காலுறைகளுக்கான இணையதளம்.

ஒரே மாதிரியான காலுறைகளை (சாக்ஸ்)வாங்கி அலுத்து போய் விட்டதா?கொஞ்சம் வண்ணமயமான அழகான வடிவமைப்பு கொண்ட காலுறைகள் கிடைத்தால் ந‌ன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறதா?அப்படியென்றால் ஃபூட்ஸி.இன் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்,அசந்து போய் விடுவீர்கள்.அந்த அளவுக்கு வித்தியாசமான வடிவமைப்பில் வண்ணமயமான காலுறைகள் வரவேற்கின்றன.

சிறுவர்கள்,பெண்கள்,ஆண்கள் என எல்லோருக்கும் ஏற்ற அசத்தலான காலுறைகள் இந்த தளத்தின் மூலம் வாங்கி கொள்ளலாம்.காலுறைகள் மட்டும் அல்ல லேஸ் மற்றும் காலில் அணியக்கூடிய இன்னும் பிறவற்றையும் வாங்கலாம்.

சீமா மற்றும் பூஜா ஆகிய இரண்டு தோழிகள் இந்த தள‌த்தை நடத்தி வருகின்றனர்.சீமா கல்லூரியில் படிக்கும் போது மற்றவர்கள் கவனத்தை கவரும் வகையில் வெவ்வேறு நிறம் கொண்ட காலுறைகள் மாற்றி அணியும் வழக்கம் கொண்டிருந்தாராம்.

பின்னர் வடிவமைப்பு துறையில் பட்டம் பெற்ற பிறகு காலுறைகளில் கொஞ்சம் கைவண்ணத்த புகுத்தலாமே என்ற எண்ணம் ஏற்பட்டு இந்த இணையதளத்தை துவக்கினார்.

இன்று கலைவண்ணம் கொண்ட பல வண்ண காலுறைகளின் இருப்பிடமாக இந்த தளம் திகழ்கிற‌து.மற்ற பிராண்ட்களின் காலுறைகளும் இப்போது கிடைக்க துவங்கியுள்ளன.

இணையதள முகவரி;http://www.footsy.in/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “காலுறைகளுக்கான இணையதளம்.

  1. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி…..

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *