இந்திய ரெயில்வேக்கு நிகழ்ந்துள்ள அழகான விஷயம் என்ற வர்ணனையோடு ரெயில்ரேடார் தளத்தினை பர்ஸ்ட் போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது.இந்த வர்ணனை நூற்றுக்கு நூறு பொருத்தமானது என்பதை இந்த தளத்தை பார்த்ததுமே புரிந்து கொள்ளலாம்.
இந்த தளம் ரெயில் பயணிகளின் மனதிலும் ரெயிலில் பயணம் செய்பவர்களை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்கள் மனதிலும் உள்ள கேள்விக்கு சுலபமாக விடை காண உதவுகிறது.அதுவும் மிக அழகாக!
ரெயில்களின் நிலை அறிவதற்கான தளம் என்று சொல்லப்படும் இந்த தளம் குறிப்பிட்ட ரெயில் குறித்த நேரத்தில் வந்து கொண்டிருக்கிறதா அல்லது தாமதமாக வருகிறதா? என்னும் கேள்விக்கான விடையை வரைபடத்தின் மீது முன் வைக்கிறது.
கூகுல் வரைபடத்தை பயன்படுத்தும் இந்த தளம் அதன் மீது இந்திய நிலப்பரப்பெங்கும் சென்று கொண்டிருக்கும் ரெயில்களின் தற்போதைய நிலையை உணர்த்துகிறது.
இந்த தளத்தில் நுழைந்ததுமே இந்திய வரைபடம் தான் வரவேறகிறது.அதன் மீது சின்ன சின்ன அம்பு குறிகள் ஊர்ந்து கொண்டே இருக்கின்றன.நீல நிறத்தில் சில அம்புகள்.சிவப்பு நிறத்தில் சில அம்புகள்.இந்த அம்புகள் அந்த மார்கத்தில் பயணிக்கும் ரெயில்களை குறிக்கின்றன.சிவப்பு நிறம் என்றால் அந்த ரெயில் தாமதமாக சென்று கொண்டிருக்கிரது என பொருள்.நீல நிறம் என்றால் குறித்த நேரத்தில் சென்று கொண்டிருக்கிறது என பொருள்.
அம்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடம் இப்போது அந்த ரெயில் சென்று கொண்டிருக்கும் இடமாகும்.அந்த இடத்தில் கிளிக் செய்தால் எட்டிப்பார்க்கும் பெட்டியில் அந்த ரெயில் புறப்பட்ட நேரம்.செல்ல வேண்டிய நேரம்,தற்போதைய நிலை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
வரைபடத்தின் மீது அம்பு குறிகளாக இருப்பது எது எந்த ரெயில் என்ற குழப்பத்தை ஏற்படுத்தினால் கவலையே வேண்டாம் அருகே உள்ள தேடல் பகுதியில் ரெயிலின் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம்.குறிப்பிட்ட ரெயில் நிலையம் அடிப்படையிலும் தேடிப்பார்க்கலாம்.
இதோ இந்த நிமிடத்தில் எத்தனை ரெயில்கள் குறித்த நேரத்திற்கு சென்று கொன்டிருக்கின்றன எத்தனை ரெயில்கள் தாமதமாக செலுகின்றன என்ற விகிதாசாரமும் தளத்தின் மேல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது வரை 6500 ரெயில்களின் நிலை கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ரெயில்கள் சேர்க்கப்பட உள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய ரெயில் வலைப்பின்னலை கொண்டுள்ள பெருமை கொண்ட இந்திய ரெயில்வே தாமதமாக வந்து சேரும் ரெயில்களுக்கும் புகழ் பெற்றது.ஆனால் இது நாள் வரை ரெயில்களின் நிலை அறிய சரியான வழி இல்லை.ஒன்று ரெயில் நிலையம் சென்று கேட்க வேண்டும் இல்லை என்றால் செய்திகளில் விவரம் சொல்லப்படுகிறதா என கேட்க வேண்டும்.மாறாக ஒரே வரைபடத்தை விரித்து வைத்து அதன் மீது ரெயில்களின் இப்போதைய நிலையை சுட்டிக்காட்டும் இந்த இணையதளம் அருமையானது என்றே சொல்ல வேண்டும்.
இணையதள முகவரி;http://railradar.trainenquiry.com/

0 Comments on “ரெயில்களை பின் தொடர ஒரு இணையதளம்.”
Pingback: Miscellaneous | Annotary