திமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர்.
ஆனால் மூன்றாம் அணி கட்சிகளும் எண்ணற்ற உதிரி கட்சிகளும் இருப்பது போல வலைப்பதிவு சேவையிலும் மேலும் பல இருக்கின்றன.
இவற்றில் டம்பலரை மாற்று சேவை என குறிப்பிடலாம்.வலைப்பதிவின் மேம்ப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய டம்பலர் வலைப்பதிவு சேவை இணைய பகிர்வை எளிதாக்கி தருகிறது.
இதே போலவே சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற வலைப்பதிவு சேவையாக ஓவர்பிலாக் அமைந்துள்ளது.
பிலாகர்,வேர்டுபிரஸ் போலவே இதிலும் புதிய வலைப்பதிவை துவக்குவது மிகவும் எளிதானது.
ஆனால் இதன் சிறப்பம்சம் சமூக வலைப்பின்னல் பகிர்வுக்கான வசதியாகும்.இதில் பதிவுகளை வெளியிடுவதோடு பேஸ்புக்,டிவிட்டர்,பிலிக்கர் போன்ற உங்களது சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை இதில் எளிதாக சேர்த்து கொள்ளலாம்.
வேர்டுபிரஸ் உள்ளிட்ட சேவைகளிலும் பயனாளிகள் தங்கள் பேஸ்புக்,டிவிட்டர் பதிவுகளை இணைத்து கொள்ளும் வசதி இருந்தாலும் அவற்றை தனித்தனியே சேர்த்தாக வேண்டும்.ஆனால் ஓவர்பிலாக் சேவை எல்லா சமூக வலைப்பின்னல் பகிர்வுகளையும் தானாகவே உடனடியாக இணைக்கும் வசதியை தருகிறது.
இணையத்தில் எந்த இடத்திலும் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் இங்கே சேர்க்கப்படும் என்று இந்த சேவை பெருமையோடு குறிப்பிடுகிறது.
இந்த வசதி உட்பட மொத்தம் பத்து காரணங்களுக்காக தனது சேவையை பயன்படுத்தி வலைப்பதிவு செய்யலாம் என்று ஓவர்பிலாக் அழைக்கிறது.
இலவசமானது போன்ற வழக்கமான காரணங்கள் அதில் இருந்தாலும் அதிக அளவிலான வடிவமைப்பு தேர்வு வசதி மற்றும் வருவாய் பகிர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அதே போல பகிரப்படும் தகவல்கள் உடனடியாக செல்போன் வாயிலாகவும் வெளியிடப்படும் வசதியும் இருக்கிறது.
டெஸ்க்டாப்,செல்போன்,ஐப்பேட் என எல்லா வகையான சாதங்களிலும் வலைப்பதிவு அட்டகாசமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலைப்பதிவு சேவையை மாற்றலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களும் பேஸ்புக் பிரியர்கள் டிவிட்டர் அபிமானிகளும் பயன்படுத்தி பார்க்கலாம்.தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் வலைப்பதிவில் இருந்து இதற்கு எளிதாக மாறிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.மாற்றத்திற்கு நீங்கள் தயாரா?
இணையதள முகவரி;http://en.overblog.com/

1 Comments on “புதியதோர் வலைப்பதிவு சேவை!.”
dinapathivu
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி