இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடியந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம்.
அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது.
முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது இசை தேவையை இந்த தளம் காட்சிரீதியாக நிறைவேற்றி தருகிறது.
பாடல்கள்,பாடகர்கள்,இசை வகைகள் என எல்லாமே வரிசையாக பட்டியலிப்பட்டிருக்கும் முறை அலுப்பு தரக்கூடியது என கருதுபவர்கள் இதன் முகப்பு பக்கத்தில் நுழைந்ததுமே சொக்கிப்போய் விடுவார்கள்.அதற்கு காரணம் இந்த தளமே இசை சுவராக வண்ணமயமாக வரவேற்பது தான்.!.
ஆம் தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் பாடகர்கள் ,இசை கலைஞர்களின் புகைப்படங்களாக நிறைந்திருக்கின்றது.எந்த படத்தை கிளிக் செய்தாலும் அந்த பாடகரின் பாடல்களுக்கான இணைய ஜன்னல் எட்டிப்பார்க்கிறது.பாடகரின் பாடலும் வீடியோ காட்சியோடு கேட்கத்துவங்கிறது.அந்த பாடகர் பிடித்தமானவர் என்றால் தொடர்ந்து அதே ஜன்னலில் அவரது பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.
இல்லை என்றால் வேறு பாடகரின் பாடலை கேட்க சென்று விடலாம்.பாடகரை தேர்வு செய்வது மிகவும் சுலபம்.இசை சுவற்றில் பாடகரின் படத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும்.
இந்த சுவர் பாடகர்களால் உருவாக்கியிருந்தாலும் இதில் நீங்கள் விரும்பிய பாடகர்கள் இல்லாமல் போகலாம்!அப்போதும் கவலைப்படவேண்டாம் உங்கள் மனதில் உள்ள பாடகரின் பெயரை டைப் செய்து தேடினால் அவருக்கான இசை ஜன்னல் வந்து நிற்கிறது.
முகப்பு பக்கத்தில் பெரும்பாலும் மேற்கத்திய பாடகர்களே ஆதிக்கம் செலுத்தினாலும் தேடல் பகுதியில் நமது இசைஞானியில் துவங்கி சித்ரா,யுவன்,ஹாரீஸ்,ரஹ்மான் என எல்லோரையும் கண்டுபிடிக்க முடிகிறது.பாடல் பட்டியல் முழுமையாக இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஏதுமில்லாத ஏமாற்றம் ஏற்படுவதில்லை.
அது மட்டும் அல்ல,ஒரு பாடகர் அல்லது இசையமைப்பாளரை தேடும் போது அவருடன் தொடர்புடைய மற்றவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ரஹ்மானை தேடும் போது யுவன் ,ஹாரீஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
பாடகர்களை கொண்டு தேடுவது மட்டும் அல்ல ஒவ்வொருவரின் மனநிலையை குறிப்பிட்டும் தேடும் வசதி இருப்பது கவரக்கூடியது.காதல் மனநிலைக்கேற்ற பாடல்கள்,உற்சாக மனநிலைக்கேற்ற பாடல்கள்,சோகமாக மூடுக்கேற்ற பாடல்கள் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதைத்தவிர வழக்கமான இசை வகைகளுக்கேற்ற படி தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
பேஸ்புக் மூலம் பதிவு செய்து கொண்டால் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் கூடுதல் வசதியும் இருக்கிறது.
தோற்றம் உள்ளடக்கம் என்று இரண்டிலுமே கவர்ந்திழுக்கும் இசைமயமான இணையதளம் இது.இல்லை வண்ணமயமான இசை சுவர் இது.இதில் சாய்ந்தபடி இசை இளைப்பாறலாம்.இனிமையான உலகில் சஞ்சரிக்கலாம்.
இணையதள முகவரி;http://www.uwall.tv/

3 Comments on “இசை கேட்கும் இணைய சுவர்.”
malar
உங்கள் பகிர்வுக்கு நன்றி…
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
cybersimman
தங்கள் தளம் சுவாரஸ்யமான புது முயற்சியாக உள்ளது.ஆனால் தான் தமிழ் பகுதி செயல்படவில்லை.எபோதும் பிழை காட்டுகிறது.தங்கள் தளம் பற்றி விரிவாக குறிப்பிட்டால் ஒரு அறிமுக பதிவு எழுத விரும்புகிறேன்.
அன்புடன் சிம்மன்
krishnamoorthy
THank you Boss