தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவிடுவது உசேன் போல்ட் தானா,சாம்பியனான அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்று கேட்க தோன்றலாம்.
இந்த சந்தேகத்திற்கு உசேன் போல்ட்டே மஷாபில் தொழில்நுட்ப தளத்திற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார்.
டிவிட்டர் செய்வதில் தனக்கு உதவி தேவைப்பட்டாலும் பெரும்பாலும் தானே குறும்பதிவுகளை வெளீயிடுவதாக போல்ட் கூறியுள்ளார்.
சும்மா ஒன்றும் இல்லை,போல்ட் எப்போதும் லேப்டாப்பை விட்டு பிரியாத தொழில்நுட்ப அபிமானியாக தான் இருக்கிறார்.அதோடு ஐபேட் மற்றும் காமிராவையும் எப்போதும் கொண்டு செல்கிறார்.இந்த சாதனங்களின் உதவியோடு அவரால் உடனுக்குடன் குறும்பதிவிட்டு ரசிகர்களை தொடர்பு கொள்ள முடிகிறது.
அந்த பேட்டியில் டிவிட்டர் செய்வது எதற்காக என்றும் போல்ட் விளக்கமாக கூறியிருக்கிறார்.
டிவிட்டர் செய்ய துவங்கிய போது பலரும் தன்னை பின்தொடர்வதை விரும்பவில்லை என்று குறிப்பிடும் போல்ட் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவே டிவிட்டரை பயன்படுத்த துவங்கியதால் இவ்வாறு நினைத்தாக தெரிவிக்கிறார்.
ஆனால் டிவிட்டரை பயன்படுத்த துவங்கிய பின்னர் தான் அது தொடர்பு கொள்வதற்கு எத்தனை மகத்தான சாதனம் என்பதை உணர்ந்து கொண்டு தீவிரமாக பயன்படுத்த துவங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது திட்டங்களையும் எண்ணங்களையும் டிவிட்டர் வழியே பகிர்ந்து கொள்வதை மிகவும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.புகைப்படத்தை இணைக்க முடிந்தால் இன்னும் மகிழ்வதாகவும் கூறியுள்ளார்.
போல்ட் இதனை கச்சிதமாக செய்து வருகிறார் என்பது அவரது டிவிட்டர் பக்கத்தை பாரத்தாலே தெரிகிறது.
போல்ட் அபிமானிகளுக்கு மேலும் ஒரு நற்செய்தி இருக்கிறது.போல்ட் பெயரில் ஒரு வீடியோ கேம் மற்றும் ஐபோன் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
————-
உசேன் போல்ட்டின் டிவிட்டர் பக்கத்தின் மூலம் அவரது ஆளுமையை புரிந்து கொள்ளும் முயற்சியாக எழுதப்பட்ட இந்த ‘உசேன் போல்ட் என்னும் மனிதன்‘என்னும்
முந்தைய பதிவையும் படித்து பார்க்கவும்.

0 Comments on “நான் ஏன் டிவிட்டர் செய்கிறேன்? உசேன் போல்ட்.”
Pingback: நான் தடகள மகாராஜா ;உசேன் போல்ட்டின் டிவிட்டர் முழக்கம்! | Cybersimman's Blog