100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து உசேன் போல்ட் 200 மீட்டரிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.இரட்டைத்தங்கம் வென்ற மகிழ்ச்சியில் போல்ட தன்னைத்தானே தடகள மகாராஜா என அறிவித்து கொண்டிருக்கிறார்.அதாது வாழும் சாதனையாளர் என்று தன்னை வர்ணித்து கொண்டுள்ளார்.
மேலோட்டமாக பார்க்கும் போது இது சுய பெருமிதம் போல தோன்றினாலும் டிவிட்டரில் இது தொடர்பான போல்டின் குறும்பதிவு ரசிகர்களுக்கான நன்றி நவிலலுடனே துவங்குகிறது.
‘எனது உண்மையான எல்லா ரசிகர்களுக்கும் என்னை நம்பியவர்களுக்கும் நன்றிகள்,நான் இப்போது ஒரு வாழும் சாதனையாளர் என்பது நிஜம்,என்று போல்ட் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மற்றொரு பதிவில் எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முந்தைய குறும்பதிவில் நான் பிறந்த மண்ணான மகத்தான நாடு ஜமைக்காவுக்கு நன்றி.இந்த தேசத்தின் பிரதிநிதியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சாம்பியனின் வெற்றி உணர்வுகள் என்ன என்பதை டிவிட்டர் மூலம் தெரிந்து கொள்ள விரும்பும் போல்ட்டின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் பாராட்டலாம்.அவரது சாதனையையும் தான்!.
நட்சத்திரங்கள் எப்படி தங்கள் மன உணர்வுகளை ரசிகர்களோடு நேரடியாக உடனடியாக பகிர்ந்து கொள்ள டிவிட்டர் உதவியாக இருக்கிறது என்பதற்கு போல்ட்டின் டிவிட்டர் பயன்பாடு ஒரு நல்ல உதாரணம்.
—————-
https://twitter.com/usainbolt
—————
——