இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை.

அந்த விஷயம் இண்டெர்நெட் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கானதாக இருக்கிறது என்பது தான்.அதாவது இணைய பக்கங்களை பார்ப்பதற்கான மவுஸ் குறி வலது கை பழக்கம் கொண்டவர்களின் கை வாகிற்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் பலரும் இதனை பொருட் படுத்தியதாக தெரியவில்லை.ஆனால் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் என்ன செய்வார்கள்?

இடது கை பழக்கம் கொண்டவர்கள் இணையத்தை வலது கை பழக்கம் கொண்டவர்கள் பார்வையிலேயே தான் பயன்படுத்த வேண்டும்.யோசித்து பாருங்கள் இடது கையால் மவுசை நகர்த்தும் போது என்னவெல்லாம் சிக்கல் ஏற்படக்கூடும் என்று?

ஆனால் இணையத்தில் எல்லாவற்றுக்குமே தீர்வு உண்டு.இணையத்தின் இந்த சின்னஞ்சிறு குறையும் கவனிக்கப்பட்டு அதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம் இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் மவுஸ் குறியை மாற்றித்தரும் சேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தி இண்டெர்நெட் பார் த லெப்ட் ஹான்டர்ஸ் என்னும் அந்த சேவையின் மூலமாக குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பை பெற்று மவுஸ் நகர்வுகளை தங்கள் பார்வைக்கு ஏற்ற வகையில் இடது கை பழக்கம் கொண்டவர்கள் மாற்றிக்கொள்ளலாம்.

சில்வியோ லோருசோ என்னும் இத்தாலிய இணைய நிபுணர் இந்த சேவைய உருவாக்கியுள்ளார்.லோருசோவை மென்பொருள் கலைஞன் என்று சொல்லலாம்.இணையம் சார்ந்த கலைப்படைப்புகள் மற்றும் பயனுள்ள சேவைகளை இவர் உருவாக்கி வருகிறார்.அவற்றில் ஒன்று தான் இந்த சேவை.தனது பெயரிலேயே இணையதளம் வைத்திருக்கும் இவர் இத்தகைய சேவை மற்றும் டிஜிட்டல் கலை படைப்புகள் இந்த தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கு இணையத்தை நட்பானதாக ஆக்கும் முயற்சியாக இந்த சேவையை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இணையத்தில் எழுதுவதையும் வரைவதையும் பக்கத்தின் குறுக்குவாட்டாக செய்ய நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக டிஜிட்டல் நியாயம் கிடைத்துள்ளதாகவும் இந்த சேவையை அவர் வர்ணித்துள்ளார்.

இணையதள முகவரி; http://www.silviolorusso.com/home/project/the-internet-for-left-handers/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *