ஒலிம்பிக் வெற்றியில் இணையதளங்களின் பங்கு!.

சின்ன நாடுகள் கூட பதக்கங்களை வெல்லும் போது இவ்வளவு பெரிய தேசமாகிய இந்தியாவில் தங்கம் பெற்றுத்தரக்கூடியவர்கள் ஏன் இல்லை?
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின்போதும் இந்தியர்கள் மனதில் வேதனையோடு எழுகின்ற கேள்வி தான் இது.

ஒலிம்பிக் முடிந்த கையோடு இந்த கேள்வியை எல்லோரும் மறந்து விடுகிறோம் என்பது ஒருபுறம் இருக்க, இக்கேள்விக்கு எளிமையான பதில் இல்லை என்பதே உண்மை.

விளையாட்டுத் துறையில் விளையாடும் (?!) அரசியலில் துவங்கி, பெற்றோர்கள் விளையாட்டை ஊக்குவிக்காமல் இருப்பது, கிரிக்கெட்டின் ஆதிக்கம், அரசின் தொலைநோக்கற்ற தன்மை என்று பல்வேறு கோணங்களில் இந்த கேள்விக்கான பதிலை ஆராய வேண்டும் என்றாலும் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல.

மாறாக, விளையாட்டும் இண்டெர்நெட்டும் எப்படி கைகோர்த்திருக்கின்றன என்பதை உணர்த்துவதும் இதன் பயனாக வீரர், வீராங்கனைகளின் பயிற்சி எப்படி பட்டை தீட்டப்படுகிறது என்பதை உணர்த்துவதுமே இதன் ஆதார நோக்கம்.

விளையாட்டுத் துறையை பொருத்தவரை நம்மில் நிறைய போதாமைகள் இருக்கின்றன. அவற்றில் இன்டெர்நெட்டை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதும் ஒன்று என்பதையும் இந்த பதிவு உணர்த்த விரும்புகிறது.

பதக்க கனவுகளோடு பயிற்சியில் ஈடுபடும் வீரர் / வீராங்கனைகளுக்கு அதற்கான வசதிகளோடு இன்னும் சில விஷ‌யங்களும் முக்கியமாக தேவை. அவற்றுள் முக்கியமானது தகவல்கள். நம்மோடு போட்டியிடப் போகும் போட்டியாளர்களைப் பற்றிய தகவல்கள். இன்டெர்நெட் இவற்றை விரல் நுனியில் கொண்டு வந்து, அதற்கேற்றபடி பயிற்சியை மேம்படுத்த உதவுகிறது. அமெரிக்க தடகள வீரர்களிடம் இதனை நன்றாக பார்க்கலாம்.

விளையாட்டு என்பதே போட்டியும் அதில் முந்துவதும் தானே. ஆக, எந்த விளையாட்டாக இருந்தாலும் போட்டியிடுபவரின் திறனை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது தான் அவரை முந்துவதும் அதற்கேற்ப தயாராவதும் சாத்தியம்.

போட்டியாளர் திறன் பற்றிய தகவலே பயிற்சிக்கான இலக்காகிறது. அந்த இலக்கை மிஞ்சும் வகையில் தன்னை தயார்படுத்திக் கொள்ள உழைக்க வேண்டியிருக்கிறது.

உதாரண‌த்திற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் என்றால் அதில் முதலில் இருப்பது யார், அவரது வேகம் என்ன, அடுத்த இடத்தில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற தகவல்களை தெரிந்து வைத்து கொண்டு அந்த வேகத்தை மிஞ்சக்கூடிய வகையில் தயாராக முடியும்.
அனைத்து தடகள‌ போட்டிகளுக்கும் இது பொருந்தும்.

