ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன.
இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு கேட்கப்படும் போது தேடி எடுத்து தரும் பணியை ஆர்ச்சி செய்தது.ஆர்ச்சி உருவாக்கப்படும் முன் வரை, இணையத்தில் உள்ள கோப்புகளை பற்றி யாரேனும் சொன்னால் மட்டுமே அவற்றை தேடி எடுக்க முடியும்.
ஆர்ச்சி ஆரம்ப கால தேடியந்திரம் என்றாலும் அதில் பல்வேறு மேம்பட்ட வசதிகளும் இருந்தன.ஆர்ச்சி தேடியந்திர காலத்தில் தேடல் எப்படி இருந்தது என விவரிக்கும் சுவார்ஸ்யமான கட்டுரை மேக் யூஸ் ஆப் வலைப்பதிவில் வெளியாகி உள்ளது.
ஆர்ச்சி வரலாற்றில் காணாமல் போய்விட்டாலும் அதன் மாதிரியை போலந்து பல்கலையில் இன்னும் வைத்துள்ளர்.இப்போதும் அங்கு ஆர்ச்சியில் தேடலாம்.
குறிப்பு:அல்டாவிஸ்டா மூடப்படும் அறிவிப்பின் நினைவலையால இதனை எழுதியுள்ளேன். ஆர்ச்சி தேடியந்திரத்தை உருவாக்கியவர் பற்றி நான் ஏன் குறிப்பிடவில்லை என நீங்கள் நினக்கலாம். அதற்கு ஒரு காரணம் உள்ளது. ஆர்ச்சியை உருவாக்கியவர் பற்றிய பதிவில் அதை எதிர்பாருங்கள்.