கேள்வி பதில் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போல கருத்து கணிப்பு இணையதளங்களும் பல இருக்கின்றன.இந்த இரண்டையும் சேர்த்து வழங்குகிறது டிவெல்லோ .
விவாதங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்று வர்ணித்து கொள்ளும் டிவெல்லோ இந்த இரண்டையும் இணைப்பதன் மூலம் விவாதத்தை சாத்தியமாக்குகிறது.
எது பற்றி விவாதிக்க விருப்பமோ அதற்கான கேள்வியை டிவெல்லோவில் கேட்கலாம்.கேள்விக்கான கட்டத்தின் கீழ் அதனோடு உடன்பட அல்லது மாறுபட என இரண்டு வாய்ப்புகள் இருக்கும்.சக உறுப்பினர்கள் அதில் கிளிக் செய்துவிட்டு ஏற்பதற்கான அல்லது மாறுபடுவதற்கான காரணத்தை தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு கருத்திற்கும் ஆதரவு எத்தனை எதிர்ப்பு எத்தனை என்று தெரிந்து கொள்வதோடு மற்றவர்களின் கருத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இணையவாசிகள் விரும்பினால் மற்றவர்களின் விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.குறிப்பிட்ட உறுப்பினரை பின்தொடரும் வசதியும் இருக்கிறது.
புதிய விவாதங்கள்,அதிகம் விவாதிக்கப்பட்டவை என தனித்தனி தலைப்புகளின் கீழ் விவாதங்கள் முகப்பு பக்கத்திலேயே இடம் பெறுகின்றன.
விவாதங்களுக்கான வலைப்பின்னல் என்னும் அறிமுகம் ஏற்படுத்தும் ஆர்வத்தை மீறி கேள்விகளிலோ அல்லது கருத்துக்களிலோ அதிக சுவாரஸ்யம் இல்லை.புதிய தளம் என்பதால் போதிய உறுப்பினர்கள் இன்னும் சேரவில்லை.ஆனால் உறுப்பினர்களை கவர்ந்திழுப்பதற்கான் அறிகுறையையும் காண முடியவில்லை.