இந்தியர்களை பொருத்தவரை என்ன பிரச்னை என்றால் நாம் பெரும்பாலும் காலாவதியான இலக்குகளை வைத்து கொண்டு செயல்படுகிறோம் என்பது தான். அதாவ‌து கடந்த ஒலிம்பிக் சாதனை அல்லது சமீபத்திய உலக சாதனை புள்ளி விவரங்களை இலக்காக கொண்டு நம்மவர்கள் தயாராகின்றனர். நம்மிடம் இருக்கும் போதாமைகளுக்கு மத்தியில் இந்த இலக்கை எட்டி பிடிப்பதற்கே பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் மீறி தப்பித்தவறி இந்த இலக்கை அடைபவர்கள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் போது பார்த்தால், சக போட்டியாளர்கள் அந்த இலக்கை தாண்டி எங்கோ சென்று விட்டிருக்கின்றனர்.

ஆக, இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் எந்த அளவுக்கு பயிற்சி மேற்கொண்டு தங்களை எந்த அளவுக்கு உயர்த்தி கொண்டுள்ளனர் என்பது நமக்கு சரிவர தெரிவதில்லை.ஆகையால் நாம் எப்போதும் பின்தங்கியே இருக்கிறோம்.

இப்போது உலகில் போட்டி எப்படி இருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் தான் அதற்கேற்ப அல்லது அதனை மிஞ்ச தயாராவது சாத்தியம். ஆசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பயிற்சி விவரங்கள் பற்றிய தகவல்கள் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது கேள்விக்குறியே. இதற்காக செய்யப்பட வேண்டியவை குறித்தும் ஆழமாக யோசிக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் அமெரிக்கர்களுக்கு உதவும் சில விளையாட்டு இணையதளங்கள் பற்றி பார்போம். முதலில் டைஸ்டேட் என்ற இணையதளத்தை எடுத்து கொள்வோம். இப்போது ஈஎஸ்பின் ( ESPN ) நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் இந்த இணையதளத்தை இளம் விளையாட்டு வீரர்களின் சொர்கம் என்று தான் சொல்ல வேண்டும். நம்மூர் விளையாட்டு வீரர்கள் இந்த தளத்தை பார்த்தால் ஏங்கிப் போவார்கள்.

காரணம், இந்த தளம் அமெரிக்கா விளையாட்டு நிலவரத்தை பற்றி அந்த அளவுக்கு முழுமையான தகவல்களை அளிக்கிறது.
அமெரிக்கா முழுவதும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அவற்றில் வெற்றி பெறுபவர்கள் தொடர்பான விவரங்களை இந்த தளம் மாநிலவாரியாக உடனுக்குடன் அளிக்கிறது. சமீபத்திய விளையாட்டு போட்டி முடிவுகள், தேசிய அளவில் முன்னிலை பெற்றிருப்பவர்கள், புதிய சாதனைகள் எல்லாமே சுட‌ச்சுட தரப்படுகின்றன.

இந்த புள்ளிவிவரங்களை பார்க்கும் எந்த இளம் வீரருக்கும் தான் நிற்கும் இடம் எது என்பது துல்லியமாக தெரிந்து விடும். அதோடு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்ப‌தும் தெரிந்து விடும். மேலும் தீவிரமாக பயிற்சி பெறுவதற்கான தூண்டுகோலாகவும் இது அமையும்.

கல்லூரி அளவில் சாம்பியனாக இருக்கும் ஒருவர் இந்த தளத்தை பார்த்து வந்தால், தனது மாநிலத்தில் யார் முதலிடத்தில் இருக்கிறார், மற்ற மாநிலங்களில் யாரெல்லாம் முன்னிலை வகிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆக, அவர் ஒருபோதும் கிணற்றுத் தவளையாக இருக்க நேரிடாமல், நாடு தழுவிய அளவில் போட்டி எப்படி இருக்கிறது என்பதை அறிந்தவராக இருக்க முடியும். அதற்கேற்ப தன்னையும் தயார் செய்து கொள்ள முடியும்.

அமெரிக்க தடகள‌ வீராங்கனையான ஜென்னி சிம்சன் இது போன்ற தளங்களின் உதவியால்தான் தன்னுடைய பயிற்சி மேம்பட்டதாக தெரிவிக்கிறார். 2003ம் ஆண்டில் கல்லூரிகள் அளவிலான போட்டியில் பங்கேற்றபோது, மற்ற மாநிலங்களின் கல்லூரி மாணவிகள் எந்த இடத்தில் இருக்கின்றனர் என்பதை இந்த தளம் மூலம் தெரிந்து கொண்டது தனக்கு தூண்டுகோளாக அமைந்தது என்கிறார்.

