ஷாப்பிங்,பேங்கிங் என எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலமே செய்து கொள்ளும் காலம் இது.சினிமா டிக்கெட் புக் செய்வது பயணத்திற்கான டிக்கெட் புக் செய்வது போன்றவற்றையும் ஆன்லைனிலேயே முடித்து கொண்டு விடலாம்.
இப்போது விருப்பத்திற்கேற்ற ஆடைகள் வாங்கி கொள்வதையும் கூட இண்டெநெட் மூலமே நிறைவேற்றி கொள்ளலாம்.இதற்காக என்றே பிரத்யேக இணையதளங்கள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.
ஆடைகளை ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்! அது சாத்தியம் தான்!ஆனால் அளவெடுத்து தைப்பது போல வருமா என்று கேட்பவர்கள் பாம்பே ஷர்ட் கம்பெனி இணையதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.
ஆண்களுக்கான சட்டைகளை ஆன்லைனில் வாங்கி கொள்வதற்கான சேவையை வழங்கும் இந்த தளம் ஆர்டர் செய்பவர் தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அளவு கொடுக்கவும் வழி செய்கிறது.சட்டைக்கான நிறம் மற்றும் வடிவமைப்பையும் விரும்பிய வகையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
இணையத்திலேயே சட்டைக்கு அளவு கொடுக்க முடியும் என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கலாம்.ஆனால் அது எத்தனை சுலபமானது என்பதையும் இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக எப்படி அளவு கொடுப்பது என்னும் விளக்க பகுதி இருக்கிறது.முதலில் காலரை அளந்து கொள்ள வேண்டும்,அடுத்ததாக மார்பின் அளவை கணக்கிட வேண்டும் என்று அடுத்தடுத்து வழிகாட்டி அழகாக சட்டைக்கான அளவுகளை அளவிட்டு அவற்றை ஆன்லைனிலேயே சமர்பிக்க இந்த தளம் வழி செய்கிறது.(உங்கள் மனைவி அல்லது அம்மாவை கூப்பிட்டு அளவு எடுக்க சொல்லுங்கள் என்கிறது வீடியோ விளக்க அறிமுகம்)
இந்த அளவுகளின் அடிப்படையில் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் துணி ரகத்தில் சட்டை தைத்து அனுப்பி வைக்கப்படும்.’
து8ணி ரகத்தை தேர்வு செய்யும் போதே அதன் நிறத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.அதோடு சட்டையின் காலர் எப்படி இருக்க வேண்டும் கைப்பகுதி எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற அமசங்களையும் விருப்பம் மற்றும் ரசனைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.அழகாக புகைப்பட குறிப்போடு பலவகையான வடிவமப்பு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக நேரில் அளவு கொடுப்பதை விட இன்னும் கச்சிதமாக சட்டையின் அளவையும் வடிவமைப்பையும் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு செய்து கொள்ளலாம்.
தையல் கடைக்கு போக நேரமில்லாதவர்கள் அல்லது தையல் கடையை தேடி போக வேண்டுமே என அலுத்து கொள்பவர்கள் யார் வேண்டுமானாலும் விட்டிலிருந்தபடியே இந்த தளத்தின் மூலம் எளிதாக தங்களுக்கு தேவையான சட்டையை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
எல்லாம் சரி அளவு சரியாக இல்லை என்றால் என்ன செய்வது?அதற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.சரியாக அளவு கொடுத்திருந்தும் அதிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தால் சரி செய்து தருவதாக உறுதி தரப்பட்டுள்ளது.
சொந்த உஅபயோகத்திற்கும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.சகோதரர் அல்லது காதலர் போன்றவருக்கு பரிசளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தவும் பயன்படுத்தலாம்.
ஆன்லைனிலேயே சட்டை தைத்து கொள்ளும் உதவும் இதே போன்ற இணையதளம் ஒன்று ஏற்கனவே இருக்கவும் செய்கிறது.ஷர்ட்ஸ் மைவே என்னும் தளம் இணையம் வழி சட்டை தைக்கும் வசதியை வழங்குகிறது.எந்த நாட்டில் இருந்தும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
இந்திய தளமாப பாம்பே ஷர்ட் தளத்திற்கு இந்த தளமே முன்னோடி என சொல்லலாம்.
இணையதள முகவரி:http://www.bombayshirts.com/
————–
ஷர்ட்ஸ் மைவே பற்றி இண்டெர்நெட் டைலர் என்னும் தலைப்பில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

0 Comments on “ஆன்லைனில் சட்டை தைக்கலாம்.”
திண்டுக்கல் தனபாலன்
இணையத்தில் இன்னும் என்னென்ன வரும் என்பதே தெரியவில்லை… நன்றி…
krishnamoorthy
திருப்பதியில் லட்டு இருந்தால்தான் மதிப்பு .திருப்பூருக்கு இந்தமாதிரி பதிவாளர்களுடன் தொடர்பு இருந்தால்தான் மதிப்பு .