நம்பர் ஒன் இணையதளம்,டாப் டென் தளங்கள்,நூறு முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை எல்லாம் கொஞ்சம் மறந்து விடுங்கள்.எல்லோரும் எல்லா நேரங்களிலும் முன்னலை பெறும் தளங்களை தான் கவனிக்கின்றனர்.எப்போதாவது கடைக்கோடி தளங்களை பற்றி யோசித்ததுண்டா?
கடைக்கோடி தளங்கள் என்றால் தேடல் முடிவுகள் பட்டியலில் பின் தங்கியிருக்கும் தளங்கள்.பாராமுகத்துக்கு ஆளாகும் பரிதாப தளங்கள்.
இணைய உலகில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருந்தாலும் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு தந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளில் தேடல் என்பது முதல் சில பக்கங்களிலேயே முடிந்து போய் விடுகிறது.
கூகுலில் தேடும் ஒவ்வொரு முறையும் இத்தனை நொடிக்குள் (உண்மையில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்)இத்தனை லட்சம் பக்கங்களை பட்டியலிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த குறிப்பையே கூட பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
காரணம்,தேடல் பட்டியலின் முதல் பக்கத்திலேயே பொருத்தமான இணையதளங்கள் பட்டியலிடப்படுவதால் பலரும் அதிலேயே திருப்தி அடைந்து வெளியேறி விடுகின்றனர்.ஒரு சிலர் கூடுதல் முடிவுகளை நாடி மூன்றாவது ,நான்காவது ,ஐந்தாவது பக்கங்களுக்கு சென்று பார்ப்பதுண்டு.எப்படி இருந்தாலும் அதிகபட்சம் முதல் பத்து பக்கங்களை தாண்டி செல்வது அரிதானது தான்.
தேடலின் நோக்கமே தேவையான தகவல் அடங்கிய தளங்களை கண்டுபிடிப்பது தான் என்னும் போது முதல் பக்கத்திலேயே நாடி வந்த தளம் இருந்தால் அதை தாண்டி செல்ல வேண்டிய அவசியம் என்ன?
எல்லாம் சரி தான் ,ஆனால் தேடல் பட்டியலில் நூறாவது பக்கத்திலோ அல்லது ஆயிரமானது பக்கத்திலோ அல்லது பத்தாயிரமாவது பக்கத்திலோ உள்ள தளங்களின் கதி என்ன?இந்த தளங்கள் எல்லாமோ பின்னுக்கு தள்ளப்பட்டவை தானா?
ஒவ்வொரு தேடல் முடிவிலும் லட்சக்கணக்கான பக்கங்களில் முடிவுகள் நீளூம் போது எல்லோருமே முதல் சில பக்கங்களில் உள்ள தளங்களை மட்டுமே பார்ப்பது இணைய உலகின் நிதர்சனம் தான்!.நடைமுறை நோக்கில் பார்த்தால் இது மிகவும் இயல்பாகவும் தோன்றலாம்.
இந்த இணைய யதார்த்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரு சுவாரஸ்யத்துக்கேனும் எப்போதாவது இணைய கடலில் ஆழச்சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறிர்களா?அதாவது இரண்டு லட்சமாவது பக்கதில் என்ன தளங்கள் இருக்கின்றன என்றோ அல்லது 17 வது லட்ச பக்கத்தில் என்ன தளங்கள் இருக்கின்றன என்றோ தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதா?
ஆம் என்றோ அல்லது அட இப்படி இது வரை யோசித்து பார்த்ததேயில்லை என்றோ நினைத்தால் மில்லியன் ஷார்ட் தளத்தை மனதார வாழ்த்துங்கள்.காரணம் இந்த விநோத தேடியந்திரம் இணைய உலகில் யாருமே பார்க்காத தளங்களை பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.முன்னணி இணையதளங்களை கடந்து சென்று எங்கோ மூளையில் மறைந்து கிடக்கும் தளங்களை இந்த தேடியந்திரம் மூலம் காணலாம்.
அதாவது தேடல் பட்டியலின் பத்தாயிரமாவது பக்கத்தில் உள்ள தளங்களை அல்லது பத்து லட்சமாவது பக்கத்தில் உள்ள தளங்களையோ இதன் மூலம் காணலாம்.
மில்லியன்ஷார்ட் தேடியந்திரம் இதனை எப்படி சாத்தியமாக்குகிறது என்றால் தேடலில் ஈடுபடும் போது இணையவாசிகள் முதலில் உள்ள பக்கங்களை நீக்கிவிட வழி செய்து இதனை நிறைவேற்றுகிறது.இதில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி முதல் நூறு பக்கங்களையோ ,முதல் ஆயிரம் பக்கங்களையோ ,முதல் லட்சம் பக்கங்களையோ,அல்லது முதல் மில்லியன் பக்கங்களையோ நீக்கி விட்டு எஞ்சியுள்ள பக்கங்களை காணலாம்.
தேடலில் ஈடுபடும் போது ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து பார்த்தாலும் பத்து பதினைந்து பக்கங்களை கடந்த பிறகு ஒரு அலுப்பும் களைப்பும் வந்து விடும் அல்லவா?
மில்லியன்ஷார்ட்டோ ஒரே கிளிக்கில் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக கடந்து பட்டியலின் கடைக்கோடியில் உள்ள தளங்களை காண வழி செய்கிறது.
பின்னுக்கு தள்ளப்பட்ட இந்த தளங்கள் பயனில்லாதவையாக இருக்கலாம்.அல்லது இவற்றில் சில முத்துக்களும் இருக்கலாம்.எப்படி இருந்தாலும் கூகுல் உட்பட வேறு எந்த தேடியந்திரத்திலும் இல்லாத வசதியாக தேடல் பட்டியலில் பின்னோக்கி சென்று பார்க்க இந்த தேடியந்திரம் உதவுகிறது.
சுவாரஸ்யமான இந்த தேடியந்திரம் தன்னை ஒரு பரிசோதனை தேடியந்திரம் என்றே வர்ணித்து கொள்கிறது.எனவே கூகுலுக்கு மாற்றாக எல்லாம் இதனை கருத வேண்டாம்.ஆனால் எப்போதாவது இணைய உலகில் புதிய எல்லைகளை காண்ட வேண்டும் என நினைத்தால் இதனை பயன்படுத்தி பாருங்கள்!.வியந்துபோவீர்கள்!.

0 Comments on “இணைய உலகின் கடைக்கோடி தளங்களை தேடும் தேடியந்திரம்!.”
NONAME
I DISAGREE. THIS IS 2000% AN ALTERNATIVE TO GOOGLE. WATCH THIS SITE GROW AND HELP THEM. THE INTERNET NEEDS.
திண்டுக்கல் தனபாலன்
Google மட்டும் நம்புவதில்லை… நீங்கள் குறிப்பிட்ட தளத்தைப் பார்க்கிறேன்…