எனக்கொரு பாடல் வேணுமடா!

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்களை கேட்டு ரசிப்பதே இனிமையானது என்று நீங்கள் நினைத்தால் சென்ட்2மீ தளம் உங்களை சொக்க வைத்து விடும்.

காரணம் இந்த தளம் உங்கள் நண்பர்களிடம் இருந்து பாடல்களை பெறுவதற்கு வழி செய்கிறது.அதே போல நீங்களும் கூட உங்கள் நண்பர்களுக்கு பாடல்களை அனுப்பி வைக்கலாம்.

இணையம் வழி பாடல் பகிர்வு தளங்கள் பல இருந்தாலும் இந்த தளம் நண்பர்களுடன் நேரடியாக உங்களுக்கு பிடித்த பாடலை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டது.

சென்ட்2மீ தளத்தில் அதன் பெயருக்கேற்பவே யார் வேண்டுமானாலும் உங்களுக்கு பாடலை பரிந்துரையோடு அனுப்பி வைக்கலாம்.இதற்காக முதலில் பேஸ்புக் வழியே இந்த தளத்தில் உறுப்பினர் பக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு பாடல்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைக்கலாம்.

நண்பர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை அல்லது உங்களுக்கு பிடிக்ககூடும் என கருதும் பாடலை அனுப்பி வைக்கலாம்.பாடலை அனுப்புவது மிகவும் சுலபம்.அந்த பாடலின் யூடிப்பு இணைப்பை கொடுத்து விட்டால் போதுமாது.இந்த இணைப்போடு அந்த பாட்டுக்கான தனிப்பட்ட குறிப்பையும் எழுதி அனுப்பலாம்.இந்த குறிப்பு பாடல் சார்ந்ததாக இருக்கலாம்.அல்லது பாடலை அனுப்புவதற்காக காரணமாக இருக்கலாம்.

இசை சார்ந்த உரையாடலில் போது நண்பர்கள் பரஸ்பரம் கேட்டு ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்வது உண்டல்லவா?இது வரை கேட்டிராத இனிய பாடல்களை மறைந்திருக்கும் இசை முத்துக்களை கண்டறிய இத்தகைய உரையாடல்களே சிறந்த வழி.

அது போலவே இந்த தளம் நண்பர்கள் பரிந்துரை வாயிலாக புதிய பாடல்களை கேட்டு ரசிக்க வைக்கிறது.

நீங்களும் கூட உங்கள் பங்கிற்கு நண்பர்களுக்கு யூடியூப் இணைப்பாக பாடலை அனுப்பலாம்.நண்பர்கள் வட்டம் விரிய விரிய பாடல்களின் பரப்பும் விரியலாம்.இந்த தளத்தின் மூலம் நண்பர்களை பின் தொடர்ந்து புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பிறந்த நாள் மற்றும் திருமண நாளுக்கு இப்படி நண்பர்களுக்கு இசைமயமாக வாழத்து சொல்லலாம்.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் யார் யாருக்கு அனுப்பியது என பாடல்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.அதன் மூலமும் புதிய பாடலை கேட்கலாம்.அதே போல புதிய பயனாளிகளின் அறிமுகமும் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது.

உங்கள் நண்பர்களை இந்த வலைப்பின்னலுக்குள் அழைப்பதோடு இதில் உள்ள நபர்களையும் அவர்கள் கேட்டு ரசிக்கும் இசை மூலமாக அறிமுகம் செய்து கொண்டு நட்பாக்கி கொள்ளலாம்.

இப்போதைக்கு இந்த தளம் முழுவதும் பாப் பாடல்களின் ஆதிக்கம் தான்.

ஆனால் நம் பங்கிற்கு இளையராஜாவையோ ரஹ்மானையோ எம் எஸ் வியையோ ஆர்டி பர்மனையோ பகிர்ந்து கொள்ள எந்த தடையும் இல்லை.

இணையதள முகவரி;http://www.sendmusic2.me/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *