முதலாளி அல்லது மேலதிகாரி மீதான ஆத்திரத்தையும் அதிருப்தியையும் கொட்டித்தீர்க்க என்றே இணையதளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் அறை நண்பர்கள் மீதான அதிருப்தியை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் இணையதளமாக ‘மை ரூம்மேட் சக்ஸ்’ இணையதளம் அறிமுகமாகியுள்ளது.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவை பற்றி புலம்பும் சந்தானத்தை போல அறை எடுத்து தங்கியிருக்கும் எல்லோருக்குமே தங்களது அறை தோழர்கள் பற்றி அலுத்து கொள்ளவும் புகார் சொல்லவும் அநேக விஷயங்கள் இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் இணைய வடிகாலாக விளங்கும் நோக்கத்தோடு தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உடன் தங்கியிருக்கும் நண்பர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பை இந்த தளத்தில் வெளியிடலாம்.டிவிட்டரில் குறும்பதிவு செய்வது போல இந்த தளத்திலும் நண்பர்கள் படுத்தும் பாட்டை பகிர்ந்து கொள்ளலாம்.அதிகபடசமாக 250 எழுத்துக்களில் கருத்துக்களை தெரிவித்து விட வேண்டும்.(முதலில் 160 எழுத்துக்கள் என இருந்த வரையரையை இப்போது உயர்த்தியுள்ளனர்)
உடன் வசிக்கும் நண்பர்கள் பற்றி புலம்பலை பதிவு செய்ய விரும்புகிறவர்கள் அதற்கு முன்னரோ பின்னரோ இதில் வெளியாகியுள்ள புகார்களை படித்துப்பார்க்கலாம்.
புகார்களில் தான் எத்தனை ரகங்கள்.சில கிண்டல்களாக இருக்கின்றன.சில இப்படியும் நண்பர்கள் இருப்பார்களா என யோசிக்க வைக்கின்றன.சில புகார்கள் பரிதாபம் கொள்ள வைக்கின்றன.
படிப்பதற்கு வசதியாக புதிய புகார்கள்,பிரபமான புகார்கள்,போசமானவை,சிறந்தவை என பல தலைப்புகளில் பட்டியலிட்டுள்ளனர்.
நண்பர்கள் பகிர்ந்து கொண்டுள்ள புகார்களை படித்து பார்க்கும் போது நாமும் இத்தகைய தவறுகளை செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்படலாம்.இல்லை நம் அறைத்தோழன் எவ்வளவோ பரவயில்லை என்ற ஆறுதலும் உண்டாகலாம்.அடிப்படை சுவாரஸ்யத்தை மீறி இந்த தளம் அளிக்கும் பயனாக இந்த புரிதலை கருதலாம்.
உலகில் குறையில்லாதவர்கள் யார் தான் சொல்லுங்கள்!
இணையதள முகவரி;http://myroommatesucks.org/
பி.கு;
இந்த தளத்தின் சகோதர தளமான பாஸ் பிரம் ஹெல் தளம் மேலதிகாரிகள் மீதான புகார்களையும் புலம்பல்களையும் பதிவு செய்ய உதவுகிறது.