில்லை.காரணம் உங்களுக்கே பல முறை இத்தகைய அனுபவம் இருந்திருக்கும்.கடந்த வாரத்தில் அல்லது கடந்த மாதத்தில் பார்த்த ஒரு இணையதளத்தை மீண்டும் பார்க்க நேரும் தேவையும் விருப்பமும் பல முறை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் என்ன பிரச்சனை என்றால் அந்த தளத்தின் முகவரி சரியாக நினைவில் இல்லாமல் போவது தான்.தளத்தின் ஏதாவது ஒரு சில குறிசொற்களை கொண்டு கூகுலிலேயே மீண்டும் தேடிப்பார்க்கலாம் தான்.அனால் என்ன பிரச்சனை என்றால் கூகுல் பல்லாயிரக்கணக்கில் முடிவுகளை பட்டியல்லிட்டு வெறுப்பேற்றும்.அதிலிருந்து நாம் பார்த்த தளத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்கு மாறாக பார்த்த தளங்களை எல்லாம் புக்மார்க் செய்து கொள்ளலாம் தான்.
ஆனால் புக்மார்க்கிலும் சிக்கல் இல்லாமல் இல்லை.சுறுசுறுப்பாக புக்மார்க் செய்து விட்டு பின்னர் மறந்து போய் விடுவோம்.
இந்த பிரச்சனை எவையும் இல்லாமல் ஏற்கனவே பார்த்த தளம் எதுவாக இருந்தாலும் அதை எளிதாக தேடித்தருவது தான் சீன் பிபோரின் சிறப்பாக இருக்கிறது.அடிப்படையில் புக்மார்கிங் போல தான் இதுவும்.இதன் புக்மார்கிங் பாரை டவுண்லோடு செய்து கொண்டு விட்டீர்கள் என்றால் அதன் பிறகு நீங்கள் செல்லும் ஒவ்வொரு இணையதளத்தையும் இது குறித்து வைத்து கொள்ளும்.
பின் எப்போது உங்களுக்கு ஏற்கனவே பார்த்த இணையதளம் தேவையோ அப்போது இதில் தேடிப்பார்த்தால் நீங்கள் பார்த்த தளங்களின் பட்டியலில் இருந்து பொருத்தமான தளத்தை அடையாளம் காட்டும்.
கம்புயூட்டர் விட்டு கம்ப்யூட்டர் மாறினாலும் எந்த பிரச்சனையும் இல்லை.நீங்கள் பார்த்த இணையதளத்தின் பக்கமே மாறியிருந்தாலும் கவலையில்லை,அதன் நகலை இது வைத்திருக்கும்.
பிரவுசரில் உள்ள வரலாறு பக்கத்தோடு இதனை ஒப்பிடலாம் என்றாலும் பலவிதங்களில் இது மேம்பட்டது.காரணம் பிரவுசரில் வரலாற்று பக்கத்தை நாமே கூட அடிக்கடி டெலிட் செய்து விடுவோம்.
சீன் பிபோரில் அந்த சிக்கல் எல்லாம் கிடையாது.
இதனை பயன்படுத்தும் போது மிக அழகாக எந்த நாளில் பார்த்தது,செய்தியா புகைப்படமா அல்லது வீடியோவா என்றெல்லாம் குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம்.
இணையத்தில் தேடப்படுவதில் 40 சதவீதம் ஏற்கனவே பார்த்த தளங்கள் தொடர்பானதாக இருப்பதாக சொல்லும் இந்த் தேடியந்திரம் அந்த தேடலை எளிதாக்கி தருவதாக சொல்கிறது.
வீட்டில் பொருட்களை வைத்த இடம் தெரியாமல் தேடுபவர்கள் போல இணையத்தில் பார்த்த தளங்களை மறந்து திண்டாடுபவர்கள் இந்த தேடியந்திரத்தை பற்றிக்கொள்ளலாம்.
தேடியந்திர முகவரி;https://www.seenbefore.com/pages/landing

0 Comments on “ஏற்கனவே பார்த்த தளங்களை எளிதாக தேட!”
திண்டுக்கல் தனபாலன்
நல்லதொரு தளம் அறிமுகம் செய்தமைக்கு நன்றி…
cybersimman
நன்றி நண்பரே.