நண்பர்களுக்கு பரிசளுக்க விரும்பினால் சின்னதாகவோ பெரிதாகவோ ஏதேனும் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து விடலாம் தான்.ஆனால் நாம் கொடுக்கும் பரிசு நண்பர்களுக்கு பிடித்தமானதாக,அதனை பார்த்ததும் அவர்கள் முகத்தில் புன்னகை வரவைக்க கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது கொஞ்சம் சவலானது தான்.
நண்பர்களுக்கு இந்த பரிசு பிடிக்குமா அந்த பரிசு பிடிக்குமா என்று யோசித்து குழம்புவதைவிட ‘எங்கே ஒரு நள்ள பரிசாக சொல்?’ என்று கேட்டால் பதில் சொல்லக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் ரெட்ரோகிப்ட் இணையதளம் நண்பர்களுக்கான பரிசுப்பொருட்களை பரிந்துரைக்கிறது.அதிலும் கொஞ்சம் புதுமையான முறையில் பரிந்துரைக்கிறது.
அந்த நாள் நினைவுகளை அடிப்படையாக கொண்டு பரிசுபொருளை பரிந்துரைக்கிறது.
அதாவது திரைப்படங்களில் பிளேஷ்பேக் உத்தி கையாளப்படுகிறது அல்லவா?அதே போல இந்த தளம் பரிசு பெறும் நண்பருக்கு பிளேஷ்பேக் நினைவை உண்டாக்ககூடிய பரிசை முன்வைக்கிறது.
நண்பரின் பிறந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு இந்த பரிந்துரைக்கப்படுகிறது.
இதற்காக இந்த தளத்தில் நண்பரின் பிறந்த ஆண்டை சமர்பித்தால் போதும் உடனே அந்த கால கட்டம் தொடர்பான நினைவுகளை கிளறக்கூடிய பரிசுகளை பட்டியலிடுகிறது.
அந்த கால சுவரொட்டிகள்,இசைத்தட்டுகள்,வீடியோகேம்கள் என பரிசுகள் பல வகையில் இருக்கின்றன.பரிசுகள் தனித்தனி தலைப்புகளீலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.எந்த வகை தேவையோ அதில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.
பசுமை நிறைந்த நினைவுகளே என்று அந்த கால நினைவுகளில் மகிழாதவர் யார் தான் இருக்கின்றனர்.எனவே பிறந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு அந்த கால கட்ட நினைவுகளை அசைபோடச்செய்யும் பரிசுகளை கைகாட்டும் இந்த தளம் சுவாரஸ்யமானதே.
ஆனால் இந்த தளத்தில் உள்ள ஒரே குறை இதன் அமெரிக்க வாடை அல்லது சர்வதேச மணம்.
ஆண்டை சமர்பித்ததும் ராஜாவின் பாட்டோ எம் எஸ் வீ பாட்டோ அல்லது முகேஷின் பாட்டோ அல்லது பட்டோடி சதம் அடித்த போஸ்டரோ வந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி.
இணையதள முகவரி;http://retrogiftsco.com/
(பி.கு;உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களாக பதிவிட முடியவில்லை)

0 Comments on “அந்த நாள் பரிசுகள்!”
சாக்பீஸ்
உடல் நலம் மிக முக்கியம். நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
cybersimman
பரிவுக்கு மிக்க நன்றி நண்பரே.
chollukireen
;சீக்கிரமே நலம்பெற வேண்டுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
cybersimman
நலமாகி கொண்டிருக்கிறேன்.பாசத்திற்கு மிக்க நன்றி.
basith
அருமை