செல்லிஸ் போல தான் ஷாப்லாக்கெட்டும் மிக சுலபமாக இ காமர்சில் ஈடுபட கைகொடுக்கிறது.
சுலபம் என்றால் உண்மையிலேயே சுலபம் தான்.இந்த தளத்தின் மூலம் நொடியில் இணைய கடையை அமைத்து விற்பனையை துவக்கி விடலாம்.
முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பிறகு விற்பனையை துவக்கி விடலாம்.அவ்வளவு தான்.உறுப்பினராக ஒன்று இமெயில் முகவரியை சமர்பித்து கடவு சொல்லை தேர்வு செய்து கொள்ள வேண்டும் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமே உள்ளே நுழைந்து விடலாம்.
இப்போது உங்கள் இணைய கடைக்கான பக்கம் வந்து நிற்கும்.அதில் உள்ள ‘புதிய பொருளை உருவாக்கு’பகுதியில் கிளிக் செய்து விற்பனைக்கான பொருளின் தலைப்பு,அதற்கான விளக்கம்,விலை ஆகியவற்றை குறிப்பிட்டு சரி பார்த்து கிளிக் செய்தால் அந்த பொருள் விற்பனைக்கு தயார்.எல்லாவற்றுக்குமே தனித்தனி கட்டங்கள் இருப்பதால் இந்த விவரங்களை இடம் பெறச்செய்வதும் சுலபம் தான்.
இன்னும் கூடுதல் விவரங்களை தர நினைத்தால் அதற்கான மேம்பட்ட வசதிகளும் இருக்கின்றன.
பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னாக விற்பனையாளர்கள் தங்களை பற்றிய அறிமுக பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் தங்கள் இணையதள அல்லது வலைப்பதிவு முகவரியையும் கொடுக்கலாம்.
செல்லிஸ் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் பொருட்கள் எல்லாம் புகைப்படத்துடன் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும்.ஷாப்லாக்கெட்டில் அந்த வசதி கிடையாது.மாறாக விற்பனையாளர்கள் பொருட்களை பேஸ்புக்,டிவிட்டர் ,கூகுல் பிளஸ் போன்ற தங்கள் சமூக வலைப்பின்னல் தளங்களின் மூலம் நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்களிடன் பகிர்ந்து கொள்ளலாம்.பின்ட்ரெஸ்ட் மூலமும் பகிர்ந்து கொள்ளலாம்.
உறுப்பினர் கட்டணமோ பொருட்களுக்கான பதிவு கட்டணமோ கிடையாது.ஆனால் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் இந்த தளம் எடுத்து கொள்கிறது.இது தவிர பணம் செலுத்தும் சேவையான பேபாலும் தனக்கான கட்டணத்தை பிடித்து கொள்ளும்.
சரி இந்த தளத்தின் மூலம் எவற்றை எல்லாம் விற்பனை செய்யலாம்.எதை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.வாய்ப்புகளுக்கு எல்லையே இல்லை.இசை ஆர்வமும் திறமையும் மிக்கவர் என்றால் புதிய பாடல் ஆல்பத்தை விற்கலாம்.கவிஞர் என்றால் கவிதை தொகுப்பை மின்னூலாக விற்கலாம்.பயிற்றுவிக்க தயாராக இருப்பவர்கள் தங்களிடம் கற்பதற்கான நேரத்தை விற்பனை செய்யலாம்.நிகழ்ச்சிக்கான டிக்கெட்,டிஷர்ட்கள்,கலைப்பொருட்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதெல்லாம் உதாரணங்கள் தான்.சரக்கிருப்பவர்கள் எதையும் விற்கலாம்.
இணையதள முகவரி;https://www.shoplocket.com

0 Comments on “நொடியில் இணைய கடை துவக்கலாம்.”
EZ (Easy) Editorial Calendar
அண்ணாச்சி கடை தொடங்கிறது மாதிரியே தாளிப்பு இருக்கிறது
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Pingback: Miscellaneous | Annotary