நீங்கள் எப்படி டிவிட்டர் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?அதாவது குறும்பதிவுகளில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்ன?நீங்கள் பதிவிடும் தலைப்புகள் என்ன?உங்கள் அபிமான ஹாஷ்டேகுகள் என்ன என்ன?ஒரு நாளில் எத்தனை முறை குறும்பதிவிடுகிறீர்கள்?
இத்தகைய விவரங்கள் உங்களுக்கு தேவை என்றால் ‘டிவீடைல்ஸ்’ இணைய தளம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றித்தருகிறது.இந்த தளம் டிவிட்டர் கணக்கை பகுப்பாய்வு செய்து நீங்கள் டிவிட்டர் செய்யும் விதம் குறித்த தகவல்களை முன் வைக்கிறது.
இப்படி டிவிட்டர் கணக்கை அலசி ஆராய்ந்து ஒருவரின் டிவிட்டர் பயன்பாடு பற்றிய விவரங்களை தருகிறது.
இதில் உங்களது டிவிட்டர் கணக்கை சமர்பித்து அதற்கான அறிக்கையை பெறலாம்.அல்லது மற்றவர்களின் டிவிட்டர் கணக்கை சமர்பித்தும் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான சேவை .ஆனால் ஆங்கிலத்தில் டிவிட்டர் செய்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்தலாம்.
இந்த தளத்திலேயே டிவிட்டர் தொடர்பான மேலும் இரண்டு சேவைகள் உள்ளன.
ட்வீட்டெலிட் என்னும் சேவை உங்கள் பழைய குறும்பதிவுகளை டெலிட் செய்ய உதவுகிறது.டிவிட்டரில் நீங்கள் வெளியிட்ட கருத்துக்களின் சுவடுகள் மறைந்துவிட வேண்டும் என்று விரும்பினால் இந்த சேவையை நாடலாம்.
டிவீட்டவுண்லோடு சேவை இதற்கு மாறாக உங்கள் குறும்பதிவுகளை அனைத்தையும் டவுண்லோடு செய்து சேமிக்க உதவுகிறது.
இணையதள முகவரி;http://www.tweetdelete.net/