தடகளம் தவிர மற்ற விளையாட்டு போட்டிகள் பற்றிய தகவல்களையும் இந்த தளம் தருகிறது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய செய்திகளையும் வழங்கி வருகிற‌து. பயிற்சி தொடர்பான வழிகாட்டுதலையும் பெற இந்த தளம் கைகொடுக்கலாம். புதிய பயிற்சி யுக்திகளையும் இதன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இண்டெர்நெட்டுக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத வாய்ப்பிது.

ஒரு போட்டி நடைபெற்று முடிந்தால் அதில் பதிவான புள்ளி விவரங்கள் வெளியாக மாதக் கணக்கில் ஆகலாம். அதனைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் இருக்காது. ஆனால் டைஸ்டேட் தளம் நேற்று நடந்த போட்டியின் முடிவை கூட உடனே வழங்கி போட்டியின் தரத்தை உண‌ர்த்தி கொண்டே இருக்கிற‌து. டெகன்காம்ப், கேலன் ரப், டாதன் ரிட்ஸ்ஹீம் போன்ற அமெரிக்க முன்னணி தடகள வீரர்கள் இந்த தளத்துடனே வளர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதே போல மைல்ஸ்பிலிட் இணையதளமும் விளையாடு செய்திகள் மற்றும் புள்ளி விவரங்களை வழங்கி வருகிறது. அதோடு வீரரகள் கலந்துரையாடுவதற்கும் ஆலோசனை பெறுவதற்குமான விவாத அரங்கையும் கொண்டிருக்கிறது. வீரரகளுக்கான விரிவான வழிகாட்டி பகுதியும் இருக்கிறது.

இந்த தளங்கள் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான கிரியாஊக்கியாக செயல்படுகின்றன் என்றும் சொல்லலாம்.

லெட்ஸ்ரன் என்னும் தளம் தடகளம் தொடர்பான, அதிலும் நீண்ட தூர ஓட்டம் தொடர்பான தகவலகளை வழங்கி வருகிற‌து. அமெரிக்க போட்டிகள் மட்டும் அல்லாமல் உலக அளவிலான போட்டிகள் பற்றிய விவரங்களை தருகிறது.

இப்போது நம் நாட்டு நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு விளையாட்டிலும் தேசிய சாதனை என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்? கொரியாவிலோ சீனாவிலோ உள்ள வீரரகள் இப்போது எந்த நிலையில் தயாராகின்றனர் என்று இளம் வீரர்கள் அறிய வழி இருக்கிறதா? இவ்வளவு ஏன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளம் வீரர்கள் பற்றியும் அவர்கள் பயிற்சி விவரம் பற்றியும் ஒருவர் அறிய வழி இருக்கிற‌தா?

இண்டெர்நெட் செய்தி வெளியீட்டையும் தகவல் பரிமாற்றத்தையும் எளிதாக்கி இருக்கும் காலத்தில் இந்த நிலையை என்னவென்று சொல்வது?

எனவே இந்தியர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வேண்டும் எனில் செய்ய வேண்டிய பல விஷயங்களில் அருமையான விளையாட்டு தளங்களை உருவாக்க வேண்டும் சேர்த்து கொள்ள வேண்டும்.

உதாரண இணையதளங்கள்:

http://espn.go.com/high-school/track-and-xc/
http://www.milesplit.com/
http://www.letsrun.com/2012/homepagerupp.php

———–
யூத்புல் விகடன் ஸ்போர்ட்ஸ் பகுதியில் வெளியானது.

நன்றி.யூத்புல் விகடன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒலிம்பிக் வெற்றியில் இணையதளங்களின் பங்கு!.

  1. அருமையாச் சொல்லி உள்ளீர்கள்… நன்றி…

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி நண்பரே.

      Reply
  2. உண்மையான கருத்து

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply
  3. மிகச் சரியான கருத்து. இதைப் படித்து விட்டு ஆவன செய்தால் நல்லது.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *