ரெயில் டிக்கெட்களின் நிலை அறிய உதவும் இணையதளம்.

நீங்கள் அடிக்கடி நீண்ட தூர ரெயில் பயணம் மேற்கொள்கிறவர் என்றால் நிச்சயம் இந்திய ரெயில்வேயின் முன்பதிவு வசதி தளமான ஐசிஆர்டிசி தளத்தை அறிந்து வைத்திருப்பீர்கள்.அதோடு மைபிஎன்ஆர் இணையதளத்தை அறிந்து வைத்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தளம் ஒரே கிளிக்கில் ரெயில் டிக்கெட்டின் பிஎன்ஆர் எண் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது.

இந்த வசதி தான் ரெயில்வே இணைய‌தளத்திலேயே இருக்கிறதே என்று விவரம் அறிந்தவர்கள் அலட்சியத்தோடு கேட்கலாம்.உண்மை தான் ரெயில்வே தளத்திலே பிஎன்ஆர் எண் நிலை அறியும் வசதி இருக்கிறது.

இந்த வசதியை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு ஐசிஆர்டிசி இணையதள வடிவமைப்பு சிக்கலானதாக இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க முன்பதிவு டிக்கெட் உறுதியாகிவிட்டதா என அறிய அவப்போது இந்த தளத்திற்கு விஜயம் செய்து பிஎன்ஆர் எண்ணை டைப் செய்து பார்த்து கொண்டிருக்க வேண்டும்.

இது பொறுமையை சோதிக்ககூடியது மட்டும் அல்ல பொன்னான நேரத்தை விரயமாக்க கூடியது.

இந்த விரயத்தை தவிர்த்து பயணிகள் டிக்கெட்டின் நிலையை சுலபமாக அறிந்து கொள்ளும் விதத்தில் மைபிஎன்ஆர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பிஎன்ஆர் எண்ணை இந்த தளத்தில் சமர்பித்தால் அதன் அபோதைய நிலையை தெரிந்து கொள்ளலாம் .அப்படியே தங்கள் செல்போன் எண்ணை சமர்பித்தால் டிக்கெட்டின் நிலை மாறும் போது அந்த தகவலை எஸ் எம் எஸ் மூலமாக இந்த தளம் தெரிவிக்கிறது.

அதாவது பயணிகள் சார்பில் அவர்கள் பிஎன்ஆர் எண் நிலையை கண்காணித்து அதில் மாற்றம் வந்தவுடன் அதனை தெரிவிக்கிறது.

மிகவும் பிசியானவர்கள் முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் நிலை என்ன ஆயிற்று என்று அறிய தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இணையத்தில் அதனை பார்த்து சொல்ல கேட்பதுண்டு அல்லவா?

இப்படி முன்பதிவு செய்த எல்லோர் சார்பிலும் பிஎன்ஆர் எண் நிலையை கண்காணித்து சொல்கிறது இந்த தளம்.அதிலும் அழகாக செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கிறது.இந்த தகவலை இமெயில் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் சார்பில் உங்கள் வேலையை யாரோ ஒருவர் செய்து கொன்டிருக்கின்றனர் என்ற உணர்வு ஏற்படுவது சிறந்தது தானே அதை தான் செய்கிறோம்(இலவசமாக) என்றும் இந்த தளம் பெருமை பட்டுக்கொள்கிறது.

இதற்கென எழுதப்பட்ட நிரல் இந்த பணியை செய்தாலும் பயணிகளை பொறுத்தவரை இது பயனுள்ள சேவை என்பதில் சந்தேகம் இல்லை.

விஷால் குப்தா என்னும் பெங்களுரை சேர்ந்த மென்பொருள் வல்லுனர் இந்த தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

பிஎன்ஆர் எண் நிலை மட்டும் அல்ல டிக்கெட் உறுதியாகி விட்டது என்றால் அந்த ரெயில் குறித்த நேரத்தில் புறப்படுமா அல்லது ஏதேனும் தாமதம் இருக்கிறதா போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தை உருவாக்கிய விஷால் குப்தா கூடுதல் வசதிகளையும் இந்த தளத்தில் இணைக்க திட்டமிட்டுருக்கிறார்.(நன்றி யூவர்ஸ்டோரி)நல்ல விஷயம் தான் செய்யடும்.

இணையதள முகவரி;http://www.mypnr.in/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ரெயில் டிக்கெட்களின் நிலை அறிய உதவும் இணையதளம்.

  1. மாதம் தவறினாலும் சென்னை போகத் தவறாத என்னை போன்றவர்களுக்கு இந்த தளம் இகவும் உபயோகப் படும்.

    அறிமுகத்திற்கு நன்றி!

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி

      Reply
  2. நல்ல தகவல் நண்பரே.

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே

      Reply
  3. கட்டணம் வசூல் செய்யும் ரயில்வே நிர்வாகமே சிந்திக்காத சிந்தனை! அத்தளத்திற்கும், அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிகள்.

    Reply
    1. cybersimman

      சரியாக சொன்னீர்கள் நண்பரே,இந்திய ரெயில்வே அறிமுகம் செய்திருக்க வேண்டிய வசதி இது.

      அன்புடன் சிம்மன்

      Reply
  4. பல பேருக்கும் உதவும் தகவல்……..பகிர்வுக்கு மிக்க நன்றி…..

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply
  5. மிக்க நன்றி நண்பா….!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *