ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படிக்கும் சிறுவன் தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கினால் அது கொஞ்சம் வியப்பானது தானே.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டைலன் வியாலே என்னும் சிறுவன் தான் இப்படி தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கியிருக்கிறான்.சிறு வயதீலேயே கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் கோடிங் போன்ற விஷயங்களில் புலியாக இருக்கும் ஹைடெக் பிள்ளைகள் பலர் இருக்கவே செய்கின்றனர்.பத்து வயதிலேயே இணையதளம் வடிவமைக்கும் கில்லாடிகளும் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் சிறுவன் டைலன் உருவாக்கிய வீடியோ கேமில் விசேஷம் என்னவென்றால் அந்த கேம் அவனது பாட்டிக்காக வடிவமைக்கப்படது என்பது தான்.ஆம் பாட்டியும் தன்னைப்போலவே வீடியோ கேம் விளையாடி மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டு பாட்டிக்காக புதிய வீடியோ கேமை உருவாக்கி இருக்கிறான்.
டைலனின் பாட்டி பார்க்கும் திறன் இல்லாதவர் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டால் இந்த பேரனின் பாச செயலின் பெருமையை சரியாக புரிந்து கொள்ளலாம்.
எல்லா பேரன்களையும் போல டைலனுக்கும் பாட்டி மீது பற்றும் பாசமும் அதிகம்.இருவரிடையே தனி பினைப்பும் உண்டு.பாட்டியும் பேரனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.டைலன் தனக்கு ஆர்வம் உள்ள எல்லா விஷயங்களையும் பாட்டியிடம் பகிர்ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருந்தது.
ஆனால் டைலனால் தனது வீடியோ கேம் ஆர்வத்தை மட்டும் பாட்டியிடம் பகிர்ந்து கொள்ள முடிந்ததில்லை.பார்க்கும் திறனில்லாத பாட்டியிடம் வீடியோ கேம் மகிமையை உணர்த்த முடியாதது சிறுவன் மனதில் பெருங்குறையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் பாட்டிக்காக தானே ஒரு வீடியோ கேமை உருவாக்குவது என தீர்மானித்து கொண்டான்.பாட்டியால் பார்க்க முடியாதே தவிர நன்றாக கேட்க முடியும்.பார்வை குறைபாடுக்கு ஈடு செய்வது போல பாட்டியால் ஒலிகளையும் ஓசைகளையும் கொண்டே பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.
எனவே ஒலி மூலம் விளையாடக்கூடிய வீடியோ கேமை உருவாக முடிவு செய்து கொண்டான்.கேம் மேக்கர் என்னும் இணையதளம் வீடியோ கேம்களை உருவாக்கி கொள்வதற்கான வசதிகளை வழங்கு வருவதை அறிந்த டைலன் அந்த தளத்திற்கு விஜயம் செய்து வீடியோ கேம் உருவாக்குவதற்காக வழி காட்டுதல் குறிப்புகளை ஆர்வத்தோடு படிக்கத்துவங்கினான்.
இறுதியில் குவாக்கி என்னும் குள்ள வாத்து ஒன்று பல் வேறு கட்டங்களை கடந்து முன்னேறி தங்க முட்டையை அடைவது போன்ற விளையாட்டை தேர்வு செய்து அதனை தனது பாட்டிக்காக மாற்றத்துவங்கினான்.
கட்டங்களின் வழியே முன்னேறி செல்லும் போது நடுவே பல விதமான தடைகள் குறுக்கிடும்.அவற்றை கடந்து செல்ல வேண்டும்.ஆனால் பார்த்து கொண்டே விளையாடும் போது இந்த விளையாட்டு சுலபமாக இருக்கும் .ஆனால் பார்க்க முடியாத ஒருவர் இந்த விளயாட்டை ஆடுவது எப்படி?
இந்த சவாலை சமாளிக்கும் வகையில் காட்சி ரீதியாக புரிந்து கொள்ளும் வழிகளுக்கு பதிலாக ஒலி மூலம் புரிந்து கொள்ளும் குறிப்புகளை டைலன் உருவாக்கியிருந்தான்.கட்டங்கள் வழியே சரியாக முன்னேறி சென்றால் ஒரு விதமான ஒலி வரும்.தவறாக சென்றால் வேறு விதமான ஒலி உண்டாகும்.அந்த குறிப்பை கொண்டு சரியான திசையில் செல்லலாம்.அதோடு ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றத்தை குறிக்க கூடிய வகையில் ஒலிகளோடு வைரங்கள் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.அதே போல தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில் வேறு திசையில் சென்றால் சிலந்திகள் தோன்றுவது போல அமைக்கப்பட்டிருந்தது.அதையும் மீறி அதிக தொலைவு சென்று விட்டால் வெடி குண்டு வெடிப்பது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.
இது வரை எல்லாம் சரியாக இருந்தது.ஆனால் ஒரு கட்டம் வரை முன்னேறிய பிறகு திடிரென திரும்பி விட்டால் எல்லாமே மவுனமாக மாறிவிடுவது பெரும் சோதனையாக இருந்தது.அதன் பிறகு மிகவும் யோசித்து திரும்பி வரும் நிலை ஏற்பட்டால் சுவரில் முட்டிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் ஓலியை உண்டாக்கியதும் அந்த வீடியோ கேம் முழுமையானதாக அமைந்தது.
பல மாத போராட்டத்திற்கு பிறகு வீடியோ கேம் தயாரானதும் டைலன் பாட்டியிடம் அதை கொடுத்து விளையாட வைத்தான்.பாட்டியும் அதை ஆர்வத்தோடு விளையாடி மகிழ்ந்தார்.முதல் முறையாக அவருக்கும் பேரனின் ஆர்வம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது அந்த கேம் பாட்டியிடம் மட்டும் அல்ல அவனது நண்பர்களிடமும் பிரபலமாகி விட்டது.
———–
http://www.huffingtonpost.com/2012/04/16/dylan-viale_n_1429112.html

0 Comments on “பாட்டிக்காக பேரன் உருவாக்கிய வீடியோ கேம்!”
chollukireen
இப்படிப்பட்ட பேரனைப் பெற்றதில் பாட்டியோடு நாமும் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வோம். ஆச்சரியமாகத்தான் இருக்கு.
cybersimman
ஆம்,உண்மை தான்!.
Priya
பாட்டிக்காக கேம் உருவாக்கிய பேரனுக்கு வாழ்த்துகள்…………..
Priya
பாட்டிக்காக கேம் உருவாக்கிய பேரனுக்கு வாழ்த்துகள்……………..
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)