தயாராகிறது சைபர்சிம்மன் கையேடு- 2

இந்த வலைப்பதிவின் சிறந்த பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடும் எனது விருப்பம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவுக்கு பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவித்து ஊக்குவித்தவர்களுக்கு என் நன்றிகள். சிலர் நல்ல யோசனைகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்த தொகுப்பின் நோக்கம் நான் பதிவு செய்த மிகச்சிறந்த இணையதளங்கள்,இணைய போக்குகள் ,இணைய நிகழ்வுகள் மற்றும் இணைய மனிதர்களை தொகுத்து ஒரு சேர படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே. இந்த பதிவுகள் ஒரு விதத்தில் இணையத்தை பயன்படுத்தும் வழிகாட்டியாக விளங்கலாம்.அதாவது ,இணையம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டும் பதிவுகள் வாயிலாக அறியலாம் என்பது என் நம்பிக்கை.

மேலும் துவக்கத்தில் இருந்தே எப்போதும் படிக்க கூடிய விஷ‌யங்களையே தேடி பதிவிட்டிருக்கிறேன். இதன் காரணமகாவே பெரும்பாலும் இணைய செய்திகளை தவிர்த்து வந்திருக்கிறேன்.எனவே இந்த தொகுப்பு இப்போதும் பொருந்தக்கூடிய பதிவுகளை கொன்டிருக்கும் என நம்புகிறேன்.

அது மட்டும்  அல்லாமல் ஏற்கன்வே எழுதப்பட்டவற்றின் வெறும் தொகுப்பாக இல்லாமல், அவற்றை உரிய முறையில் அப்டேட் செய்து, கூடுதல் தகவலகளோடு சேர்க்க திட்டமிட்டுள்ளேன். அதிலும் குறிப்பாக என சிறந்த நண்பரும் பத்திரிகையாளருமான ஒருவரால் எடிட் செய்யப்பட்டு இது உருவாக உள்ளது.

பதிவுகளை தேர்வு செய்யும் பணியை துவக்கியுள்ளேன். நீங்களும் உதவலாம்.இயன்றால், தளத்தில் பின்னோக்கி சென்று உங்களை கவர்ந்த பதிவுகளை சுட்டிக்காட்டுங்கள்.

உங்கள் ஆதரவுடனும் ,ஆலோசனை பங்களிப்போடும் இந்த புத்தகம உருவாகிறது.

மிக்க நன்றி.

அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

8 Comments on “தயாராகிறது சைபர்சிம்மன் கையேடு- 2

  1. நண்பருக்கு ,
    அனைத்துப்பதிவுகளுமே வைரம் தான், பதிவுகளின் நீளத்தை குறைத்து அதன் முக்கிய சாரம்சங்களை மட்டும் எடுத்து 10 அல்லது 15 வரிக்குள் முடித்தால் சிறப்பாக இருக்கும் அத்துடன், வகைகளாக பிரித்துவிடலாம் , குழந்தைகள் பகுதி , பொழுதுபோக்கு பகுதி , வணிகம் , விளையாட்டு , கல்வி , வேலைவாய்ப்பு ,இன்னும்…

    Reply
    1. cybersimman

      நலமா நண்பரே. மிகவும் பயனுள்ள யோசனை. வகைகளை குறிப்பிட்டதற்கு நன்றி. தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் .வேறு யோசனைகள் இருப்பினும் கூறவும்.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  2. sir.
    i am extremely happy , your each posting is highly valuable— if it is made in a complete book format, it would be better —

    thank you sir

    Reply
    1. cybersimman

      thanks for kind words

      Reply
  3. manohar

    1. cybersimman

      thanks. keep in touch

      Reply
  4. Guna

    அரியவைகளை பலர் அறிய சீரிய முறையில் சிறப்பானதாய் தனது பதிவுகளில் தனித்துவ முத்திரை பதித்து வரும் சிம்மனின் நோக்கமும் நம்பிக்கையும்
    பலரது எண்ணத் தேடல்களையும் தேவைகளையும்
    பூர்த்திசெய்யும் என்பதில் ஐயமில்லை.
    வாழ்த்துக்கள்..

    Reply
    1. cybersimman

      ஊக்கம் தரும் வார்த்தைகள் .மிக்க நன்றி நண்பரே. இணையத்தின் மிகச்சிற்ந்த அம்சங்களை அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். தொகுப்பும் அத்தகைஅ முயற்சியே. தங்களைப்போன்ற இணைய நண்பர்கள் தரும் ஊக்கம் தான் அன்னை இயக்குகிறது.

      தொகுப்பின் முன்னேற்றம் பற்றி அவப்போது குறிப்பிடுகிறேன்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *