இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கிறது.
வழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இலக்காக உங்கள் கணவினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது.
எல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை அடைய வேண்டும் என்ற இலக்கும் இருக்கும்.ஆனால் இலக்கை அடைவதற்கான வேட்கையும் தீவிரமும் தான் நபருக்கு நபர் மாறுபடும்.பலர் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருப்பார்கள் ஆனால் செய்யாமல் தள்ளிப்போட்டு விடுவார்கள்.சிலருக்கு செய்து முடிப்பதற்கான ஊக்கம் இல்லாமல் போகலாம்.
நினைத்தை எல்லாம் அடைவதற்கான வழி என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை குறித்து வைத்து கொளவது நல்ல வழி.இதற்காக என்றே செய்து முடிக்க விரும்பும் விஷயங்களை படிட்டியலிட்டு கொள்ள உதவும் இணைய குறிப்பேடு தளங்கள் பல இருக்கின்றன.
ஆனால் செய்ய விரும்பும் செயல்களை பட்டியல் போட்டு விட்டால் மட்டும் போதுமா,அவற்றை செய்து முடிக்க வேண்டாமா?
இந்த இடத்தில் இருந்து முன்னேறி செல்வதற்கான வழி காட்டுவது தான் அகம்ப்லிஷ் தளத்தின் சிறப்பாக இருக்கிறது.
இந்த தளம் விருப்ப செயல்களின் பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வைத்து அதன் மூலம் செயல்பாட்டிற்கான ஊக்கத்தை பெற வழி செய்கிறது.
இந்த தளத்தில் “நான் இதை செய்து முடிக்க விரும்புகிறேன்”என்று ஏதாவது ஒரு செயலோடு துவங்க வேண்டும்.அது தினமும் ஒரு புத்தகத்தில் இருந்து பத்து பக்கம் படிக்க வேண்டும் என்னும் எளிய விருப்பமாக இருக்கலாம்.அல்லது சிறுகதை எழுதும் விருப்பமாக இருக்கலாம்.விருப்பங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
முதல் விருப்பத்தை தெரிவித்தவுடன் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.அதன் பிறகு தான் விஷயமே இருக்கிறது.முதல் விருப்பத்துடன் சேர்த்து மொத்தம் பத்து விருப்பங்களை குறிப்பிட வேண்டும்.அவை தான் நாம் அடைய நினைக்கும் இலக்கு.
பத்து விருப்பங்களை பட்டியலிட்டவுடன் அந்த பக்கம் பூட்டப்பட்டு விடும்.அதாவது அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ள எந்த விருப்பத்தையும் நீக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது.அவற்றை செய்து முடிப்பதை தவிர வேறு வழியில்லை.
செய்து முடிக்க நினைத்த செயல்கள் மீது உறுப்பினர்களுக்கு ஒரு இறுக்கமான பற்றும் ஈடுபாடும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு விருப்பங்களின் பட்டியல் பூட்டப்பட்டு விடுகிறது.
ஆக எப்போது இந்த தளத்தில் நுழைந்தாலும் நாம் இதை எல்லாம் செய்ய விரும்பியிருக்கிறோம் என்பது உறுப்பினர்களின் கவனத்திற்கு வந்து கொண்டே இருக்கும்.அது மட்டும் அல்ல அந்த செயலின் நிலை பற்றியும் சுட்டிக்காட்ட்பட்டிருக்கும்.செயலை செய்து முடித்திருந்தால் பச்சை வண்ணத்திலும் செய்து முடிக்க விட்டால் சிவப்பு வண்ணத்திலும் செய்து கொண்டிருந்தால் ஆரஞ்சு வண்ணத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
கிட்டத்தட்ட உறுப்பினர்களுக்கான முன்னேற்ற அறிக்கை போலவே இந்த பக்கம் அமைந்திருக்கும்.இது தரக்கூடிய ஈடுபாடும் ஊக்கமும் அலாதியானது.
இந்த விருப்ப பட்டியலை தளத்தின் மூலம் மற்ற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படி பகிர்தல் மூலம் ஏற்படக்கூடிய சமூக தன்மையே இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம்.
உறுப்பினர்கள் பட்டியலிட்ட விருப்பங்களை பார்த்து நண்பர்கள் அதனை செய்து முடிக்க ஊக்கம் அளிக்கலாம்.செய்து முடிக்காவிட்டால் உரிமையோடு கேள்வி கேட்டு முடுக்கி விடலாம்.அந்த செயல் தொடர்பான தங்கள் அனுபவத்தையும் கருத்துக்களாக பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படி மற்ற உறுப்பினர்களின் விருப்ப பட்டியலையும் பார்வையிடலாம்.மற்றவர்கள் விருப்ப செயல்களை பார்க்கும் போது அதுவும் ஒரு வகையில் ஊக்கத்தை ஏற்படுத்தலாம்.
யாருடைய விருப்ப பட்டியலாவது ஆர்வத்தை ஏற்படுத்தினால் அந்த நண்பரை டிவிட்டரில் செய்வது போல பின் தொடரலாம்.இப்படி பின் தொடரும் போது அந்த நண்பரின் முன்னேற்றத்தையும் பின் தொடர் முடியும்.இதே போல நம்மையும் பின் தொடரக்கூடிய நண்பர்கள் கிடைக்கலாம்.
செய்ய விரும்பும் செயல்கள் அடிப்படையில் நட்பை தேடிக்கொள்ள உதவும் இந்த தளம் அந்த நட்பு மூலமே நினைத்தை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் தருகிறது.
இணையதள முகவரி;http://accompl.sh/

0 Comments on “எதையும் அடைய ஒரு தளமிருந்தால்!”
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
வணக்கம்
மிகவும் அருமையாக எழுதியுள்ளிர்கள் நல்ல கருத்து அனைவருக்கும் பயன் பெறும் கருத்து துளிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் பதிவை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
cybersimman
மிக்க நன்றி நண்பரே.தொடர்ந்துவாருங்கள்.கருத்து கூறுங்கள்
ஆரா .
good indeed
cybersimman
ஆம் நிச்சயம் நல்ல தளம் தான்.தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!