இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அதைவிட சுலபமாக இணையத்திலேயே உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்தத்தை தேடுவது சுலபமாக இருக்கிறது.
பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதி முதல் கொண்டு மரியம் வெப்ஸ்டர் அகராதி வரை அனைத்து புகழ் பெற்ற அகராதிகளின் இணைய பதிப்பு இருப்பதோடு தி ப்ரி டிக்ஷனரி,ஒன்லுக்டாட் காம் போன்ற இணைய அகராதிகளும் இருக்கின்றன.
எனவே இணையத்தில் பொருள் தேடுவது ரொம்பவே சுலபமானது தான்.
சுட்டிசாகிய நீங்களும் கூட இந்த இணைய அகராதிகளை பயன்படுத்தி ஆங்கில கட்டுரைகளை,புத்தகங்களை படித்து மகிழலாம்.
இப்படி அகராதியை பயன்படுத்துவதில் ஆர்வம் இருந்தால் உங்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள இணைய அகராதியையும் பயன்படுத்தி பார்க்கலாம்.
லிட்டில் எக்ஸ்பிலோரர் என்னும் அந்த இணைய அகராதி சுட்டிஸ் பொருட்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் அழகான புகைப்பட அகராதியாக அமைந்துள்ளது.ஆம் இந்த அகராதி சிறுவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் வார்த்தைகளுக்கான அர்தத்தை புகைப்படத்தின் துணையோடு பார்த்து புரிந்து கொள்ளலாம்.
என்சேன்டட் லேனிங் டாட் காம் என்னும் கல்வி தளத்தின் ஒரு அங்கமான இந்த இணைய அகராதியில் ஆங்கில எழுத்துக்கள் அகர வரிசைப்படி இடம் பெற்றுள்ளன.உங்களுக்கு எந்த சொல் தேவையோ அந்த சொல்லுக்கான எழுத்தை கிளிக் செய்தால் அந்த எழுத்தில் துவங்கும் வார்த்தைகளின் பட்டியல் தோன்றுகின்றன.
எல்லா வார்த்தைகளும் மிக அழகாக அவற்றுக்கான புகைப்பட விளக்கத்தோடு இருப்பதால் அந்த சொல் உணர்த்தும் பொருளை காட்சி ரீதியாகவும் புரிந்து கொள்ளலாம்.அவற்றுக்கான எளிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.
அது மட்டும் அல்ல பெரும்பாலான வார்த்தைகளுக்கு தனி பக்கமும் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.அந்த பக்கத்தில் கிளிக் செய்தால் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதோடு தொடர்புடைய வார்த்தைகளின் இணைப்புகளையும் பார்க்கலாம்.
அகர வரிசை எழுத்துக்களின் கீழ் பார்த்தால் வரிசையாக பல்வேறு வகையான சொற்களின் பட்டியலும் இருக்கிறது.வினைச்சொல்,பறவைகள்,ஆடைகள்,கணிதம்,உனவு ,இசை என விதவிதமான பிரிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த சொற்களை கிளிக் செய்தாலும் ஆந்த பிரிவுக்கான தனிப்பக்கம் வந்து நிற்கிறது.அந்த பக்கத்தில் மீண்டும் அழகான புகைப்படங்களோடு தொடர்புடை சொற்களுக்கான விளக்கம் இடம் பெறுகின்றன.அந்த சொற்களை கிளிக் செய்தால் அவை ஒவ்வொன்றுக்கான தனிப்பக்கங்கள் தோன்றுகின்றன.
பிரதானமாக ஆங்கில் மொழி சொற்களுக்கான அகராதி என்றாலும் ஆங்கிலத்தில் இருந்து டச்சு,பிரெஞ்சு,இத்தாலி,ஜெர்மன்,ஜப்பான்,போர்ச்சுகிசிய மொழி ஆகிய மொழிகளுக்கான அர்த்தங்களையும் பார்க்கும் வசதி இருக்கிறது.
அப்படியே கீழே வந்தால் சிறுவர்களுக்கான பாதுக்காப்பான இணைய பயண்பாடு பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் கீழே வந்தால் அகராதியை வகுப்பில் பயன்படுத்துவதற்கான பயிற்சி குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.வார்த்தைகளை படிப்பதற்கு வசதியாக வரைபடமாகவும் அச்சிட்டு கொள்ளும் வசதியும் உள்ளது.
மேலும் பல பயனுள்ள அம்சங்கள் இந்த தளத்தில் இருக்கின்றன.வழக்கமான இணைய அகராதியை பயன்படுத்துவதை விட சிறுவர்களுக்காக என்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அகராதி உங்களுக்கு நிச்சயம் ஏற்றதாக இருக்கும்.
அப்படியே இந்த தளத்தின் தாய் தளமான என்சேன்டட் லேனிங் டாட் காம் தளத்தை கிளிக் செய்து பார்த்தீர்கள் என்றால் இன்னும் ஏராளமான அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.enchantedlearning.com/Dictionary.html