இணையதளங்களில் நன்கொடை தளங்கள் என்று ஒரு வகை இருக்கிறது.நன்கொடை அளிப்பதை ஊக்குவிப்பதையும் அதற்கான வழியையும் ஏற்படுத்தி தருவது தான் இந்த தளங்களின் நோக்கம். அதாவது, தளத்திற்கு வந்தோமா,உதவுவதற்கான காரணத்தை தேர்வு செய்தோமா,ஒரு சில அல்ல சில நூறு டாலர்களை தந்தோமா( இந்த தளங்கள் பெரும்பாலும் சர்வதேச நோக்கிலானவ),நல்லதொரு காரியத்திற்கு நம்மால் இயன்ற உதவியை செய்தோமா என்று நடையை கட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தளங்கள் இவை.
இந்த தளங்களின் சிறப்பம்சம்,நன்கொடை அளிக்கும் போது ஏற்படக்கூடிய குழப்பங்களையும் தயக்கங்களையும் சந்தேகங்களையும் போக்கி தெளிவான மனநிலையில் நிம்மதியாக நிதி அளிக்க வைப்பது.
இதற்கான விளக்கம் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. உலகில் எல்லோரும் நல்லவரே.எல்லோரும் கொடைவள்ளலே.கையில் இருப்பதை எல்லாம் வாரிக்கொடுத்து விட்டாலும்,நல்ல நோக்கத்திற்காக தன்னால் இயன்றதை கொடுக்கும் எண்ணம் எல்லோருக்குமே உண்டு.
ஆனால் நல்ல நோக்கம் என்று எப்படி தெரிந்து கொள்வது என்பது பல நேரங்களில் பிரச்ச்னையாக இருக்கிறது.உதவி கேட்டு வருபவர்கள் எல்லாம் உண்மையிலேயே கை தூக்கிவிடப்பட வேண்டியவர்கள் என்று எப்படி நம்புவது? போலிகள் இருந்தால் என்ன செய்வது? மோசடி நிதி நிறுவனங்கள் போல மோசடி நன்கொடை நிறுவனங்கள் இருக்கின்றனவே, இப்படி பல தயக்கங்களும் சந்தேகங்களும் எழலாம்.
இந்த கேள்விகளே வேண்டாம், இங்கு பட்டியலிடப்பட்டவை எல்லாம் உண்மையிலேயே உதவி தேவைப்படும் தனி நபர்கள் மற்ரும் சேவை அமைப்புகள் தான் என்ற நம்பிக்கையை நன்கொடை தளங்கள் ஏற்படுத்தி தருகின்றன.ஆகவே இந்த தளங்களில் உதவ தேவையான காரணங்களை கண்டறிந்து கண்ணை மூடிக்கொண்டு உதவலாம்.
அதோடு பலரும் தருவதற்கு தயாராக இருப்பார்கள்.ஆனால் எந்த நோக்கத்திற்கு தருவது என்பது பற்றி தெளிவில்லாமல் இருக்கலாம்.அதற்கும் இந்த தளங்கள் விடை அளிக்கிறது.இவற்றில் உள்ள கோரிக்கைகள் தாராள மனம் கொண்டவர்கள் நன்கொடை அளிப்பதற்கான தூண்டுகோளாக அமையும்.
இப்படி உதவ காத்திருப்பவர்களுக்கும் உதவி நாடு காத்திருப்பவர்களுக்கும் பாலமாக செயல்படும் தளங்கள் இவை.
இந்த வகை தளங்களில் புதிய வரவு,கிவ்வீ.காம்.( https://www.givey.com/) .
கொடுப்பதை எளிதானதாக,சுவாரஸ்யமானதாக ஆக்குவதே எங்கள் நோக்கம் என்கிறது இந்த தளம்.அதோடு சமூக நோக்கிலானதாகவும் மாற்றித்திருகிறது.
மற்ற நன்கொடை தளங்கள் போல தான் நாங்களும் ஆனால் அழகிய வேறுபாடு இருப்பதாக இந்த தளம் பெருமிதம் கொள்கிறது.அதாவது மற்ற நன்கொடை தளம் போலவே இதிலும் , உதவி தேவைப்படும் செயல்களுக்கு உங்களால் இயன்ற நன்கொடையை அளிக்கலாம்.இது ஒரு பகுதி தான்.
இதை தாண்டியும் செல்லலாம். அதாவது இந்த தளத்தின் நன்கொடை திரட்டும் மேடையை நீங்கள் உங்கள் விருப்பபடியும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கேற்ப இதன் தொழில்நுட்ப வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதை கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான வகையில் நிதிதிரட்டும் பக்கத்தை அமைத்து கொள்ளலாம். அந்த பக்கத்தில் நிது தேவைப்பட்டும் செயல், அதற்கு உதவுவதற்கான காரணம், உதவும் வழி ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்த பக்கத்தை இக்கால வழக்கப்படி பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு நிதி திரட்டலாம்.
இந்த வசதியை எப்படி பயன்படுத்தி கொள்வது என்பது அவரவர் தேவை மற்றும் விருப்பம் சார்ந்தது.
நன்கொடை கேட்க இணையமேடை அமைக்க இயலாதவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆக,சென்று பாருங்கள்.உதவுங்கள்.
இணையதள
முகவரி;https://www.givey.com/

0 Comments on “நிதியுதவி அளிக்க அழைக்கும் இணையதளம்.”
Krishnapranav Moorthy
ஒவ்வொரு உங்கள் பதிவும், மற்றொருவர்க்கு பயன் பட வேண்டும் என்பதில் நீங்கள் எப்போதுமே அக்கறை உள்ளவர் என்பது சந்தோசமான விசயம் .வாழ்த்துகள் .
cybersimman
tanks