புகைப்படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி!

திடிரென்று பார்த்தால் இணையத்தில் எங்கு பார்த்தாலும் புகைப்படங்களாக இருக்கின்றன.பேஸ்புக்கில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன‌.டிவிட்டரில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன.வலைப்பதிவு சேவையான டம்ப்லரிலும் புகைப்படங்கள் நிறைந்திருக்கிறது.

இவற்றைத்தவிர இன்ஸ்டாகிராம் போன்ற பிரத்யேக புகைப்பட சேவைகளும் இருக்கின்றன.முன்னோடி புகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கரையும் மறந்துவிடுவதற்கில்லை.

ஆக இணையம் புகைப்படமயமாகி வருகிறது.

ஒரு விதத்தில் துல்லியமான படங்களை எடுக்க வல்ல காமிரா போன்களின் வருகையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதும் பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கும் நிலையில் புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான வழியும் மேம்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தான் செல்ல வேண்டும்.

இதற்கு அழகான உதாரணமாக ‘பிக் ஷோ’இணையதளம் அறிமுகமாகியுள்ளது.

பிக் ஷோ தளம் இணையத்தில் வெளியாகும் புகைப்படங்களில் இருந்து தேவையான படங்களை புகைப்பட தொகுப்பாக உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.அதாவது பேஸ்புக்,டிவிட்டர்,பிலிக்கர்,இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகளில் பகிரப்படும் புகைப்படங்களில் இருந்து இணையவாசிகளின் விருப்பத்திற்கு ஏற்ற புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை தொகுப்பாக மாற்றிக்கொள்ள வைக்கிறது.

இணையத்தின் இப்போதைய பரிபாஷையான ஹாஷ்டேக் அடிப்படையில் புகைப்பட தொகுப்பை உருவாக்கி கொள்ள உதவுகிறது என்பதே விஷயம்.

ஹாஷ்டேக் என்பது பகிரப்படும் தகவல் அல்லது புகைப்படத்தின் பொதுத்தனமையை உணர்த்தி அவற்றை அடையாளப்படுத்தும் குறிச்சொற்களாகும்.

டிவிட்டர் ,பேஸ்புக் போன்ற சேவைகளில் பகிரப்படும் புகைப்படங்கள் இப்படி ஹாஷ்டேக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன.

பிக் ஷோ தளம் இத்தகயை ஷாஷ்டேக்களை அடிப்படையாக கொண்ட புகைப்படங்களை பல்வேறு சேவைகளில் இருந்து உருவி தொகுத்தளிக்கிறது.

இணையவாசிகள் எந்த வகையான புகைப்படங்களை பார்த்து ரசிக்க விரும்புகின்றனறோ அதற்கான ஹாஷ்டாகை டைப் குறிப்பிட்டால் அந்த அடையாள சொல் கொண்ட படங்களை எல்லாம் தொகுப்பாக பார்த்து ரசிக்கலாம்.பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,டிவிட்டர்,பிலிக்கர்,டம்ப்லர்,லாகர்ஸ்,மோபிபிக்சர் ஆகிய புகைப்பட பகிர்வு சேவைகளில் இருந்து தொடர்புடைய புகைப்படங்களை அடையாள சொல் மூலம் இந்த தளம் திரட்டி தருகிறது.

இந்த தொகுப்புகள் புகைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்துவிடும் தன்மை கொண்டிருக்கின்றன.

காரணம் எந்த தலைப்பில் புகைப்படங்களை காண ஆர்வமோ அந்த தலைப்பில் இணையத்தின் மூளை முடுக்களில் பகிரப்பட்ட படங்களை எல்லாம் திரட்ட ஒரே பக்கத்தில் வரிசையாக பட்டியலிட்டு தருகிறது.பேஸ்புக்,டிவிட்டர் என எங்கெல்லாமோ பகிரப்பட்ட படங்களை வரிசையாக பார்த்து கொண்டே இருக்கலாம்.

உதாரணத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமீபத்திய கிரிக்கெட் போட்டி தொடர்பாக இணையவெளியில் வெளியான படங்களை எல்லாம் வரிசையாக பார்க்கலாம்.சச்சின் ரசிகர்கள் அவரது படங்களை எல்லாம் ஒரே தொகுப்பாக பார்க்கலாம்.

இதே போல அபிமான நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் ஒரு சேர பார்க்கலாம்.

இப்படி ரசிகர்களால் தேடப்படும் புகைப்படங்களின் அடிப்படையில் பிரபலமான ஹாஷ்டாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றையும் கிளிக் செய்து ப‌டங்களை பார்க்கலாம்.இந்த தொகுப்பகளிலே கூட மாற்றங்களை செய்து புகைப்படங்களை சேர்த்து புதிய தொகுப்பை உருவாக்கி கொள்ளலாம்.

தொகுப்பை உருவாக்க முயலும் போது எந்த சேவைகளில் இருந்து படங்கள் தேவை என்று குறிப்பிடும் வசதியும் இருக்கிறது.அதே போல தொகுப்பில் உள்ள ப‌டங்களில் விருப்பமில்லா படங்களை நீக்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இந்த தொகுப்புகளை அப்படியே சேமித்து வைத்து கொள்ளலாம்.பேஸ்புக்,டிவிட்டர் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://picsho.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *